ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்..


ஆயுர்வேதம்

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்..

*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

*மூளை*

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

*கண்கள்*

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*பற்கள்*

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*நரம்புகள்*

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

*ரத்தம்*

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

*சருமம்*

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

*நுரையீரல் - இதயம்*

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

*வயிறு*

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

*கணையம்*

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.



*கல்லீரல் - மண்ணீரல்*

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.



*மலக்குடல்*

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

*பாதம்*

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

பாதம், விரல் வலி சரியாகும்.

மட்டன் ரோகன் ஜோஷ் / Mutton Rogan Josh


மட்டன் ரோகன் ஜோஷ் / Mutton Rogan Josh

தேவையானவை:
மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி ப்யூரி - அரை கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள், சீரகத் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
தாளிக்க
பட்டை, பிரிஞ்சியிலை, ஏலக்காய், லவங்கம் - தலா 2
எண்ணெய் - 75 மில்லி

செய்முறை:
1.குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

2.அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

3.மட்டன் சேர்த்து வதக்கி விட்டு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 முதல் 8 விசில் வரும் வரை வேக விடவும்.

4.மட்டன் வெந்ததும் திறந்து அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

5.அதனுடன் தக்காளி ப்யூரியை சேர்த்து கொதிக்க விடவும்.

6.எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

7.சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்...???


சாதம் எப்படி சாப்பிட வேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது.

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சிலர் சாம்பார், ரசம்,
வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்
எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள்   1 ஸ்பூன், பெரியவர்கள்   2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக  உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
 புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும்  சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும். இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்.

சனி, 21 அக்டோபர், 2017

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.



நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

திங்கள், 16 அக்டோபர், 2017

இட்லியின் வரலாறு....!



இட்லியின் வரலாறு....!

தமிழனுக்கு சாம்பார் இட்லியும் தெரியும், குஷ்பு இட்லியும் தெரியும். ஆனால் அதன் வரலாறு தெரியாது. உளுந்து எனும் அரிய தானிய வகையின் தாயகம் இந்தியா. குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்பட்டு பிறகு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலும் அதிகம் விளைவிக்கப்படும் பயறு வகையாக இருக்கிறது.

உழுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இணையான மூப்பு கொண்ட பிறமொழி இந்திய இலக்கியங்கள் எதுவும் இல்லாத நிலையில், உழுந்தையும் – அரிசியையும் கொண்டு ஈரமா செய்து இட்லியை கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும். உரலில் இடித்த அரிசிமா கொண்டு, அப்பம், பனையோலை, பூவரசு இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான் என்கிறார் தமிழகத்தின் பண்பாட்டு அதிர்வுகளை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் தோ.பரமசிவன்.

'இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அவர். முதலில் உருண்டை வடிவிலான இட்டலிகளே இருந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் உருண்டை வடிவிலான இட்லிகளின் மேல் பகுதிகள் மென்மையாகவும், நடுப்பகுதி கடினமாகவும் இருக்கக் கண்டு, பிறகு தட்டை வடிவில் அவிக்க தமிழர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க, இன்று இட்லிக்கு பெயர்பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. அதேபோல அரிசி மா இல்லாமல் ரவை மாவில் உளுந்து மா கலந்து செய்யப்படும் ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று புதிது புதிதாக தமிழன் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினாலும் அரிசிமாவும் உழுந்து மாவும் கலந்து அவிக்கப்படும் இட்லியுடன் சாம்பார், தேங்காய் சட்னி, பொடி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி விதவிதமான வகையில் சைடிஸ் உணவுடன் சாப்பிடும் சுவைக்கு பிட்சாவோ, பர்கரோ கூட ஈடாகமுடியாது.

இட்லியில் என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான இட்லியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் தமிழராக இருந்து என்ன பயன்? இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன.

மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடைகொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லியுடன் அவ்வப்போது நீங்கள் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்துக் கொண்டால் இதன்மூலம் லைசின் அமிலம் உடலுக்கு கிடைத்துவிடும். என்றாலும் இரவில் இட்லி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் 200 கிராம் அளவைத் தாண்டாமல், அதாவது நான்கு இட்லிகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

உடம்பைக் குறைக்க... பாட்டி வைத்தியம்!



உடம்பைக் குறைக்க... பாட்டி வைத்தியம்!

கொ ஞ்சம் தாட்டியான பொண்ணா பொறந்துட்டா அவ்வளவுதான்! அதுலயும் இடுப்புல எக்கச்சக்கமா சதை மடிப்பும் இருந்துச்சுனா வேற வில்லங்கமே வேணாம்! மத்த பெண்களுக்கு இருக்கிறதைவிட மாதவிலக்குக் கோளாறுகள் அதிகமா வந்து சேர்றதே குண்டா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்! இப்படி குண்டான உடம்பை வச்சுக்கிட்டு அவஸ்தைப்படுறவங்களுக்கு வரப்பிரசாதமா இருக்கப் போகுது நான் சொல்லப் போற ரசம்! ‘அட.. ரசம் ஜீரணத்துக்குத்தானே உதவும். உடம்பைக் குறைக்கவுமா உதவும்?’னு நீங்க கேட்கிறீங்கதானே.. நான் சொல்றது மிளகு ரசம் இல்லீங்க.. கொள்ளு ரசம்.

‘ஐயய்யே.. கொள்ளா? அதெல்லாம் குதிரை திங்கிறதாச்சே?!’னு கொல்லுனு சிரிக்கறீங்களா? சிரிக்காதீங்க. கொள்ளு சாப்பிடுறதால தான் குதிரை அத்தனை சக்தியோட இருக்கு. மோட்டாரோட சக்தித் திறனையே ‘ஹார்ஸ் பவர்’னுதானே சொல்லுறோம் (‘கொள்ளு’ பேரன், பேத்திகளோட பேசிப் பேசி எனக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியுமாக்கும்!). ஊளைச் சதையை கரைச்சு, உடம்பை கிண்ணுனு வச்சுக்கற சக்தி கொள்ளுக்கு உண்டு!

சரி.. விஷயத்துக்கு வர்றேன். மாதவிலக்கு கோளாறு காரணமா குழந்தைப் பேறு வாய்க்காத பெண்கள், இதை முயற்சி செஞ்சு பார்க்கலாம். மாதவிலக்கு ஆன ஐந்து நாட்களும் காலையில வெறும் வயித்துல கொள்ளு வேகவைச்ச தண்ணியை (சுமார் ஒரு டம்ளர்) நல்லா கலக்கிக் குடிக்கணும். ரெண்டு, மூணு மாசம் இப்படி செஞ்சா கர்ப்பப்பையில இருக்குற கசடு, அழுக்குகள் போறதோட, இடுப்புப் பகுதியில இருக்குற அதிகப்படி சதைகள் குறைஞ்சு சீக்கிரமே கர்ப்பமாவும் ஆவாங்க. இப்படி பொண்ணுங்களுக்கு முக்கியமா தேவைப்படுற கொள்ளுவை வச்சு ரசம் செஞ்சா நல்லதுதானே?

கொள்ளு ரசம் எப்படி செய்றதுனு செய்முறை சொல்றேன்.. குறிச்சுக்கங்க. கால் கப் கொள்ளுவை எடுத்துக்கிட்டு, வெறும் வாணலியில நல்லா வறுத்து, தண்ணியில ஊறப் போடுங்க. மறுநாள் காலையில அதே தண்ணியோட சேர்த்து, கொள்ளுவை நல்லா வேகவைச்சு மசிச்சுக்கங்க! தேவையான அளவு புளியை தண்ணியில கரைச்சு, அதுல கொஞ்சம் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம், சுண்டைக்காயளவு வெல்லம் போட்டு கொதிக்க விடுங்க. கடைசியா, வேக வைச்ச கொள்ளுவை சேர்த்து, ரசம் நுரைச்சு வந்ததும் இறக்கி, நெய்யில சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிச்சுக் கொட்டினா.. கொள்ளு ரசத்தோட வாசனை எட்டூருக்கு மணக்கும்
 வாழ்க வளமுடன்

இல்லத்தரசிகளின் கனிவான பார்வைக்க....



இல்லத்தரசிகளின் கனிவான பார்வைக்க ...

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர்  எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்-உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

தீபாவளிசுவீட்ஸ் செய்ய போகிறீர்களா -குறிப்புக்கள்




தீபாவளிசுவீட்ஸ் செய்ய போகிறீர்களா -குறிப்புக்கள்

தீபாவளி பட்சணம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? கீழ்கண்ட டிப்ஸ்களையும் படித்து, நினைவில் வைத்தால், சூப்பர் சமையல் ராணிகள் நீங்கள்தான். தீபாவளியை அசத்துங்கள் தோழியரே...
* தேன் குழல் செய்ய, மாவு அரைக்கும் போது, உருளைக்கிழங்கை வேக வைத்து, அதனுடன் சேர்த்து அரைத்தால், தேன் குழல் மிக மிக சுவையாக இருக்கும்.
* அதிரசம் செய்யும் போது, சிறிது பேரீச்சம் பழமும் கலந்து மாவை பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.
* மைசூர்பாக் செய்யும் போது, ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு என்ற அளவில் கலந்து செய்தால், வாயில் போட்ட உடனே மை‹ர்பாக் கரைந்து விடும்.
* ரவா லட்டு செய்யப் போகிறீர்களா? கையில் நெய்யை தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் செம ஈசியாக வரும். வாசனையாகவும் இருக்கும்.
* அல்வா தயாரிக்கும் போது, கடைசியில் சிறிது மில்க்மெய்ட் சேர்த்து கிளறினால், அல்வா சூப்பர் அல்வா ஆகிவிடும்.
* சோமாஸ் செய்யும் போது, பொட்டு கடலையுடன் வறுத்து பொடித்த கசகசா மற்றும் எள் போட்டுக் கொண்டால், நல்ல மணமாக இருக்கும்.
* குலோப் ஜாமுனுக்கு உருண்டைகளை உருட்டும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு உருட்டினால் ஒட்டாது; ஜாமுனும் மணக்கும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது, சர்க்கரைக்கு பதில், வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* குலோப் ஜாமுன் செய்யும் போதெல்லாம் சர்க்கரைப் பாகும், அதில் கரைந்து கிடைக்கும் ஜாமுன் உதிரியும் வீணாவது சகஜம். அந்த ஜாமுன் பாகில், சிறிது சிறிதாக மைதாவைச் சேர்த்துப் பிசையுங்கள். சில நிமிடங்களில், சப்பாத்தி மாவு போல திரண்டு வரும். பிறகு, மாவு சேர்ப்பதை நிறுத்திவிட்டு, பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, சதுர துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். அருமையான மைதா பிஸ்கட்டுகள் ரெடி!
* ரவா உருண்டை, பயத்தம் மாவு உருண்டை பண்ணும்போது, கொஞ்சம் மில்க் பவுடரை சேர்த்து, நெய்யை உருக்கிவிட்டுப் பிடித்தால், சுவை அதிகமாக இருக்கும்.
* பர்பி, மைசூர்பாகு போன்ற ஸ்வீட்ஸ் செய்யும் போது, கடாயின் அடியில் ஒட்டிக்கொண்டு எடுக்கவே வராது. அதை கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால், ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்து விடும்.
* தேய்காய் பர்பி செய்யும்போது, முதலிலேயே சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையைக் கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சிய பின், தேங்காய் துருவலைச் சேர்த்தால், அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்பியும் சீக்கிரத்தில் கெட்டி யாகிவிடும்.
* தேன்குழல், ரிப்பன் பக்கோடா, தட்டை போன்றவை நமுத்துப் போகாமல், மொறுமொறுவென்று இருக்க, மாவை பிசையும் போது வெந்நீர் ஊற்றிப் பிசைய வேண்டும்.
* தீபாவளி ஸ்நானத்துக்கு நல்லெண்ணெய் காய்ச்சும்போது வெற்றிலையைப் பிய்த்துப்போட்டு, ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் போட்டுக் காய்ச்சி னால், எண்ணெய் பச்சையாக இருக்கும். அதை தேய்த்து குளித்தால் சளி பிடிக்காது. உடம்பு உஷ்ணத்தைத் தணிக்கும்.

திங்கள், 9 அக்டோபர், 2017

பலா இலை இட்லி



பலா இலை இட்லி

இது சத்து, சுவை, மணம் நிறைந்தது.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 2 கப்,
உளுந்து - 1 கப்,
வெந்தயம் - 1டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு, மிளகு -2 டேபிள்ஸ்பூன்
எள் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி,
உப்பு - தேவையான அளவு.

தொன்னை செய்ய:

பச்சைநிற பலா இலை,
தென்னை ஓலை - தேவையான அளவு

செய்முறை:
1.அரிசியையும், உளுந்தையும்+வெந்தயம்,  தனித்தனியாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

2.தேங்காயைத் துருவி, இஞ்சி, பூண்டு, மிளகுயையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

3.மூன்றையும் ஒன்றாக்கி உப்புப்,போட்டு கரைத்து புளிக்க வையுங்கள்.

4 குறைந்தது 6 மணிநேரம் புளிக்க வேண்டும்.எள் எண்ணெய்யை மாவில் ஊற்றி கரைத்து விடவேண்டும்.

5.தென்னை ஓலைகளை கிழித்துவிட்டு, மிஞ்சும் குச்சியை நன்கு கழுவி, சிறிது சிறிதாக ஒடித்துக் கொள்ளுங்கள்.

6.பலா இலைகளை கழுவி, இந்தக் குச்சி மூலம், நான்கு நான்கு இலைகளாக கோர்த்து தொன்னை செய்துகொள்ளுங்கள்.

7.மாவை இந்த தொன்னைகளில் ஊற்றி இட்லி சட்டியில் வைத்து வேக வையுங்கள்.

8.பலாயிலை வாசனை வரும்போது எடுத்து விடவேண்டும்...

வியாழன், 5 அக்டோபர், 2017

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..



தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..
காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன்
                 ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

"தினமும் இதுதான் உணவா?

ஆம்..

ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."

இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும்.

ஆனால்..

ஆனால்?

இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..

இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மாட்டோம்.

ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.

ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.

ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.

உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..

என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.

ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.

இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது  80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..

எதில் சுகர் ஏறும்?

அரிசி மற்றும் கோதுமை..

அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.

கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)

எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?

சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

BMI அளவை மாற்று..

அதென்ன BMI?

உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.

ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.

இதன்படி என்ன ஆனது?

168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.

1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.

ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.

புரிகிறதா வியாபார தந்திரம்?

தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?

காலையில் 4 இட்லி

மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்

இரவு : சப்பாத்தி.

இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?

ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?

நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.

புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?

சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.

இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.

இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.

ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?

ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?

சுகர் துளியும் இல்லாத உணவு எது?

அதுதான் அசைவ உணவு.

மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.

அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.

காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.

இதை எப்படி நம்புவது?

பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?

தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.

இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..

சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.

முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.!

ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை



ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை

ஆப்பிள் மிகவும் சத்தான ஒரு பழம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

ஆனால் ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. இதில் சையனைடு உள்ளது.

இந்த ஆப்பிள் விதைகளை சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஆப்பிள் விதைகளில் அமிக்டாலின் உள்ளது.

இது மனிதனின் செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் போது சர்க்கரை மற்றும் சயனைடை வெளிப்படுத்துகிறது.

இது உடலின் உட்பகுதியில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகிறது.

இது கடுமையான நச்சுத்தன்மையை கொண்டுள்ளது.

சயனைடு பழங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப்பொருளாகும்.

சயனைடு ஆக்ஸிஜன் சப்ளையை தடைசெய்து விடுகிறது.

இந்த சயனைடு ஆப்ரிகட்ஸ், செர்ரி, பிளம்ஸ் ஆகியவற்றிலும் இருக்கிறது.

இந்த விதைகளில் கடுமையான பாதுகாப்பு படலம் உள்ளது.

இந்த விதைகளை எவ்வளவு சாப்பிட்டால் விஷத்தன்மை உண்டாகும் என்றால், 200 அதாவது ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டால், இது உடலை கடுமையாக பாதிக்கும்.

இந்த விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால், இது இருதயம், மூளை ஆகியவற்றை பாதித்துவிடும். கோமா நிலை மற்றும் இறப்புகள் கூட அரிதாக நடைபெறலாம்.

 இதனை மிகவும் அதிகமான அளவு எடுத்துக்கொண்டால், சுவாசக்கோளாறு, மூச்சுச்திணறல், இதயத்துடிப்பு அதிகமாவது, இரத்த அழுத்த குறைவு போன்றவை உண்டாகும்.

குறைந்த அளவு ஆப்பிள் விதைகளை உட்கொண்டால், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, மயக்கம், சோர்வு ஆகியவை உண்டாகும். எனவே இதில் கவனம் தேவை.

இந்த சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு தகுந்தது போல வேறுபடும்.

ஒரு மனிதனுக்கு 0.3 முதல் 0.35 மில்லி கிராம் வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும்.

ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு உள்ளது.

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.

அப்படியே அதன் விதைகளை சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உமிழ்ந்துவிடுங்கள்.

இது செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.

5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?



5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?

👉 இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.

👉 நாம் நலமுடன் இருக்க இந்த 5G உணவு முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

👉 சரி.... முதலில் 5G யில் வருகின்ற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

5G உணவுகள் :

👉 *இஞ்சி (Ginger)*

👉 *பூண்டு (Garlic)*

👉 *நெல்லிக்காய்* (Gooseberry)

👉 *கிரீன் டீ (Green tea)*

👉 *பச்சை மிளகாய*் (Green chilly)

👉 அனைத்தும் எளிதாக கிடைக்கும் பொருட்கள் தான். இந்த பொருட்கள் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை
தரவல்லது.

இந்த உணவுகளின் பெயர்கள் எல்லாம் ஜி என்ற எழுத்தில் துவங்குவதால்   5G உணவுகள் :என்ற பெயரைப் பெறுகின்றன!!!

1*இஞ்சி (Ginger)*

👉 இது ஒரு சிறந்த கிருமிநாசினி உணவாகும்.

👉 இதனை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்கம் பெறும்.

👉 உடலில் உள்ள செல்களின் வயதாகும் செயலினை குறைத்து இளமையாக, வைத்திருக்க உதவுகிறது.

👉 சட்னி மற்றும் தேநீரில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

2*பூண்டு (Garlic)*

👉 இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

👉 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

👉 நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

👉 சூப், குழம்பு, சட்னி என அனைத்து வகையான சமையலிலும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

3*நெல்லிக்காய்* (Gooseberry)

👉 நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

👉 இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

👉 உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

👉 இதை பழச்சாறு, ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.

4*கிரீன் டீ (Green tea)*

👉 மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.

👉 சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும்.

👉 உடல் எடையை குறைக்க உதவுகிறது.

👉 தினம் ஒரு வேளை கிரீன் டீ அருந்துவது நல்லது.

5*பச்சை மிளகாய் (Green chilly)*

👉 நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

👉 ஆண்டி-பாக்டீரியா தன்மை உடையது.

👉 சிறந்த வலிநிவாரணி உணவு பொருளாகும்.

👉 மசாலா சேர்க்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

👉 தவறாமல் இந்த பொருட்கள் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நல்வாழ்வு உங்களிடமே இருக்கும்

புதன், 4 அக்டோபர், 2017

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!


வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!

#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
#சதை_குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
#உடம்பு_வலிக்கிறதா?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
#மூக்கு_அடைப்பா?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
#தரையை_துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி..



செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி..

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மோர் - 1 கப்

செய்முறை :

 வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.

 புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.

 ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.

 இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள்.

 கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

 வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும்.

கொங்கு கிராமியத்து கார இட்லி


கொங்கு கிராமியத்து கார இட்லி

இது கொங்கு கிராமியத்து பகுதிகளில் மிகவும் பிரசித்தம்.

இன்று அழித்து விட்டது என்றும் கூறலாம்.

இதை எங்கள் ஆத்தா நான் சிறுவயதில் இருந்த போது செய்து கொடுக்கும்.

மிகவும் சுவை உடையதாக இருக்கும்.

ஒரு தடவை நீங்கள் செய்து பார்த்து விட்டு உங்கள் அணுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி 3 கப்
உளுந்து பருப்பு 2 கப்
வெந்தயம் 2 தேக்கரண்டி
குரு மிளகு 2 மேஜைகுகரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தயிர் 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பசு நெய் 1/2 கப்
கறிவேப்பில்ல கொஞ்சமாக பொடியாக நறுக்கியது
பெருங்காயம் சிறுதுளி
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை

1. அரிசி , உளுந்து , வெந்தயம் இவை மூன்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2. பிறகு ஆட்டுகல்லில் போட்டு நன்றாக கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. மிளகு மற்றும் சீரகத்தை அம்மிகல்லில் ஒன்றுக்கு இரண்டாக பொடித்து கொள்ள வேண்டும். மிகவும் பொடியாக பொடித்து விட வேண்டாம்.

4. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் , பெருங்காயம் , குரு மிளகு மற்றும் சீரகம் தூள், இஞ்சி-பூண்டு விழுது  தயிர் மற்றும் நெய் 1/4 கப் சேர்த்துகோங்க
நன்றாக கலந்து 12 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

5. இப்பொழுது இட்லி பாத்திரத்துல உள்ள இட்லி தட்டுகளிள் தொன்னையை வைக்க வேண்டும். தொன்னை என்பது ஒவ்வொரு ஊருக்கும் பெயர் வேறுபடும். அது கோயில்களில் சுண்டல், பிரசாதம் கொடுக்க பயன்படுத்தும் பொருள். இது மந்தாரை இலையில் செய்த பொருள். இதில் செய்தால் மணமும் சுவையும் கூடும்.

6. அதில் புளிக்க வைத்துள்ள மாவில் தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்றாக கலந்து  , பின்பு ஒரு கரண்டி மாவை எடுத்து தொண்ணையில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி பசு நெய்யை மாவின் மேல் விட்டு விடவும்.

7. நன்றாக ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்க வேண்டும்.

8. பிறகு சுடச்சுட சுவையான கொங்கு கார இட்லி தயார்

கொங்கு கோவை மைசூர்பாக் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)



கொங்கு கோவை மைசூர்பாக் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 1 கப்
சர்க்கரை : 1 ½ கப்
நெய் : ¾ கப்
வெண்ணை : ¼ கப்
ஏலக்காய் தூள் : ஒரு சிட்டிகை
மரசெக்கு கடலை எண்ணெய் : 1 கப்

செய்முறை

1. முதலில் கடலை மாவை நன்கு பச்சை வாசனை போக... கொஞ்சம் சிவக்கும் வரை வறுக்கவும்...

2.வருத்த மாவை நன்கு சலித்து ஏலக்காய் போடி கலந்து வைக்கவும்...

3.ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய்,வெண்ணை கலந்து கட்டி இல்லாமல் உருக்கி வைத்து கொள்ளவும்...

4. வேறு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுத்து... உருக்கிய எண்ணையில் கொஞ்சம் எடுத்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்..

5.பின் வாணலில் சர்க்கரை போட்டு சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்... பாகு கம்பி பதம் வர காத்திருக்க தேவை இல்லை.சர்க்கரை பாகு கை ஓட்டும் பிசுக்கு பதம் இருந்தாலே போதும்...

6.மெல்ல கரைத்து வைத்த கடலைமாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பாகில் சேர்த்து கிண்டவும்... ஓரம் நுரை போல் பொரிந்து வரும் அப்போ மேல மீதம் உள்ள நெய்யில் கொஞ்சம் சேர்த்து கிண்டவும்...

7.திரும்பவும் நுரை போல் பொரித்து வரும் மேலும் மீதம் இருக்கும் எண்ணையில் சிறிது விட்டு கிண்டவும்... இப்படி நெய் முழுக்க கொஞ்சம் கொஞ்சம கலந்து கிண்டவும்... கடைசியில் நுரை போல பொரித்து வந்தது கொஞ்சம் சுருள ஆரம்பிக்கும்...

8.நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியதும் வெட்டுங்கள் செய்வது மிகவும் சுலபம். சக்கரை கம்மியா இருப்பதால் இறுக வாய்ப்பு இல்லை. நெய் இருப்பதால் கரெக்டாக செட் ஆகும்... திகட்டவும் செய்யாது. எப்படி சொதப்பி செய்தாலும் கரெக்டா வரும்.ட்ரை பண்ணி பாருங்க.