காரசாரமான மதுரை ஸ்பெஷல் மட்டன் மிளகு கிரேவி பாரம்பரிய சுவையில்

தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி, இஞ்சி பூண்டு விழுது, பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, சின்ன வெங்காயம், நல்லெண்ணெய். செய்முறை: குக்கரில் ஆட்டுக்கறி, இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து ஐந்து விசில் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, அரைக் கரண்டி மிளகாய் தூள்,ஒரு கரண்டி மல்லி தூள், மஞ்சள் தூள், நான்கு கரண்டி மிளகு தூள், நறுக்கிய மூன்று தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் வேக வைத்த ஆட்டுக்கறி, மல்லி இலைகளை சேர்த்து கெட்டியாக வற்றும் வரை நன்றாக கிளறி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக