குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் கோதுமை டைமண்ட்
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்
வெண்ணெய் (அ) எண்ணெய் - 2டீஸ்பூன்
உப்பு - போதுமான அளவு
செய்யும் வழிமுறை :
மேல் கூறப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து 15 நிமிடம் வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்தி வடிவில் திரட்டி Dimond வடிவில் வெட்டிக்கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் வெட்டி வைத்ததை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
சுவையான கோதுமை டைமன்ட் ரெடி குடும்பத்துடன் சுவைத்து சாப்பிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக