ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சுவையான பிரிஞ்சால் மசாலா!!!

சுவையான பிரிஞ்சால் மசாலா!!!

கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து உள்ளது. இதில் உள்ள நீர் சத்து சருமத்தினை மென்மையாக வைத்து கொள்வதற்க்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி, இருமலை குறைக்க கூடிய மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது.மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சத்தினை சமப்படுத்தவும் இது உதவுகிறது.

இதில் உள்ள போட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பிஞ்சு கத்திரிகாயை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும் மூளை செல்களை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இது உதவுகிறது.
தேவையானவை:

கத்திரிக்காய் - கால் கிலோ
வறுத்த வேர்க்கடலை - 20 கிராம்
வெள்ளை எள் - 10 கிராம்
உலர் தேங்காய்த்தூள்  - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய் - 50 மில்லி
புளி விழுது - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், புளி விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். உலர் தேங்காய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலையை விழுதாக அரைத்துக் கொதிக்கும் கலவையில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
Thanks TIME PASS NEWS

புதன், 25 ஏப்ரல், 2018

வெயிலை சமாளிக்க சும்மா ஜில்லுன்னு சாப்பிடுங்க பாஸ்...

வெயிலை சமாளிக்க சும்மா ஜில்லுன்னு சாப்பிடுங்க பாஸ்...

 
             வாங்க இந்த வெயிலை சமாளிக்க எந்த மாதிரி உணவுகளை எடுத்து கொண்டால் உடலை பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.
    பொதுவாக கோடை கலத்திற்கு ஏற்ற உணவு எலியதக இருக்க வேண்டும்.அதிலும் சைவ உணவு அரை வயிருக்குதன் சாப்பிட வேண்டும்.
மேலும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது நமது உடலின் வெப்ப நிலையை அதிகரித்து விடும்.
மேலும் அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதில் தோன்றி உணவு பொருளை விசதன்மையாக  மாற்றி விடும்.இந்த உணவை உண்ணும் போது வாந்தி மயக்கம் ஏற்படும்.சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும்.
இதனால் இந்த மாதிரி உணவு வகைகளை குறைத்து கொள்வது நல்லது.மேலும் கார உணவுகளையும் எண்ணையில் வதக்கிய உணவு பொருள்களையும் தவிர்ப்பது நல்லது.இவை சருமர்த்ககு தொல்லை தரும்.அது மட்டுமின்றி அஜீரண கோளாறு களையும் ஏற்படுத்தும்.

சிலர் தானிய வகைகளை


எடுத்துக்கொள்வர்,அவ்வாறு உட்கொள்பவர்கள் இந்த வெயில் காலத்தில் மட்டும் கேழ்வரகை குறைத்து கம்பு போன்ற தானியங்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
கீரைகள் நல்லது

உடாளுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாறு மற்றும் வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது.அது உடலில் உள்ள நீர் நன்கு அனைத்து பாகங்களுக்கும் பிரிந்து செல்ல உதவும்.
    மேலும் நாம் தினமும் பருகும் நீரின் அலவை விட சற்று அதிகமா பருக வேண்டும்,இளநீர்,நீர் மோர்,நீர்சத்துள்ள பழ வகைகளை அதிகம் எடுத்து கொண்டு நாமும் நமது உடலை பாதுகாப்போம் நண்பர்களே.......... Thanks Tamil health tips 

பழைய உணவு... வேண்டாமே ப்ளீஸ்! அதென்ன ஃபிரிட்ஜா, குப்பைத்தொட்டியா?

பழைய உணவு... வேண்டாமே ப்ளீஸ்! அதென்ன ஃபிரிட்ஜா, குப்பைத்தொட்டியா?


டாக்டர் விக்ரம்குமார்
ஆற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். இதன் காரணமாக உடல்நலத்தைக் குறித்து வைத்துத் தாக்குவதற்கு, கிருமிகளின் பெரும்படையுடன் நோய்கள் ஆயத்தமாகிவிடுகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக, மீதமான பழைய உணவு குளிர்பதனப் பெட்டிக்குள்ளும், பிறகு நம் இரைப்பைக்குள்ளும்தான் அடிக்கடி தஞ்சமடைகிறது. ஆழ்ந்து யோசித்தால், மீந்த உணவுப் பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கழனிப் பானையாக நம் இரைப்பை மாறியிருப்பதை உணரலாம்.
அமுதெனினும் வேண்டாம்
நோய் நம்மை நெருங்காமல் இருக்க, ’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது சித்த மருத்துவர் தேரையரின் கூற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாக கூறப்படும் ‘திரிகடுகம்’ எனும் நூலும், பழைய உணவை சாப்பிடாமல், நாள்தோறும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
பணிச் சுமை, நேரமின்மை, அவசர வாழ்க்கை என செயற்கை காரணங்களுக்காக நேற்றைய உணவை பத்திரமாகப் பாதுகாத்து இன்று சாப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பழக்கம் தொடரும்போது வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, தோல் நோய், வாந்தி என பல்வேறு நோய்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுதுளி பெருவெள்ளமாய், நஞ்சானது நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாளடைவில் பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும்.
மாறுபடும் இயற்கைத் தன்மை
‘நேற்றைய உணவை இன்று சூடேற்றித்தானே சாப்பிடுகிறோம், அதில் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடுகின்றன, வேறு என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என்பதே பெரும்பாலோரின் கேள்வி. ஆனால், பாதிப்பு உறுதியாக இருக்கிறது என்பதே இதற்கு பதில். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நோய் தீர்க்கும் குணம் உண்டு. ஒரு உணவுப் பொருளின் சுவை, தன்மை, ஆயுட்காலம், சமைக்கப்படும் முறை, செரிமானத்துக்கு பின், அதில் உண்டாகும் மாறுபாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, அதன் நோய் போக்கும் தன்மை அமையும்.
அதிகமாகச் சூடேற்றி அல்லது குளிர்மைப்படுத்தி, ஒரு உணவுப் பொருளை அதன் இயற்கை தன்மையிலிருந்து மாற்றும்போது, அதன் நோய் தீர்க்கும் பண்பும் மாறுபட்டு, நோய் உண்டாக்கும் காரணியாகிவிடும். அரிசியை அதிகக் கொதியில் சமைக்கும்போது குழைந்தோ, நசிந்தோ இயற்கை குணத்திலிருந்து மாறுபடுகிறது. அதைப்போல, ஒரு உணவை ஒரு முறை சமைத்து மறுநாள் சூடேற்றும்போது, உணவின் இயற்கைத் தன்மை மாறுபடும். அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழிந்துவிடுமா என்றால், அதுவும் இல்லை.
பதப்படுத்தப்பட்ட உணவு
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் காரணமாக காலையில் சமைத்த சில வகை உணவு, அடுத்த வேளையே கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதை மறுநாள்வரை வைத்திருந்து சாப்பிடுவது உகந்ததல்ல. குளிர்பதன வசதி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை (Canned and Tinned foods) முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தினமும் கிடைக்கும் கீரை, காய்களால் தயாரிக்கப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் நஞ்சு உண்டாவதற்கான சாத்தியம் மிக அதிகம். ’சில நிமிடங்களில் ரெடி’ என விளம்பரப்படுத்தப்படும் சிற்றுண்டி வகைகளையும், அடைக்கப்பட்ட ’ரெடிமேட்’ சூப் ரகங்களையும் சாப்பிடும்போது உடலில் அடிக்கடி விஷ உணவு அறிகுறிகள் உண்டாவது கவனத்துக்குரியது.
விபரீதமாகும் பழைய அசைவம்
சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.
மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் (Mycotoxins), பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம். பழைய மீன் குழம்பு சுவையானது என்பதற்காக, ஒருவாரம்வரை வைத்திருந்துப் பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.
தேவையின்போது மட்டும்
வாரம் ஒரு முறையாவது உணவகங்களில் சாப்பிடப் பழகிவிட்ட மேல்தட்டுக் குடும்பங்கள், சுகாதாரமான மற்றும் நம்பகமான உணவகங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இருக்கும்போது மட்டும் உணவகங்களை நாடிச் செல்வது உசிதம். பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே போதுமான அளவு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. வீட்டிலேயே சமைக்கப்படும் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்கின்றன, அவற்றின் பயன்கள் என்ன என்பதை உணர்ந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றன உளவியல் ஆய்வுகள். இதுவே நமது உணவுக் கலாசாரத்தின் பெருமை. அதை விடுத்து உணவகங்களில் சாப்பிடும் உணவில் என்ன கூறுகள் சேர்கின்றன என்பது தெரியாமல், வயிற்றுக்குள் அனுப்புவது திருப்திகரமான, முழுமையான உணவாக மாறாது.
நோய்களின் தொடக்கப் புள்ளி
சமைத்து பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து பின்பு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவு, வயிற்றில் ஆமத்தை உண்டாக்கி பலவித நோய்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது சித்த மருத்துவம். பழைய உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது, செரிமான ஆற்றல் பாதிக்கப்படும். உணவைச் செரிப்பதற்கு தேவையான செரிமான அக்கினி (Digestive fire), கெட்டுப் போன உணவில் விஷமாக்கினியாக மாறாமல் இருக்க, தினமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
நசிந்த பழைய உணவை உட்கொள்ளும்போது, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால் விஷ உணவின் அறிகுறிகளான (Food poisoning) வாந்தி, சுரம், பேதி, மயக்கம் போன்றவை உண்டாகும்.
சேமிப்புக் கிடங்கு அல்ல
அறிவியல் வளர்ச்சியான குளிர்பதனப் பெட்டியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதையே உணவின் சேமிப்புக் கிடங்காக நெடு நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை.
சாப்பிடத் தகுந்த ஒரே பழைய உணவு எதுவென்றால், இரவில் சாதத்தோடு நீர் சேர்த்து, மறுநாள் காலையில் நலம் பயக்கும் பாக்டீரியாவுடன் உண்ணத் தயாராக இருக்கும் ’நீராகாரம்’ மட்டுமே. தேவைக்குப் போக மீந்த உணவை குளிர் பதனப் பெட்டியில் அடைத்து வைக்காமல், பசியால் வாடுபவர்களுக்கு அன்றே தானம் செய்யலாம். அதிகளவில் மீந்த உணவைப் பெற்றுக்கொள்ள நிறைய தொண்டு நிறுவனங்களும் உள்ளன.
ஆயுட்கால நிர்ணயம்
கம்பு, சோளம், நெல் வகைகள் போன்ற மூலப்பொருட்களை பதனப்படுத்தும் முறைகள் நம் பாரம்பரியத்தில் அதிகம். ஆனால் சமைக்கப்பட்ட உணவை நீண்ட நாட்கள் பதனப்படுத்திப் பயன்படுத்துவது, நமது பாரம்பரிய உணவு முறைக்கு எதிரானதே. நாம் சாப்பிடும் உணவின் ஆயுட்காலத்தை தரநிர்ணயம் செய்தால், உணவு நமது ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்யும். வயிற்றின் மென்தசைகளுக்கும், அதன் செரிமானச் சுரப்புகளுக்கும் கெட்டுப் போன கழிவு உணவுக்குப் பதிலாக, புதிதாகச் சமைத்த உணவைப் பரிசளித்தால் உடல்நலமும் புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறும். Thanks Kamadenu

கார்ன் ஃபிளவர் ஹல்வா ரெசி

கார்ன் ஃபிளவர் ஹல்வா ரெசி

இந்த அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவைசாபிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும் விஷேசங்களின்போது செய்ய ஒரு எளிய மற்றும் சுவையான அல்வா.
இதே மாதிரி பல வகையான அல்வா இருக்கிறது. மற்ற இனிப்பு வகைகளை விட இந்த அல்வா தயாரிக்கும்போது மட்டும் பொறுமை மற்றும் பக்குவம் மிகவும் அதிகமாக வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் இந்த அவசர உலகத்தில் பொறுமையும், பக்குவத்தையும் யாரும் கடைப்பிடிபதே இல்லை. அனால் அல்வா சாப்பிடும் ஆசை எல்லாருக்கும் உள்ளது. 
தேவையான பொருட்கள்
சோள மாவு – அரை கப்
சர்க்கரை – ஒன்றை கப்
தண்ணீர் – இரண்டு கப்
ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
நெய் – மூன்று டீஸ்பூன்
முந்திரி – பத்து

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பின், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
பின், ஜெல்லி பதம்வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். Thanks TIME PASS NEWS

இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்...

இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்...

இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது.

இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு.

ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம். 
வயிற்றுப்போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம்.
பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம். 
வயிற்றுக்கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம். 
கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.

கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்... 
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும் சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு நல்லது கோதுமை, சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்  தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதேபோல சிறுதானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம்.
ஆக, இடியாப்பம் நல்லது.  வெளியில் வாங்கும்போது இது சுத்தமானதுதானா, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது தெரியாது. ஒருமுறை கற்றுக்கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம்ஆரோக்கியம் காக்கலாம்!

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி...

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி...

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணிதற்போது நாம் பயன்படுத்தும் அரிசியின் மூலம் செய்யப்படும் இட்லி, தோசை, ஆப்பம், முறுக்கு உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளையும் பாரம்பர்ய அரிசியிலும் தயாரிக்கலாம். இதில் சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி சுவையும் கூடும் சத்துள்ளதாகவும் இருக்கும்.  
தேவையான அளவு
  • சிக்கன் -அரை கிலோ
  • சீரக சம்பா அரிசி -1 கப்
  • பெரிய வெங்காயம்-1
  • தக்காளி -1
  • கொத்தமல்லி தழை -1 கப்
  • பச்சை மிளகாய் -2
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • மல்லி தூள் -2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
  • பட்டை -2
  • கிராம்பு -2
  • ஏலக்காய் -2
  • பிரியாணி இலை-1
செய்யும் முறை
முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய் தூள்,மல்லி தூள்,தயிர்,இஞ்சி,பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் உற வைத்துக் கொள்ளவும்.
 
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து இறக்கவும்.சிக்கன் பிரியாணி ரெடி. குறிப்பு சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசி வைத்தால் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகம் தண்ணீர் ஊற்றினால் சாதம் குழைந்து விடும். Thanks TIME PASS NEWS

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி..

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி..

 கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான். ஒரு சரியான ஸ்டார்டர் அல்லது ஒரு பெரிய மாலை தேநீர் நேரம் சிற்றுண்டி, இந்த வெட்டு செய்ய எளிதாக மற்றும் ருசியானஉருளைக்கிழங்கு கட்லெட் 
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4கீரை
இலைகள் - 200 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டிகோதுமை மாவு - 100 கிராம்கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டிகம்மின் தூள் - 1 தேக்கரண்டிவெங்காயம் - 2,
இறுதியாக
வெட்டப்பட்டதுகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டிப்ரெட்க்ரம்ப்ஸ் - 1 1/2 கப்கொத்தமல்லி இலைகள் - பழுப்பு, நறுக்கப்பட்டசுவைக்கு உப்பு உப்புவறுக்கவும் தேவையான

எண்ணெய்செய்முறை
கொதிக்க, தலாம் மற்றும் தேங்காய் உருளைக்கிழங்கு.இறுதியாக கீரை வெட்டவும், உருளைக்கிழங்கிற்கு சேர்க்கவும்.வெங்காயம், கொத்தமல்லி இலை, மிளகு தூள், சீரகம் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து.
1 தேக்கரண்டி பிரட்தூள்களில் நனைத்து மீண்டும் கலக்கவும். சிறிய-நடுத்தரபந்துகளை உருவாக்கவும் தேவையான வடிவங்களின் வெட்டுக்களுக்கு அவற்றை வடிவமைக்கவும் ஒதுக்கி வைக்கவும். கோதுமை மாவுக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும். மெதுவாக பேஸ்ட் உள்ள துண்டுகளாக்கி ரோல் மற்றும் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு. நடுத்த சுழற்சியில் ஒரு ஆழமான வறுக்கவும். தங்க பழுப்பு வரை தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வறுக்கவும். அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி உடன் சூடாக பரிமாறவும். Thanks TIME PASS NEWS

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

சுவையான மசாலா இடியாப்பம்!!!

சுவையான மசாலா இடியாப்பம்!!! 

 
பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இங்கு இடியாப்பத்தைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு ரெசிபி செய்யலாம். இந்த ரெசிபிக்கு மசாலா இடியாப்பம் என்று பெயர். மேலும் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம். ஏனெனில் மசாலா இடியாப்பமானது மிகவும் ஈஸியாக இருக்கும். இங்கு அந்த ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையானபொருட்கள்:
  இடியாப்பம் - 1 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) புதினா - சிறிது மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.   பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் அதிலல் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், மசாலா இடியாப்பம் ரெடி!!! Thanks TIME PASS NEWS