சனி, 28 செப்டம்பர், 2019

30 (முப்பது) வகை போண்டா



30 (முப்பது) வகை போண்டா

 *வெஜிடபிள் போண்டா*

தேவையானவை:

(மேல் மாவுக்கு) கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு 1, கேரட் 1, பீன்ஸ் 4, பட்டாணி ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

 *தவலை வடை*

தேவையானவை:

பச்சரிசி அரை கப், கடலைப்பருப்பு அரை கப், பாசிப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு அரை கப், ஜவ்வரிசி ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது கால் கப், காய்ந்த மிளகாய் 6, துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.

 *மைசூர் போண்டா*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, மிளகு 2 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

 *மசால் வடை*

தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப், சின்ன வெங்காயம் அரை கப், புதினா சிறிது, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 2 பல், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 1, சோம்பு அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் தலா 2.

செய்முறை:

பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

 *மெது போண்டா*

தேவையானவை:

கடலை மாவு 1 கப், டால்டா 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6, ஆப்ப சோடா கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

 *கீரை வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை 1 கட்டு, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.

 *மங்களூர் போண்டா*

தேவையானவை:

மைதா மாவு 1 கப், சற்று புளித்த தயிர் அரை கப், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

 *பொட்டுக்கடலை வடை*

தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப், பச்சரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

 *தாளிச்ச போண்டா*

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், பச்சரிசி 1 கப், உளுத்தம்பருப்பு முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.

 *கல்கண்டு வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி கால் கப், கல்கண்டு ஒன்றேகால் கப், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

 *கார்ன் போண்டா*

தேவையானவை:

சோளம் 2, மைதா 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசியான, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.

 *புதினா- மல்லி வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு முக்கால் கப், கடலைப்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், புதினா அரை கட்டு, மல்லித்தழை அரை கட்டு, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.

பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை:

பாசிப்பருப்பு 1 கப், துருவிய சுரைக்காய் அரை கப், துருவிய இஞ்சி 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.

 *ஜீரா வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், சர்க்கரை 1 கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.

 *கேசரி போண்டா*

தேவையானவை:

(கேசரிக்கு) ரவை அரை கப், சர்க்கரை 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் சிறிது. (மேல் மாவுக்கு) மைதா ஒன்றரை கப், பால் அரை கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

 *புளிப்பு கார வடை*

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8, புளி சிறிய உருண்டை, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய்
தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

 *மெதுவடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வடித்த சாதம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

 *உருளைக்கிழங்கு போண்டா*

தேவையானவை:

கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) 1 சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.
பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

 *ஸ்பெஷல் வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வெங்காயம் அரை கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

 *கலவை பருப்பு வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு கால் கப், பச்சரிசி 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 *வெங்காய வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) அரை கப், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

 *ஜவ்வரிசி போண்டா*

தேவையானவை:

ஜவ்வரிசி 1 கப், நன்கு புளித்த தயிர் 1 கப், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், பொரித்த கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

 *கார போண்டா*

தேவையானவை:

பச்சரிசி அரை கப், புழுங்கலரிசி அரை கப், துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

 *தயிர்வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், புளிக்காத புது தயிர் 1 கப், பால் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் தேவையான அளவு, கேரட் துருவல் 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன்.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

 *கோஸ்வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

 *ரச வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.
ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் 2 கப், புளித் தண்ணீர் அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
பொடிக்க: மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

 *இனிப்பு போண்டா*

தேவையானவை:

ரவை முக்கால் கப், பச்சரிசி மாவு கால் கப், பொடித்த வெல்லம் 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

 *சாம்பார் வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை கால் கப், எண்ணெய் தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, புளி நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, வெந்தயம் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.
பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.
சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

 *பருப்பு போண்டா*

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பாசிப்பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, பூண்டு 5 பல்.
அரைக்க: சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2.

செய்முறை:

பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

 *இட்லி மாவு போண்டா*

தேவையானவை:

இட்லி மாவு 2 கப், சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, தேங்காய் துருவல் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைபருப்பு 2 டீஸ்பூன்.

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.


வெள்ளி, 27 செப்டம்பர், 2019

30 வகை பொடிகள்...!


30 வகை பொடிகள்...!

அடுக்களையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, 'சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும்... சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. இந்த இணைப்பிதழில் 30 பொடி வகைகளை வாரி வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''ருசியை அள்ளித் தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்... வெந்தயப்பொடி, மூலிகைப் பொடி, கொள்ளுப்பொடி, வேப்பம்பூபொடி, நெல்லிக்காய்ப்பொடி என 'வரும் முன் காக்கும்’ வரப்பிரசாதமாக விளங்கும் பொடிகளையும் இங்கே கொடுத்துள்ளேன். இவற்றை செய்து வைத்து, பல நாட்கள் பயன்படுத்தி, பலன்களை அள்ளுங்கள்'' என பரிவுமிக்க தோழியாய் கூறுகிறார் பத்மா.
----------------------------------------------------------------------------------------------------------------
பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
பூண்டுப்பொடி
தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.
---------------------------------------------------------------------------------------------------------------
தேங்காய்ப்பொடி
தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்... இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: மிளகு, சீரகம் - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு - சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: 'சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
கூட்டுப்பொடி
தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்... சுவை அதிகரிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
ரசப்பொடி
தேவையானவை: தனியா - 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்... மணம், ருசி ஆளை அசத்தும்.
----------------------------------------------------------------------------------------------------------------
எள்ளுப்பொடி
தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.
குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) - 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆவக்காய் ஊறுகாய் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு - தலா 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
அங்காயப் பொடி
தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.
-----------------------------------------------------------------------------------------------------------------
நாரத்தை இலை பொடி
தேவையானவை: நாரத்தை இலை - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
-----------------------------------------------------------------------------------------------------------------
திடீர் புளியோதரைப்பொடி
தேவையானவை: புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்... உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------
வெந்தயப்பொடி
தேவையானவை: வெந்தயம் - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்... உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
வேப்பம்பூபொடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து... பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 250 கிராம், தனியா - 500 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், வெந்தயம், மிளகு - தலா 50 கிராம், மஞ்சள் - 2.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.
-----------------------------------------------------------------------------------------------------------------
நெல்லிக்காய் பொடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்... வைட்டமின் 'சி’, இரும்புச்சத்து மிக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------
கொத்தமல்லிப் பொடி
தேவையானவை: பச்சை கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, புளி - பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு
சேர்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
மூலிகைப்பொடி
தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி - தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.
-----------------------------------------------------------------------------------------------------------------
சுண்டைக்காய்பொடி
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஓமப்பொடி
தேவையானவை: ஓமம் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கொள்ளுப்பொடி
தேவையானவை: கொள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
சட்னி பவுடர்
தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, பொட்டுக்கடலை - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்... உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கீரைப்பொடி
தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.
----------------------------------------------------------------------------------------------------------------
பாயச பவுடர்
தேவையானவை: பிஸ்தா பருப்பு - 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, பால் - தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்... திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி மருந்துப்பொடி
தேவையானவை: கண்டதிப்பிலி - 50 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஓமம் - 50 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி - 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 25 கிராம், வால் மிளகு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சித்தரத்தை - ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.
குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.
ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் - நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து... இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
அடைப்பொடி
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தனியாப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
பஜ்ஜி பவுடர்
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து... விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
வடை பவுடர்
தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு - 250 கிராம், மிளகு - 20, காய்ந்த மிளகாய் - மூன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்...!!!

திங்கள், 23 செப்டம்பர், 2019

திருநெல்வேலி அல்வா


 திருநெல்வேலி அல்வா

தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
ப்ரவுண்  சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - க3 கப்
முந்திரி பருப்பு - சிறிது
நெய் - 2 1/2 கப்

செய்முறை

1.ஒரு கப் கோதுமையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.

2.6 - 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். பிறகு அதை மிக்சியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.

3.மிக்சியில் ஊறிய கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.

4. பிறகு அரைத்ததை சல்லடையில் வடிகட்டவும்.

5.மறுபடி மிக்சியில் கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை அதே பாத்திரத்தில் வடிகட்டவும்.

6.கோதுமை பாலை 3 - 4 மணி நேரம் அசைக்காமல் மூடி வைக்கவும். பிறகு பார்த்தால் மேலே தெளிந்த நீரும் கீழே கொஞ்சம் கட்டியான கோதுமை பாலும் இருக்கும்.

7.ஒரு கரண்டியால் மேலே உள்ள தெளிந்த நீரை மெதுவாக எடுத்து விடவும்.
நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

8.ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கோதுமை பாலை ஊற்றவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொது அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.

9.இப்போது  இருந்தே கிளற ஆரம்பிக்கவும். சூடானதும் அடியில் கட்டி போல் உருவாகும். கிளற கிளற எல்லாம் ஒன்றாக வரும்.

10.பால் கெட்டியானதும் சக்கரையை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நான் ப்ரவுன் சுகர் சேர்த்திருப்பதால் தானாகவே அல்வா கலர் மாறி விடும்.

11.ஒயிட் சுகர் சேர்ப்பதாக இருந்தால் தானாக பிரவுன் கலர் வராது. கலர் வருவதற்கு கீழே உள்ள குறிப்பை பார்க்கவும்.

12.கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

13. மொத்தமாக நெய்யை சேர்க்காமல் கடாயில் அல்வா ஒட்டும் போதும் மட்டும் கொஞ்சம் நெய்யை சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும்.

14.வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.

15. கரண்டியில் ஒட்டாமல் அல்வா கீழே விழும். அது தான் சரியான பதம். அடுப்பில் கோதுமை பாலை வைத்ததிலிருந்து இந்த பதம் வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகும்.

16.அடுப்பை அணைக்கவும். சுவையான அல்வா ரெடி. ரெடியான அல்வாவை ஒரு நெய் தடவிய ட்ரேயில் போட்டு ஆறியதும் கட் செய்து பரிமாறலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

குறிப்புகள்

1.250 கிராம் கோதுமைக்கு அரை கிலோவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அல்வா வரும்.

2.ஒயிட் சுகர் சேர்த்து செய்யும் போது  அல்வாவுக்கு கலர் கிடைப்பதற்க்கு கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

3.புட் கலர் சேர்க்க விரும்பாதவர்கள் சுகரை கேரமல் (caramel) செய்து சேர்த்து கொண்டால் பிரவுன் கலரில் அல்வா வரும்.

4.கேரமல் செய்வதற்கு ஒரு கடாயில் அரை கப் சக்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

5. சிறிது நேரம் கழித்து சக்கரை பாகு பிரவுண் கலராக மாறும். அடுப்பை உடனே அணைத்து விடவும். கேரமல் ரெடி.

6.இதை அல்வா கிண்டும் போது மற்றொரு அடுப்பில் செய்து கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்க்கும் பொது இதையும் சேர்த்து விடுங்கள். பிரவுண்  கலர் அல்வா ரெடி.

7.ப்ரிஜ்ஜில் வைத்து 2 -3 வாரம் வைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொது தேவையான அல்வாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு கிளறி சூடுபடுத்தி பரிமாறவும்.

புதன், 18 செப்டம்பர், 2019

30 வகை சட்னி துவையல்


#30_வகை_சட்னி_துவையல்

''சூடான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்!'' என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள், இந்த எலெக்ட்ரானிக் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருப்தி செய்ய உதவுவதோடு... டிபனுக்கு தொட்டுக்கொள்ள வித்தியாசமான சட்னிகளை வழங்கவும் '30 வகை சட்னி - துவையல் ரெசிபி’கள்...

''சுவையில் அசத்தும் இந்த ரெசிபிகளை... ஜீரண சக்தியை அதிகரிக்கும், நினைவாற்றலை வளர்க்கும், சத்துக்கள்மிக்க பொருட்களையும் சேர்த்து தயாரித்துள்ளேன்'' என்கிறார் உற்சாகம் பொங்க!

குறிப்பு: காரம் குறைவாக இருப்பதை விரும்புபவர்கள், மிளகாயின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம்.

பச்சைப்பயறு துவையல்

தேவையானவை: பச்சைப்பயறு - அரை கப், பூண்டு - ஒரு பல், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

எள் துவையல்

தேவையானவை:
கறுப்பு எள் - அரை கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

எள், இரும்புச்சத்து மிக்கது.

வல்லாரை சட்னி

தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல்,  - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

சீரக துவையல்

தேவையானவை:
சீரகம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: பீர்க்கங்காய் தோல் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலுடன் சேர்க்கலாம்.

வல்லாரை துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப், பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி... வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி... உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

பிரண்டை துவையல்

தேவையானவை: நார் நீக்கி, துண்டுகளாக்கிய பிரண்டை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, புளி - கோலி அளவு, பூண்டு - 2 பல், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து (உப்பு நீங்கலாக) வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பிரண்டை எலும்புக்கு பலம் தரும். பசியின்மை, வாய்க்கசப்பு போக்கும்.

புளி துவையல்

தேவையானவை: புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - கால் கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா மூன்றையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான துவையல் தயார்!

கத்திரி துவையல்

தேவையானவை: பெரிய கத்தரிக்காய் - ஒன்று, புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கத்திரிக்காயின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, தணலில் சுட்டு தோல் உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கி, ஆறியதும் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும் (மையாக அரைக்க வேண்டாம்). நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

பருப்பு துவையல்

தேவையானவை:  கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி... கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து... பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), வெல்லம் - சிறிய துண்டு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன் உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

வேப்பம்பூ, வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

கொள்ளு துவையல்

தேவையானவை: கொள்ளு - அரை கப், பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
சுத்தம் செய்த கொள்ளு, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் (உப்பு தவிர) வெறும் வாணலியில் வறுத்து பின்னர் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்தால்... கொள்ளு துவையல் தயார்.

கொள்ளு, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

வதக்கிய தேங்காய் துவையல்

தேவையானவை:  தேங்காய் துருவல் - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும்.

இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காயை வதக்கி இருப்பதால், பயணத்தின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.

கதம்பத் துவையல்

தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3,  பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைக்கவும்.

கஞ்சி, மோர் சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.

எள் சட்னி

தேவையானவை: வெள்ளை எள் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

இஞ்சி சட்னி

தேவையானவை:
சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.

இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.

பாம்பே சட்னி

தேவையானவை:
பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5, பொட்டுக்கடலை மாவு - மூன்று டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பெரிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பொட்டுக்கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்து வரும்போது, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சௌசௌ சட்னி

தேவையானவை:
சிறிய சௌசௌ, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பச்சை மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சௌசௌ சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

முள்ளங்கி சட்னி

தேவையானவை: முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - விரல் நீளத் துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் முள்ளங்கி, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்களைக் கூட இந்த சட்னி கவரும்.

கேரட் சட்னி

தேவையானவை:
கேரட் - 2, வெங்காயம் - ஒன்று, புளி - கோலி அளவு, பச்சை மிளகாய் - 5, பூண்டு - 2 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

ஆப்பிள் சட்னி

தேவையானவை:
காய் வெட்டாக உள்ள புளிப்பு ஆப்பிள், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலையை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த  சட்னியுடன் சேர்க்கவும்.

முட்டைகோஸ் சட்னி

தேவையானவை:
துருவிய கோஸ் - அரை கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... துருவிய கோஸ், நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

தக்காளி  புதினா சட்னி

தேவையானவை:
தக்காளி - 2, புதினா - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பெரிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம்.

கத்திரி  உருளை சட்னி

தேவையானவை: கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - (சிறியது), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற கத்திரி - உருளை சட்னி ரெடி.

தூதுவளை துவையல்

தேவையானவை:  தூதுவளை இலை - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தூதுவளை இலையை முள் நீக்கி சுத்தம் செய்யவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, தூதுவளை இலையை வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

இது, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட ஏற்றது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். தொண்டைக் கட்டு குணமாகும்.

தனியா சட்னி

தேவையானவை:
தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.

பெரிய நெல்லி சட்னி

தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

கோவைக்காய் சட்னி

தேவையானவை:  கோவைக்காய் - 12, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  கோவைக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

சுரைக்காய் சட்னி

தேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) - கால் கப், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.

நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.

புடலங்காய் சட்னி

தேவையானவை:  புடலங்காய் துண்டுகள் - அரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, புடலங்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்தால்... புடலங்காய் சட்னி ரெடி!

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி


30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி

புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கும் பலர் தங்கள் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பதுண்டு. அப்படிப்பட்ட விசேஷ நாள்களுக்கான சத்தான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹேமா சதீஷ்.

*வத்தக்குழம்பு*

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள் - தலா 3 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, மணத்தக்காளி வற்றல் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: நல்லெண்ணெய் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடியவிடவும்.  கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் குழைக்கவும். இதில்  கருணைக்கிழங்கை சேர்த்துப் பிசிறி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, கருணைக்கிழங்குச் துண்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வறுத்து எடுக்கவும்.

ஈஸி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கிலோ, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன்  வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தேங்காய் இட்லிப் பொடி

தேவையானவை: தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), கடலைப்பருப்பு, உளுந்து - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பொடி இது. நல்லெண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.

பொரிச்ச கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், புடலங்காய் - கால் கிலோ (விதை, நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் புடலங்காய், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு, பருப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும்.

அரிசி இட்லிப் பொடி

தேவையானவை: புழுங்கல் அரிசி, உளுந்து - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் -  5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா), துவரம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், மல்லி (தனியா), துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய் ஒன்று, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடியளவு, கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை (புளி, கடுகு தவிர) வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஆறிய பின் புளி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை - கைப்பிடியளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொள்ளு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை:  சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், கொள்ளு, முருங்கைக்கீரை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது, தேவையான தண்ணீர், சோள மாவுக் கரைசல், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.

அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2 (தட்டவும்), தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: அவலை மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதனுடன் அரைத்த அவல், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பின் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (இட்லி பானையில் / இட்லி குக்கரில் வேகவைக்கலாம்)

கேரட் கீர்

தேவையானவை: கேரட்  - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), காய்ச்சாத பால் - கால் லிட்டர், ஏலக்காய் - 3 (தட்டவும்), முந்திரி - 6, சர்க்கரை - அரை கப்.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: முந்திரியைச் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவிடவும்.  குக்கரில் கேரட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  ஆறியபின் கேரட்டுடன் முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப்,  ஏலக்காய் - 2 (தட்டவும்), முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை:  வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் உடைத்த அவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

கீரை தோசை

தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தோசை மாவு - 2 கப், எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பாலக்கீரையின் நரம்பு நீக்கி கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தோசை மாவிலேயே உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப் படுபவர்கள், மிகவும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

கார்ன்  சுண்டல்

தேவையானவை:  கார்ன் (முழு சோளம்) - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் உதிர்த்த கார்ன் முத்துகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடலை மாவு -  கீரை சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு - 300 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, கீரை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லை க்காயவைத்து திரட்டிய சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

வேர்க்கடலைப் பால் பாயசம்

தேவையானவை: பாசிப் பருப்பு, வெல்லம் -  தலா 150 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துக் குழைவாக வேகவிடவும். மிக்ஸியில் வேர்க்கடலையுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வெந்த பருப்புடன் சேர்த்துச் சூடாக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கோதுமை ரவை - காய்கறி சாதம்

தேவையானவை: கோதுமை ரவை – 500 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவை - 100 கிராம், கேரட், பீன்ஸ் - தலா 150 கிராம், கீரை - சிறிய கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), எலுமிச்சைப் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பருப்பு வகைகளுடன் கேரட், பீன்ஸ், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, கோதுமை ரவைச் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு - காய்கறி கலவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.  இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப்
பரிமாறவும்.

மாவிளக்கு

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்  - 3, உப்பு - ஒரு சிட்டிகை.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.

கொத்தமல்லி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், கொத்தமல்லித்தழை  - 2 கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து கலக்கவும். மேலே வறுத்த கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கீரை - கடலைப்பருப்பு கட்லெட்

தேவையானவை: கடலைப்பருப்பு - 250 கிராம், ஏதாவது ஒருவகை கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), பிரெட் ஸ்லைஸ் -  5 ( மிக்ஸியில் பொடிக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: கடலைப்பருப்புடன் கீரை சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, அரைத்த பிரெட் பொடி, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி கட்லெட் வடிவில் தட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, கட்லெட்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.

புளியோதரை பொடி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எள் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை -  தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எள்ளு சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், எள் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: எள்ளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து காயவைக்கவும். காய்ந்த எள்ளை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிட்டு எடுக்கவும். பிறகு, அதே வாணலியில்  காய்ந்த மிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு, எள்ளுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.  சாதத்துடன் அரைத்த பொடி சேர்த்துக் கிளறினால் எள்ளு சாதம் ரெடி.

வெஜ் சப்ஜி

தேவையானவை: கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி), கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் - குடமிளகாய் பொரியல்

தேவையானவை: வாழைக்காய், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி, வாழைக்காய், குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த பொடி தூவிக் கிளறி இறக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, ஊறவைத்த கடலைப் பருப்பு  - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். குக்கரில் பச்சைப் பயறைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பச்சைப் பயறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

வெள்ளரிக்காய் ஸ்டூ

தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கோதுமை அப்பம்

தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக்   கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு - அரிசி தோசை

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: பச்சைப் பயறு, அரிசியை தனித் தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் களைந்து பச்சைப் பயறு, அரிசி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு மாவாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி
செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். கடைசியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Thanks aval vikatan.

நவராத்திரி ஸ்பெஷல் 30 வகை சுண்டல்


நவராத்திரி ஸ்பெஷல் 30 வகை சுண்டல்

#சுண்டல்!

வழக்கமான நவராத்திரிதான்… வழக்கம் போல சுண்டல்தான்… என்றாலும், ஒவ்வொரு ஆண்டுமே ‘உங்க வீட்டுல என்ன சுண்டல்?’ என்று பரஸ்பரம் கேட்கத் தவறுவதில்லை. இந்தத் தடவை இதே கேள்வி உங்களிடம் வந்துவிழும்போது… ‘ஸ்வீட் கார்ன் சுண்டல், ராஜ்மா கட்டா மிட்டா சுண்டல், பச்சைப்பயறு – பனீர் சுண்டல்…’ என்று நீங்கள் விதம்விதமாக பதில் சொல்லும் அளவுக்கு, இங்கே பலவிதமான சுண்டல்களை செய்து அசத்தியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி.

பீச் சுண்டல்

தேவையானவை:
காய்ந்த பட்டாணி – ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன். இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால்… சுவையான ‘பீச் சுண்டல்’ தயார்!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். சத்தான சுண்டல் ரெடி!

குறிப்பு:
கடலையை வேக வைக்கும்போது சோடா உப்பு சேர்க்கக்  கூடாது. வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டாமல், புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.

கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையானவை:
கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, புதினா – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால்…. மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:
வெள்ளை காராமணி – ஒரு கப், வெல்லம் – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:
பச்சை வேர்க்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு,  உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

மசாலா வாசனை விரும்புபவர்கள்… கரம் மசாலாத்தூள் அல்லது பட்டை, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்ளு சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய கொள்ளு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

மக்காச்சோள சுண்டல்

தேவையானவை:
மக்காச்சோளம் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய், பூண்டு பல் – தலா 2, சோம்பு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து… வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி…கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள்  தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

பூம்பருப்பு சுண்டல்

தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும் ( ஒரு மணி நேரம் ஊற வைத்து செய்வதானால், பாத்திரத்தில் வேக வைக்கவும். பருப்பை குழையாமல் மலர வேக வைக்கவும்). வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூம்பருப்பு சுண்டல் தயார்.

 சோயாபீன்ஸ் சுண்டல்

தேவையானவை:
வெள்ளை சோயா பீன்ஸ் – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

பட்டாணி மசாலா சுண்டல்

தேவையானவை:
காய்ந்த பட்டாணி – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3, பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று, சோம்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:
காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாண  லியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து… புதினா, கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்தப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் தூவி) இறக்கவும்.

பச்சைப்பயறு சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய  பச்சைப்பயறு – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும். வேகவைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தான பச்சைப்பயிறு சுண்டல் ரெடி!

நவதானிய சுண்டல்

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைகட்டியது) – தலா 4 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

அரைக்க:
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, இஞ்சி – சிறிய துண்டு.

செய்முறை: முளைகட்டிய தானியங்கள் அனைத்தையும்  ஒன்றாக சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், நவதானிய சுண்டல் தயார்.

தக்காளி  சோயா பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:
சோயா பீன்ஸ் – ஒரு கப், தக்காளிச் சாறு – கால் கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேக விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!

முளைகட்டிய வெந்தய சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய வெந்தயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெந்தயம், உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் தூவி இறக்கவும்.

சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

ராஜ்மா கட்டா மிட்டா

தேவையானவை:
கறுப்பு ராஜ்மா – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, வெல்லம் – சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து,  குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… புளிப்பும், இனிப்பும் கலந்த கட்டா மிட்டா சுண்டல் ரெடி!.

கோதுமை சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய கோதுமை – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 2,  தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

டயாபடீஸ் உள்ளவர்களுக்கும்  ஏற்ற சுண்டல் இது.

மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு – ஒரு கப், கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்),  வெள்ளரித் துண்டுகள் – கால் கப், வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள் – கால் கப், தக்காளி  – ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),  பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளை கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சத்துகள் மிகுந்த வெஜ் சுண்டல் ரெடி!

கறுப்பு உளுந்து சுண்டல்

தேவையானவை:
கறுப்பு முழு உளுந்து – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து… வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

 ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை:
ஸ்வீட் கார்ன் – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, சோம்பு – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் துருவல் – 3  டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து… வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால்… டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

சாபுதானா சுண்டல்

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப், முளை கட்டிய பச்சைப் பயறு – முக்கால் கப், கீறிய பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கேரட் – ஒன்று (துருவிக் கொளவும்), நெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும். துருவிய கேரட் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

கொண்டைக்கடலை  ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், ஆப்பிள் (சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) – ஒன்று, மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், திராட்சைப்பழம் – 20, வாழைப்பழம் (சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) – ஒன்று, சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய கொண்டைக் கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால்… டேஸ்டி கொண்டைக்கடலை – ப்ரூட் சுண்டல் ரெடி.

இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

 சிவப்பு சோயா சுண்டல்

தேவையானவை:
உரித்த சிவப்பு சோயா பீன்ஸ் – ஒரு கப், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து… இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்துக் கிளறவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

 பட்டர் பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:
உரித்த பட்டர் பீன்ஸ் – ஒரு கப், சோம்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து… வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

சிவப்பு காராமணி சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய சிவப்பு காராமணி – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய காராமணியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் தெளித்து (ஒரு ஸ்பூன் அளவு) நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்க வும்.

சிவப்பு ராஜ்மா சுண்டல்

தேவையானவை:
சிவப்பு ராஜ்மா – ஒரு கப், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 3, தனியா – கால் டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு.

செய்முறை:
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து… வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் செய்து வைத்துள்ள பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

டிரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை – தலா  ஒரு டேபிள்ஸ்பூன்,  தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பேரீச்சை – 10, உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து,  தண்ணீர் தெளித்து, ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

மொச்சை சுண்டல்

தேவையானவை:
மொச்சை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள்  – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:
மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் போட்டு வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

பச்சைப்பயறு  பனீர் சுண்டல்

தேவையானவை:
முளைகட்டிய பச்சைப்பயறு – ஒரு கப், பனீர் துருவல் – முக்கால் கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

 பார்லி  வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:
பார்லி – ஒரு கப், வறுத்த வேர்க்கடலை – அரை கப், சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி துருவல் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, (விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும்.

கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.