தில்லையில் செய்யபடும் திருவாதிரை களி
இந்த திருவாதிரை தரிசனம் என்பது மிக பிரசித்தம் பெற்ற இடம் சிதம்பரம் நடராஜர் கோயில் தான்.
சிதம்பரத்தைதான் தில்லை என்று அன்புடன் கூறுவர்.
இதை தில்லை கோயிலின் பிரசாதம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டு இருந்த வம்சாவளியில் வந்த திரு. சண்முக ஐயர் அவர்களிடம் பெற்றது தான் இந்த தில்லையில் ஆரூத்திரா தரிசனத்திற்கு கிடைக்கும் பிரசாத செயல்முறை ஆகும்.
இதற்கு பசும்பால் மற்றும் உறைந்து போன பசுநெய்யை பயன்படுத்தினால் தான் அசல் சுவை கிடைக்கும்.
நாட்டு சர்க்கரை கிடைக்கவில்லை எனில் மண்டை வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.
ஜனவரி 1 மற்றும் 2 , 2018 ஆம் தேதி இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரூத்திரா தரிசனத்திற்கு உங்கள் இல்லங்களில் இந்த பிரசாதம் படைக்கபடவேண்டும்.
இந்த பிரசாதத்தை உங்கள் வீடுகளில் படைத்து திருவாசகத்தை மனம் உருக பாடினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை.
தேவையான பொருட்கள்
புது பவானி பச்சரிசி 1 கப்
பாசிபருப்பு 2 மேஜைக்கரண்டி
பசும்பால் 4 கப் + 2 கப்
தண்ணீர் 1/2 கப்
மருந்து சேர்க்கபடாத நாட்டுசர்க்கரை 1/2 கப்
ஆவின் பால்கோவா 100 கிராம் + 3 மேஜைக்கரண்டி பசும்பால்
டைமண்ட் கற்கண்டு 2 மேஜைக்கரண்டி
பசுநெய் 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் 1
முந்திரி பருப்பு 14
செய்முறை
1. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான பாத்திரத்துல 4 கப் பசும்பாலை எடுத்து அடுப்புல சிறுதீயிலேயே வைத்து 2 கப்பாக சுண்ட வைக்க வேண்டும்.
2. அதற்கு அடுத்தபடியாக 2 கப் பாலை மற்றுமொரு கெனமான அகன்ற பாத்திரத்துல எடுத்து கொண்டு அடுப்புல சிறுதீயிலேயே வைத்து 1 கப்பாக சுண்ட வைக்க வேண்டும்.
3. அதற்கு பிறகு அரிசியை மிக்ஸியில் சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றிகொள்ள வேண்டும் அதாவது அரிசியை ஒன்றுக்கு இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது பிரஷர் குக்கரில் 1 மேஜைக்கரண்டி பசு நெய்யை ஊற்றி அதில் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதை எடுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
5. இப்பொழுது அந்த காய்ந்த நெய்யில் அதில் பாசிபருப்பு மற்றும் அரிசி குருனையை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக சிறுதீயிலேயே வதக்கவும்.
6. பிறகு அதில் சுண்ட வைத்துள்ள 2 கப் பசும்பாலை பிரஷர் குக்கரில் ஊற்றவும். அதில் தண்ணீரையும் ஊற்றவும். நன்றாக கொதிக்க விட்டுகோங்க பின்னர் பிரஷர் குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சம் மூன்று விசில் விட்டுகோங்க.
7. பிறகு வடச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை சிறையிலேயே வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
8. பிரஷர் குக்கரில் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக பருப்பு மத்தை கொண்டு நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
9. இப்பொழுது மசித்து வைத்துள்ள சுண்ட பாலை ஒரு கப் ஊற்றி நன்றாக பருப்பு மத்தை கொண்டு மசித்து கொள்ளவும்.
10. இப்பொழுது அடுப்பை மறுபடியும் பற்றவைத்து சிறுதீயிலேயே வைத்து விடவும் , அதில் 2 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதில் பொடியாக உள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
11. நாட்டுசர்க்கரை நன்றாக கரைந்து வேகவைத்துள்ள பால் , பருப்பு மற்றும் சாதத்துடன் குலைய குலைய நன்றாக கலந்து கரையுமாறு கிளறவும்.
12. இப்பொழுது மற்றுமொரு இரண்டு மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதனுடன் பொடி செய்யப்பட்ட டைமண்டு கற்கண்டு சேர்த்துகோங்க அடுப்பு சிறுதுயிலேயே வைத்துகோங்க நன்றாக 3-4 நிமிடங்கள் கிளற வேண்டும். கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
13. இப்பொழுது சூடான 3 மேஜைக்கரண்டி பசும்பாலில் ஆவின் பால்கோவை கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
14. கரைத்து வைத்துள்ள பசும்பால் கலந்த பால்கோவாவை பிரஷர் குக்கரில் ஊற்றவும் சில நொடிகள் நன்றாக கிளறவும். பிறகு அதனுடன் மேலும் 2 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி மறுபடியும் நன்றாக கிளறவும்.
15. கடைசியாக 4 மேஜைக்கரண்டி பசுநெய்யை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பை போட்டு நன்றாக கிளற வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக