செவ்வாய், 15 அக்டோபர், 2019

தீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்



தீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்

பண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்... 'அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா...’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், 30 வகை தீபாவளி பட்சணங்களை சிறப்பாக செய்யக் கற்றுத்தருகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
தேங்காய் சுகியன்
தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.  பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.
உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
மூங்தால் ஃப்ரை
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இது ஒரு மாதம் வரை கெடாது.
சன்னா தால் ஃப்ரை
தேவையானவை:  கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி,  நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி
தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல்  - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
மைசூர்பாகு
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.
காராபூந்தி
தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
இஞ்சி முரப்பா
தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.
குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.
மோகன் தால்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி -  சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி,  வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.
கோதுமை அல்வா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்

செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி,  வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.
தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
பாதாம் டிலைட்
தேவையானவை:  மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.
மகிழம்பூ முறுக்கு
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.
சீப்பு ரோல்ஸ்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்),  எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.
குறிப்பு:  நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.
ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
ரவா லாடு
தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை  - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.
டூ இன் ஒன் லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: நெய் தவிர  மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.
டபுள் கலர் மைதா கேக்
தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,

செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர்  சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.
கேஷ்யூ ஃப்ரை
தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து,  சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.
பாதுஷா
தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு,  ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை:  உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து  இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து,  கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.
பாதாம் மில்க் அல்வா
தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.

செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும்.  அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.
காரா சேவ்
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.
பந்தர் லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய்  - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.
டிரை ஃப்ரூட் அல்வா
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது),  நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:  சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
நவதானிய அப்பம்
தேவையானவை:  நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் -  ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

30 வகை ரெடி மிக்ஸ்


 30 #வகை #ரெடி #மிக்ஸ்

‘டைம் மேனேஜ் மென்ட்’ என்பது, வேலைக்கு செல்பவர் களுக்கு மட்டுமல்ல… இல்லத்தரசிகளுக் கும் அவசியம்.  ’30 வகை ரெடி மிக்ஸ்’ ரெசிபிகளை அளிக்கிறார் சீதா சம்பத்.

 *✱பாதாம் மில்க் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: பாதாம் பருப்பு – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், குங்குமப்பூ – 15 இதழ்கள், பாதாம் எசென்ஸ் – 2 துளிகள்.

செய்முறை: பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பொடி செய்யவும். பிறகு, பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

தேவைப்படும்போது ஒரு  கிளாஸ்  சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம். பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

 *✱பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: பச்சரிசி ரவை – 2 கப், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை  டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, இஞ்சித் துண்டுகள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்  மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்… பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.

பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

 *✱பச்சடி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு –  ஒரு கப், கடுகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சித் துண்டுகள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் நைஸாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறியதும் உளுத்தம்மாவில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பச்சடி ரெடி மிக்ஸ்.

குறிப்பு: பச்சடி தேவைப்படும்போது ஒரு கப் தயிரில் 2 டீஸ்பூன் அளவு ரெடி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

✱ *பாயசம் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: சேமியா – ஒரு கப், ரவை – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால்  டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.

பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.

✱ *தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: தேங்காய் துருவல் – ஒரு கப், பொட்டுகடலை – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் (காய வைத்தது) – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் தேங்காய் துருவலை போட்டு, தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலை, காய்ந்த பச்சை மிளகாயை மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஈரம் போக வறுத்து எடுத்து, தேங்காய் கலவை யில் சேர்த்துக் கலந்தால்… தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் தயார்!

எவ்வளவு தேங்காய் சட்னி தேவையோ… அந்த அளவுக்கு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து உபயோகப்படுத்தவும்.

✱ *தக்காளி ரசம் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் – 16 (முழு பழம் 4 – தக்காளி பழ சீஸனில் பழத்தை வாங்கி எவர்சில்வர் கத்தியால் ‘கட்’ செய்து, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கலாம்), தனியா – 3 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 5, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு  – தலா அரை டீஸ்பூன், மஞ்சள் துண்டுகள் – 2, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கடுகு, நெய் நீங்கலாக, எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து, கடுகை நெய்யில் வறுத்து கலந்தால்… தக்காளி ரச ரெடி மிக்ஸ் தயார்.

கடாயில் காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் 4, 5 போட்டு, தேவையான அளவு ரச மிக்ஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கவும். இந்த ரசத்தை பருப்புத் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.

✱ *ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: புளி – சிறிய கமலா ஆரஞ்சு சைஸ், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்,  மிளகாய் வற்றல் – 10, பெருங்காயம் – சிறிய கட்டி, விரலி மஞ்சள் – ஒன்று, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை  – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… மஞ்சள், வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து நைஸாக பொடி செய்யவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து கொரகொரப்பாக பொடித்து, தனியாக வைத்திருக்கவும். வெறும் கடாயில் புளியை போட்டு ஈரம் போக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை தனியாக வறுத்து கைகளால் தூளாக்கவும். எல்லா பொடியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கலந்து எடுத்து வைக்கவும். இதுதான் ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ்.

புளியோதரை தேவைப்படும்போது, உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிளறி, தேவையான அளவு புளியோதரை பொடி மிக்ஸ் போட்டு கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடாம், சிப்ஸ் தொட்டு சாப்பிடவும்.

✱ *மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ்*

தேவையானவை: தேங்காய் துருவல் – 2 கப், சீரகம் – 4  டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) – 6 (காரம் வேண்டுவோர் சற்று கூடுதலாக சேர்க்கலாம்), பெருங் காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – கால் கப், காய்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை வெறும் கடாயில் உப்பு சேர்த்து வறுக்கவும். துவரம்பருப்பை தனியாக வறுக்கவும். தேங்காய் துருவல், துவரம்பருப்பு, காய்ந்த பச்சை மிளகாய், சீரகம் கலந்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை சேர்த்தால்… மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் தயார்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது, ஒரு கப் புளிப்பு தயிரில் தேவையான அளவு மோர்க்குழம்பு மிக்ஸ் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வரும்போது தீயை நிறுத்தி விடவும்.

✱ *கொத்தமல்லி இலை பொடி*

தேவையானவை: கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் – 5, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு  நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

குறிப்பு: இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

✱ *பஜ்ஜி  போண்டா ரெடி மிக்ஸ்*

தேவையானவை: கடலைப்பருப்பு – 500 கிராம், பச்சரிசி – 50 கிராம், மிளகாய் வற்றல் – 5, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி – போண்டா ரெடி மிக்ஸ்.

பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

போண்டா என்றால்… நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை  கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

✱ *லெமன் ரைஸ்  லெமன் சேவை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: லெமன் சால்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல்  – 6, பச்சை மிளகாய் துண்டுகள் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்     கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்,  கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை – இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.   லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்… லெமன் ரைஸ் – லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.

லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

✱ *பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப், மிளகாய் வற்றல் – 4.

செய்முறை: துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.

தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து  சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு: கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

✱ *தேங்காய் சாதம்  தேங்காய் சேவை    ரெடி மிக்ஸ்*

தேவையானவை: தேங்காய் துருவல் –  ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு –  தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல்  – 2, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். வறுபட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக ஈரம் போக வறுத்து எடுக்கவும். தேங்காய் துருவலை உப்பு கலந்து வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் தேங்காய் சாத ரெடி மிக்ஸ்.

தேங்காய் சாதம், தேங்காய் சேவை செய்ய… தேவையான அளவு ரெடி மிக்ஸை சாதம் (அ) சேவையுடன் சேர்த்து லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

✱ *அடை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து – ஒரு கப், மிளகாய் வற்றல் – 3.

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக  அரைத்து வாங்கவும். இதுதான் அடை ரெடி மிக்ஸ்.

அடை செய்யும்போது தேவை யான அளவு அடை  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டி யாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து வழக்கம் போல அடை தயார் செய்யவும்.

குறிப்பு: மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலந்தும் செய்யலாம்.

✱ *மிளகு வடை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு – ஒரு கப், மிளகு –  ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மெஷினில் ரவை போல உடைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதுதான் மிளகு வடை ரெடி மிக்ஸ்.

வடை தேவைப்படும்போது,  இந்த ரெடி மிக்ஸை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து பிசிறி, 15, 20 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்சம் கலவையை எடுத்து  உருட்டினாற் போல செய்து எண்ணெய் தொட்டுக் கொண்டு,  பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஈர வெள்ளை துணியில் வடையாக தட்டவும் (நடுவில் ஓட்டை போடலாம்). சூடான எண்ணெயில் வடைகளை போட்டு வேகவிட்டு, பொன்னிறம் ஆனதும் திருப்பி விட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

✱ *பாகற்காய் சாதம் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: பாகற்காய் வற்றல் – 50 கிராம், மிளகாய் வற்றல் – 6, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 ஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிறு துண்டு, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பாகற்காய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். பாகற்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட் டிருக்கும் என்பதால்,  குறைவான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்யவும்

இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் பொடி சுகர், பித்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

பாகற்காய் வற்றல் செய்முறை: பாகற்காயை வட்டமாக கட் செய்து, விதை நீக்கி… தயிர், உப்பு கலந்து ஊற வைத்து, காய வைத்து எடுத்து டப்பாவில் வைக்கலாம். இது நாள்பட இருக்கும். கடையிலும் பாகற்காய் வற்றல் கிடைக்கும்.

✱ *கறிவேப்பிலை குழம்பு பொடி  கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: கறிவேப்பிலை (சுத்தம் செய்தது) – 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 5, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  ஆகியவற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை  தனியே வறுத்து பொடிக்கவும்.

புளியை  உப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன், ஏற்கெனவே தயாராக உள்ள பொடிகளை சேர்த்துக் கலந்தால்… கறிவேப்பிலை குழம்பு பொடி – கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் தயார்.

தேவையான அளவு கறிவேப்பிலை குழம்பு ரெடி மிக்ஸில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்… கறிவேப்பிலை குழம்பு தயார். கறிவேப்பிலை ரெடி மிக்ஸ் பொடியை சாதத்தில் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம்.

✱ *மசால் வடை ரெடி மிக்ஸ்*

தேவையானவை: கடலைப் பருப்பு – ஒரு கப், ஜவ்வரிசி – 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, காய்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்புடன் ஜவ்வரிசியை சேர்த்து சன்ன ரவையாக உடைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்து கடலைப்பருப்பு கலவையில் கலக்கவும். காய்ந்த கறிவேப்பிலையை கையினால் நொறுக்கி சேர்க்கவும். இதில் சோம்பை சேர்த்துக் கலந்தால்…  மசால் வடை ரெடி மிக்ஸ் தயார்.

மசால் வடை தேவைப்படும்போது… தேவையான அளவு  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய துண்டுகளை தேவையான அளவு கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்தக் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

✱ *ரவா லட்டு ரெடி மிக்ஸ்*

தேவையானவை: ரவை – ஒரு கப், சர்க்கரை – ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை  டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் (நெய்யில் வறுத்தது) – 10, நெய் – சிறிதளவு.

செய்முறை: வெறும் கடாயில் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். மிக்ஸியில் ரவையைப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடியாக்கவும். ரவைப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு கலந்தால்… ரவா லட்டு ரெடி மிக்ஸ் தயார்.

ரவா லட்டு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து… சூடாக்கிய நெய் சேர்த்துக் கலந்து… கலவை சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.

✱ *எள் சாதம் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: எள் (கறுப்பு (அ) வெள்ளை) – ஒரு கப், மிளகாய் வற்றல் – 4, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் மிள காய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துப் பொடித்தால்… எள் சாத மிக்ஸ் தயார்.

தேவைப்படும்போது உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு எள் பொடி சேர்த்துக் கலக்கவும்.

✱ *மிளகு குழம்பு ரெடி மிக்ஸ்*

தேவையானவை: மிளகு, துவரம்பருப்பு – தலா 4 டீஸ்பூன், தனியா – ஒரு கப், மிளகாய் வற்றல் – 2, பெருங்காயம் – ஒரு சிறு கட்டி, புளி – பெரிய எலுமிச்சம் பழ அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பெருங்காயம், தனியா, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். மிளகை வாசனை வரும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையையும் வறுக்கவும். அதே கடாயில் புளியை வறுக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக பொடி செய்யவும். இதில் உப்பு சேர்த்து  ஒரு சுற்று சுற்றி எடுத்தால்… மிளகு குழம்பு மிக்ஸ் தயார்.

மிளகு குழம்பு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

✱ *அங்காயப் பொடி*

தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், வேப்பம்பூ – 8 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், சுண்டைக்காய் (காய்ந்தது) – 15, பெருங்காயம் – சிறிதளவு, மிளகாய் வற்றல் – ஒன்று, சுக்குப் பொடி – ஒரு டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூ, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து, சுக்குப் பொடியை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த சுண்டைக்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். முதலில் செய்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்தால்… அங்காயப் பொடி தயார்.

சாதத்தில் தேவையான அளவு அங்காயப் பொடி சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடவும். பிரசவித்த பெண்களுக்கு 12-ம் நாள் முதல் இந்த பொடி கலந்த சாதம் சிறிதளவு சாப்பிட்ட பிறகுதான்  மற்ற உணவுகளை சாப்பிட அனுமதிப்பார்கள். உடல் வலிமை யாகவும், வயிற்று ரணம் ஆறவும் அவர்களுக்கு இதை கொடுப்பார்கள்.

✱ *கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: கண்டதிப்பிலி – 10 குச்சி, மிளகு – ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி, புளி – எலுமிச்சம் பழ அளவு, நெய், சீரகம் – தலா அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளி, உப்பு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும். கண்டதிப்பிலி, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை புளி – உப்பு பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைத்த பொடியில் கலந்தால்… கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ் தயார்.

ரசம் தேவைப்படும்போது, ரெடி மிக்ஸை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வந்ததும் இறக்கவும்.

வாயு தொல்லை, உடல் வலியிலிருந்து நிவாரணம் அளித்து,  ஜீரண சக்தியை அதிகரிக்கும் இந்த ரசம்.

✱ *தேன் குழல் ரெடி மிக்ஸ்*

தேவையானவை: பச்சரிசி – 6 கப், வெள்ளை உளுந்து – ஒரு கப், எள் (அ) சீரகம் – 10 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை உளுந்தை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் கலந்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அந்த மாவில் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால்… தேன் குழல் ரெடி மிக்ஸ் தயார்.

தேன்குழல் தேவையானபோது ரெடி மிக்ஸ் மாவில் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். வெந்ததும் திருப்பிவிடவும். சிறிது நேரத்துக்குப் பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

✱ *வேப்பம்பூ பொடி*

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு ஆழாக்கு, தனியா – கால் ஆழாக்கு, மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4 (விரும்பினால் அதிகம் சேர்க்கலாம்), பெருங்காயம் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும். தனியா, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்தால்… வேப்பம்பூ பொடி தயார்.

சாதத்தில் நெய் விட்டு, தேவையான அளவு வேப்பம்பூ பொடி ரெடி மிக்ஸ் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

✱ *புதினா சட்னி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: புதினா இலை – 2 கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் (வறுத்தது), பெருங்காயத்தூள் –  ஒரு சிட்டிகை, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: புதினா இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புதினா, வறுத்த தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, புதினா கலவையில் போட்டு நன்கு கலந்தால்… புதினா சட்னி ரெடி மிக்ஸ் தயார். சட்னி தேவைப்படும்போது இந்தக் கலவையில் சிறிது எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எலுமிச்சைச் சாறு சிறிது விட்டும் கலக்கலாம்.

✱ *ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்*

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.

ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

✱ *பயத்தலாடு ரெடி மிக்ஸ்*

தேவையானவை: பயத்தம்பருப்பு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றே கால் கப்,  முந்திரித் துண்டுகள் (வறுத்தது) – 10, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை… சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்… பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.

தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

✱ *இட்லி  தோசை மிளகாய்ப் பொடி*

தேவையானவை: மிளகாய் வற்றல் – 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பெருங்காயம் – ஒரு சிறு துண்டு, எள் – கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல்,  பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

✱ *ரவா இட்லி ரெடி மிக்ஸ்*

தேவையானவை: ரவை – ஒரு கப், லெமன் சால்ட் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 5, மிளகாய் வற்றல் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு… சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.

ரவா இட்லி தேவைப்படும்போது… தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்.


ஞாயிறு, 6 அக்டோபர், 2019

30 வகை ஊறுகாய்


30 வகை ஊறுகாய்

அசத்தலாக 30 வகை ஊறுகாய்களை  இங்கே வழங்கி இருக்கும் சமையல் கலை நிபுணர் Raj baby, ஊறுகாய் தயாரிக்க மற்றும் சேமிக்க சில சூத்திரங்களையும் சேர்த்தே தருகிறார்…

”காய்கள், பாத்திரம், கரண்டி ஆகியவற்றில் ஈரம் கூடாது; ஆறிய பின்பே சேமிக்க வேண்டும்; கண்ணாடி, பீங்கான், மண் பாத்திரம் ஏற்றது; பிளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்; அடிக்கடி குலுக்கிவிடுவதோடு கிளறியும்விட வேண்டும்; கல் உப்பை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பயன்படுத்தவும்; உப்பு, காரம், எண்ணெய் மூன்றும் தூக்கலாக இருந்தால், ஊறுகாய் நாள்பட இருக்கும். அவ்வப்போது வெயிலில் வைத்து எடுக்கவும்.”

இங்கே ஊறுகாய்களை அழகு மிளிர அலங்கரித்திருப்பது… ‘செஃப்’ ரஜினி.

தக்காளி ஊறுகாய்
***************************
தேவையானவை: கெட்டியான தக்காளி – அரை கிலோ, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், புளி – 50  கிராம், நல்லெண்ணெய் – 150 கிராம், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி (வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்), பெருங்காயதூள் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கழுவித் துடைத்து, உலர்ந்த தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும். புளிக் கரைசல் சேர்க்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நீர் வற்றும் வரை குறைந்த தீயில் வதக்கவும். எண்ணெய் மிதந்து வரும்போது     கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கேரட் ஊறுகாய்
***********************
தேவையானவை: கேரட் – கால் கிலோ, உப்பு – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று.

செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து… கேரட், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். காய் சிறிது வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலந்துவிடவும்.

மாங்காய் ஊறுகாய்
*****************************
தேவையானவை: மாங்காய் – 2, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காயை சுத்தம் செய்து, உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு,வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங் காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி எல்லாவற்றையும்  மாங்காயில் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்து, மாங்காயில் கொட்டிக் கிளறவும்.

எண்ணெய், ஊறுகாயின் மேலே பிரிந்து நிற்குமாறு இருப்பதுதான் அருமையான பதம்.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்
***************************************
தேவையானவை: மாங்காய் இஞ்சி – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சம் பழம் – அரை மூடி, பொடி செய்த உப்பு, கடுகு – தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, ஈரம் போக உலர்த்தி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியுடன் உப்பு சேர்க்கவும். எண்ணெயை சூடாக்கி… கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய் இஞ்சியில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கவும்.

புதினா தொக்கு
***********************
தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான  அளவு, புளி – கோலி குண்டு அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: புதினாவை ஆய்ந்து, இலைகளை சுத்தம் செய்யவும். பச்சை மிளகாயை நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, புதினா விழுதை சேர்த்து வதக்கவும். ஆறியதும் எடுத்து பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

கத்திரிக்காய் ஊறுகாய்
*********************************
தேவையானவை: விதையில்லாத பிஞ்சு கத்திரிக்காய் – 100 கிராம், தக்காளிக்காய் – 2, புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கத்திரிக்காயை கழுவி பொடியாக நறுக்கவும். தக்காளிக்காய், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்களைப் போட்டு வதக்கவும். உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

காய்கறி ஊறுகாய்
***************************
தேவையானவை: பீன்ஸ், கேரட், குடமிளகாய், பட்டாணி, பட்டர் பீன்ஸ் கலவை – 2 கப், உருளைக்கிழங்கு – ஒன்று, நல்லெண்ணெய் – 100 கிராம், உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – வெந்தயப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 50 கிராம், வினிகர் – கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து எடுத்து ஈரம் போக உலர விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… உலர்ந்த காய்கறிக் கலவை, உப்பு,  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வதங்கி வரும்போது கடுகு – வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பின் வினிகர் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதை நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியாது  என்பதால், விரைவில் பயன்படுத்தி விட வேண்டும்

பச்சை மிளகாய் ஊறுகாய்
**************************************
தேவையானவை: பச்சை மிளகாய் – கால் கிலோ, உப்பு, கடுகுப் பொடி – தலா 50 கிராம், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று.

செய்முறை: கழுவித் துடைத்த பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். உப்பு, கடுகுப் பொடி, மஞ்சள் தூள், சோம்பு, ஓமம், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் எலுமிச்சைச் சாறில் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயிலும் தாராளமாக அடைக்கவும். இதை வெயிலில் 5-6 நாட்கள் வைக்கவும். தினமும் 2 முறை குலுக்கிவிடவும்.

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஊறுகாய் இது.

மாங்காய் தொக்கு
***************************
தேவையானவை: பெரிய மாங்காய் – ஒன்று, நல்லெண்ணெய் – 150 கிராம், மிளகாய்த்தூள் – 100 கிராம், உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

நாரத்தங்காய் ஊறுகாய்
***********************************
தேவையானவை: மீடியம் சைஸ் நாரத்தங்காய் – ஒன்று, உப்பு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

நாரத்தங்காய் ஊறுகாய்
***********************************
தேவையானவை: மீடியம் சைஸ் நாரத்தங்காய் – ஒன்று, உப்பு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

செய்முறை: பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ள வும். எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால்… பாகற்காய் ஊறுகாய் தயார்!

குடமிளகாய் ஊறுகாய்
**********************************
தேவையானவை: குடமிளகாய் – 100 கிராம், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம் பழம் – ஒன்று, கடுகு, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை: குடமிளகாயை கழுவித் துடைத்து, பொடியாக நறுக்கவும். அதில் உப்பு போட்டு கலந்து அரை நாள் ஊற விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயம் தாளித்து, ஊறிய குடமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் (5 நிமிடம் வதக்கினால் போதும்). அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கிளறிவிடவும். இதை அதிக நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியாது.

எலுமிச்சை ஊறுகாய்
*****************************
தேவையானவை: எலுமிச்சம் பழம் – 10, மிளகாய்த்தூள் – 50 கிராம், நல்லெண்ணெய் – 150 கிராம், பெருங்காயத்தூள்       – ஒரு டீஸ்பூன், பொடித்த உப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி – தலா ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடி செய்யவும்).

செய்முறை: எலுமிச்சம்பழத்தை நன்கு கழுவி, ஈரம் போக உலர்ந்த வுடன் கொட்டைகள் இல்லாமல் பொடியாக நறுக்கவும். பாட்டிலில் கால் டேபிள்ஸ்பூன் உப்பை முதலில் போட்டு, நறுக்கிய பழங்களை போடவும். பின் மீதமுள்ள உப்பை போட்டு குலுக்கிவிடவும்.  பாட்டிலை வெள்ளைத் துணியால் மூடி, 2, 3 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, மிளகாய்த்தூள்,  கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெயை சூடாக்கி, கலவையின் மேல் ஊற்றிக் கலக்கினால்… எலுமிச்சை ஊறுகாய் ரெடி!

ஆவக்காய் ஊறுகாய்
*******************************
தேவையானவை: மாங்காய் – 5, கறுப்பு கொண்டைக் கடலை – 25 கிராம், மிளகாய்த்தூள், பொடி செய்த கல் உப்பு – தலா 100 கிராம், வெந்தயம், கடுகு – தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – கால் கிலோ, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயம், கடுகு இரண்டையும் வெயிலில் காய வைத்து பொடி செய்யவும். சுத்தம் செய்த மாங்காய்களை கொட்டை யுடன் வெட்டி, நிழலில் காய வைக்கவும். ஈரம் போக காய்ந்த பின், ஒரு பீங்கான் ஜாடியில் மாங்காய் துண்டுகளை போடவும். இதனுடன் கொண்டைக்கடலை சேர்க்க வும். மிளகாய்த்தூள், உப்பு, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, மஞ்சள்தூள், பெருங் காயத் தூள் ஆகியவற்றையும் அதில் சேர்த்து நன்கு குலுக்கி விடவும். கடைசியாக நல்லெண் ணெய் ஊற்றி கிளறிவிடவும்.

மாவடு ஊறுகாய்
**************************
தேவையானவை: மாவடு – ஒரு கிலோ, பொடி செய்த கல் உப்பு, மிளகாய்த்தூள் – தலா 50 கிராம், கடுகு – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) விளக்கெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெந்தயம், கடுகு இரண்டையும் வெயிலில் காய வைத்து பொடி செய்யவும். சுத்தம் செய்த மாங்காய்களை கொட்டை யுடன் வெட்டி, நிழலில் காய வைக்கவும். ஈரம் போக காய்ந்த பின், ஒரு பீங்கான் ஜாடியில் மாங்காய் துண்டுகளை போடவும். இதனுடன் கொண்டைக்கடலை சேர்க்க வும். மிளகாய்த்தூள், உப்பு, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, மஞ்சள்தூள், பெருங் காயத் தூள் ஆகியவற்றையும் அதில் சேர்த்து நன்கு குலுக்கி விடவும். கடைசியாக நல்லெண் ணெய் ஊற்றி கிளறிவிடவும்.

மாவடு ஊறுகாய்
*************************
தேவையானவை: மாவடு – ஒரு கிலோ, பொடி செய்த கல் உப்பு, மிளகாய்த்தூள் – தலா 50 கிராம், கடுகு – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) விளக்கெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாவடுவை நன்கு கழுவி, சுத்தமான துணியில் துடைத்து, நிழலில் காய வைக்கவும். உலர்ந்த வடுவை நல்லெண்ணெய் (அல்லது) விளக்கெண்ணெயுடன் கலக்கவும். இதில் உப்பு, வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்த கடுகு, மிளகாய்த்தூள் ஆகிய வற்றையும் சேர்த்துக் கலந்து விடவும். எல்லாம் நன்கு  கலந்த பின், குலுக்கிவிடவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அடிக்கடி குலுக்கிவிட வேண் டும். இதை காரம் சேர்க்காமலும் செய்யலாம்.

சின்ன வெங்காய ஊறுகாய்
***************************************
தேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 50 கிராம், நல்லெண்ணெய் – 150 கிராம், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயத்தை உரித்து, சுத்தம் செய்து உலர விட வும் (மேலே உள்ள கொண்டை மற்றும் கீழே உள்ள பகுதி இரண்டை யும் வெட்டிவிடவும்). வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பெருங் காயம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, மிள காய்த்தூள், கடுகு, வெந்தயப் பொடி சேர்க்கவும். பிறகு, புளி யைக் கரைத்து சேர்க்கவும். நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

புளி மிளகாய்
*******************
தேவையானவை: பச்சை மிளகாய் – 100 கிராம், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, வெந்தயப் பொடி, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயை சுத்தம் செய்து, காம்பை எடுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயம் தாளித்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கரைத்த புளி, உப்பு சேர்த்துக் கலக்கவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது வெந்தயப் பொடி, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்
********************************************
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 20, காய்ந்த மிளகாய் – 50 கிராம், நல்லெண்ணெய் – 100 கிராம், உப்புத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,  வறுத்துப் பொடி செய்த கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து, ஆவியில் வேக வைத்து, கொட்டையை நீக்கி, நன்றாக உலரவிடவும்.  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாயை வறுத்துப் பொடி செய்யவும். மீதி எண்ணெயை சூடாக்கி, உலர்ந்த நெல்லிக்காய், மஞ்சள்தூள், பொடித்த மிளகாய், உப்பு, கடுகுப் பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாகாளிக்கிழங்கு ஊறுகாய்
****************************************
தேவையானவை: மாகாளிக் கிழங்கு – அரை கிலோ, புளித்த தயிர் – 2 டம்ளர், உப்பு – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய் வற்றல் – 10, கடுகு – ஒரு டீஸ்பூன், விரலி மஞ்சள் – ஒரு துண்டு (விரல் நீளம்).

செய்முறை: மாகாளிக் கிழங்கை நீரில் (கிழங்கு மூழ்கும் அளவு) 5 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதன் தோலை நீக்கி, நடுப்பாகத்தை கீறி, உள்ளிருக்கும் நரம்பை எடுத்துவிடவும். கிழங்கை துண்டுகளாக நறுக்கி, கழுவிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், மஞ்சள், கடுகை சேர்த்து விழுதாக அரைத்து, தயிரில் கலந்து, உப்பு சேர்த்து, அதில் கிழங்குத் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும்.

கோவைக்காய் தொக்கு
**********************************
தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 6, கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய கோவைக்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கினால்… கோவைக்காய் தொக்கு ரெடி!

பூண்டு ஊறுகாய்
************************
தேவையானவை: உரித்த பூண்டு – 200 கிராம், மிளகாய்த்தூள் – 50 கிராம், எலுமிச்சம் பழம் – ஒன்று, உப்புத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு – வெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,  பெருங்காயப் பொடி, கடுகு – தாளிக்க தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சைச் சாறில் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், கடுகு – வெந்தயப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலக்க வும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் பொடிகள் கலந்த எலுமிச்சைச் சாறை ஊற்றி, கொதிக்கவிடவும். நன்கு கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

பச்சை மிளகாய் தொக்கு
************************************
தேவையானவை: பச்சை மிளகாய் – 200 கிராம், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – அரை கப், பெருங்காயம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு (விருப்பப்பட்டால்).

செய்முறை: பச்சை மிளகாயை கழுவி, ஈரம் போக துடைத்து, காம்புடன் நறுக்கவும். வாணலியில் பாதி எண்ணெயை சூடாக்கி… புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய பின் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். மீதி எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். வெல்லம் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

இஞ்சித் தொக்கு
************************
தேவையானவை: இளம் இஞ்சி – 100 கிராம், மிளகாய் வற்றல் – 10, புளி – சிறிய எலுமிச்சை அளவு, உப்பு –  தேவையான அளவு, வெல்லம் –  சிறிய துண்டு, நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 20 கிராம்.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி… நறுக்கிய இஞ்சி, புளி, பூண்டு, உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி ஆறவிடவும். ஆறியதும் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சூடாக்கி… கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். எண்ணெய் மிதந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கிடாரங்காய் ஊறுகாய்
*********************************
தேவையானவை: கிடாரங்காய் – ஒன்று, உப்புத்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய் வற்றல் – 25 கிராம், நல்லெண்ணெய் – அரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கிடாரங்காயைக் கழுவி, உலர்த்தி, பின்னர் துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை வறுத்துப் பொடி செய்ய வும். நறுக்கிய கிடாரங்காய் துண்டுகளை பாட்டிலில் போட்டு, உப்பு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்க வும். எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து சேர்த்துக் கலக்கவும்.  (கிடாரங்காய் துண்டுகளை உப்பில் ஊற வைத்து எடுத்த பின்பு, பொடி வகைகள், எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.)

மாங்காய்  மா இஞ்சி ஊறுகாய்
********************************************
தேவையானவை: மீடியம் சைஸ் மாங்காய் – ஒன்று, மா இஞ்சி – 50 கிராம், மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன், உப்புத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன், நல்லெண் ணெய் – 150 கிராம், கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: மாங்காயை கழுவி, துடைத்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மா இஞ்சி யைத் தோல் சீவி, கழுவி, பொடி யாக நறுக்கிக் கொள்ளவும். ஜாடியில் மாங்காய், மா இஞ்சி  துண்டுகளைப் போட்டு… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்க வும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து சேர்த்து, நன்கு கலந்துவிடவும்.

பூண்டு தொக்கு
**********************
தேவையானவை: உரித்த பூண்டு – கால் கிலோ, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் – 150 கிராம், மிளகாய் வற்றல் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: பூண்டு, மிளகாய் வற்றல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். சுருள வதங்கி, எண்ணெய் பிரியும்போது இறக்கவும் (விருப்பப்பட்டால், இறக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்).

உப்பு எலுமிச்சை
************************
தேவையானவை: எலுமிச்சம் பழம் – 10, உப்பு – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம் பழத்தை கழுவி, நன்கு துடைத்து, உலர்ந்த பின் துண்டுகளாக நறுக்கி பாட்டிலில் போட்டு, பொடி செய்த கல் உப்பை போட்டுக் கிளறவும். பாட்டிலின் வாயை சுத்தமான வெள்ளைத் துணியால் மூடி, 4-5 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும்.

நாள்பட, நாள்பட உப்பு ஊறுகாய் மேலும் சுவையாக இருக்கும்.

பைனாப்பிள் ஊறுகாய்
*********************************
தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – வெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 100 கிராம், பெருங்காயத்தூள் –  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை: பைனாப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பெருங்காயம் தாளித்து, பைனாப்பிள் துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கடுகு – வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சை சாறு ஊற்றி கிளறவும்.

மார்வாரி எலுமிச்சை ஊறுகாய்
***********************************************
தேவையானவை: எலுமிச்சம் பழம் – 10, உப்பு – 50 கிராம், மிளகுப் பொடி – 20 கிராம், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் கப்.

செய்முறை: முதலில் 2 எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். மற்ற பழங்களை வெட்டி… மிளகுப் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக்  கொள்ளவும். இதை பாட்டிலில் போட்டு, பிழிந்து வைத்த சாறை ஊற்றவும். பாட்டிலை 5-6 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, பின் சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் 4-5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால்… மார்வாரி எலுமிச்சை  ஊறுகாய் தயார்!

பெரிய வெங்காயத் தொக்கு
****************************************
தேவையானவை: பெரிய வெங்காயம் – கால் கிலோ, நல்லெண்ணெய் – 100 கிராம், மிளகாய் வற்றல் – 10, உப்பு – தேவையான அளவு, புளி – பெரிய கோலி குண்டு அளவு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி… கடுகு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும். சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சனி, 28 செப்டம்பர், 2019

30 (முப்பது) வகை போண்டா



30 (முப்பது) வகை போண்டா

 *வெஜிடபிள் போண்டா*

தேவையானவை:

(மேல் மாவுக்கு) கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு 1, கேரட் 1, பீன்ஸ் 4, பட்டாணி ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மல்லித்தழை சிறிது, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

 *தவலை வடை*

தேவையானவை:

பச்சரிசி அரை கப், கடலைப்பருப்பு அரை கப், பாசிப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு அரை கப், ஜவ்வரிசி ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது கால் கப், காய்ந்த மிளகாய் 6, துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.

 *மைசூர் போண்டா*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, மிளகு 2 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு 10, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

 *மசால் வடை*

தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப், சின்ன வெங்காயம் அரை கப், புதினா சிறிது, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 2 பல், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 1, சோம்பு அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் தலா 2.

செய்முறை:

பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

 *மெது போண்டா*

தேவையானவை:

கடலை மாவு 1 கப், டால்டா 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி 1 துண்டு, காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6, ஆப்ப சோடா கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

 *கீரை வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை 1 கட்டு, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.

 *மங்களூர் போண்டா*

தேவையானவை:

மைதா மாவு 1 கப், சற்று புளித்த தயிர் அரை கப், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

 *பொட்டுக்கடலை வடை*

தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப், பச்சரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

 *தாளிச்ச போண்டா*

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப், பச்சரிசி 1 கப், உளுத்தம்பருப்பு முக்கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் அரித்தெடுங்கள்.

 *கல்கண்டு வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி கால் கப், கல்கண்டு ஒன்றேகால் கப், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

 *கார்ன் போண்டா*

தேவையானவை:

சோளம் 2, மைதா 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசியான, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.

 *புதினா- மல்லி வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு முக்கால் கப், கடலைப்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், புதினா அரை கட்டு, மல்லித்தழை அரை கட்டு, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.

பாசிப்பருப்பு போண்டா

தேவையானவை:

பாசிப்பருப்பு 1 கப், துருவிய சுரைக்காய் அரை கப், துருவிய இஞ்சி 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை நன்கு பிழிந்து பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.

 *ஜீரா வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், சர்க்கரை 1 கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள் சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து, பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.

 *கேசரி போண்டா*

தேவையானவை:

(கேசரிக்கு) ரவை அரை கப், சர்க்கரை 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன், சிகப்பு கலர் சிறிது. (மேல் மாவுக்கு) மைதா ஒன்றரை கப், பால் அரை கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கேசரி செய்துகொள்ளவேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள். நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து நன்கு கிளறுங்கள். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்தூள் சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள். மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கேசரி உருண்டைகளை தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

 *புளிப்பு கார வடை*

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8, புளி சிறிய உருண்டை, பெருங்காயம் அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய்
தேவையான அளவு.

செய்முறை:

பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த வித்தியாசமான வடை.

 *மெதுவடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வடித்த சாதம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

 *உருளைக்கிழங்கு போண்டா*

தேவையானவை:

கடலை மாவு 1 கப், ஆப்ப சோடா 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) 1 சிட்டிகை, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள் ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.
பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

 *ஸ்பெஷல் வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், வெங்காயம் அரை கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

 *கலவை பருப்பு வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு கால் கப், பச்சரிசி 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, சீரகம் 1 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 *வெங்காய வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) அரை கப், கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

 *ஜவ்வரிசி போண்டா*

தேவையானவை:

ஜவ்வரிசி 1 கப், நன்கு புளித்த தயிர் 1 கப், கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், பொரித்த கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

 *கார போண்டா*

தேவையானவை:

பச்சரிசி அரை கப், புழுங்கலரிசி அரை கப், துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், சீரகம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

 *தயிர்வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், புளிக்காத புது தயிர் 1 கப், பால் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய் தேவையான அளவு, கேரட் துருவல் 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன்.
செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

 *கோஸ்வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

 *ரச வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.
ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் 2 கப், புளித் தண்ணீர் அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
பொடிக்க: மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).

 *இனிப்பு போண்டா*

தேவையானவை:

ரவை முக்கால் கப், பச்சரிசி மாவு கால் கப், பொடித்த வெல்லம் 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

 *சாம்பார் வடை*

தேவையானவை:

உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை கால் கப், எண்ணெய் தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1, தக்காளி 3, புளி நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, வெந்தயம் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.
பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.
சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

 *பருப்பு போண்டா*

தேவையானவை:

கடலைப்பருப்பு அரை கப், துவரம்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், பாசிப்பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, மல்லித்தழை சிறிது, கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவல் கால் கப், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, பூண்டு 5 பல்.
அரைக்க: சோம்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2.

செய்முறை:

பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

 *இட்லி மாவு போண்டா*

தேவையானவை:

இட்லி மாவு 2 கப், சின்ன வெங்காயம் 1 கப், பச்சை மிளகாய் 3, தேங்காய் துருவல் கால் கப், கறிவேப்பிலை சிறிது, உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைபருப்பு 2 டீஸ்பூன்.

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்து வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.


வெள்ளி, 27 செப்டம்பர், 2019

30 வகை பொடிகள்...!


30 வகை பொடிகள்...!

அடுக்களையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, 'சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும்... சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. இந்த இணைப்பிதழில் 30 பொடி வகைகளை வாரி வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''ருசியை அள்ளித் தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்... வெந்தயப்பொடி, மூலிகைப் பொடி, கொள்ளுப்பொடி, வேப்பம்பூபொடி, நெல்லிக்காய்ப்பொடி என 'வரும் முன் காக்கும்’ வரப்பிரசாதமாக விளங்கும் பொடிகளையும் இங்கே கொடுத்துள்ளேன். இவற்றை செய்து வைத்து, பல நாட்கள் பயன்படுத்தி, பலன்களை அள்ளுங்கள்'' என பரிவுமிக்க தோழியாய் கூறுகிறார் பத்மா.
----------------------------------------------------------------------------------------------------------------
பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
பூண்டுப்பொடி
தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.
---------------------------------------------------------------------------------------------------------------
தேங்காய்ப்பொடி
தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்... இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: மிளகு, சீரகம் - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு - சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: 'சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
கூட்டுப்பொடி
தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்... சுவை அதிகரிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
ரசப்பொடி
தேவையானவை: தனியா - 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்... மணம், ருசி ஆளை அசத்தும்.
----------------------------------------------------------------------------------------------------------------
எள்ளுப்பொடி
தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.
குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) - 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆவக்காய் ஊறுகாய் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு - தலா 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
அங்காயப் பொடி
தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.
-----------------------------------------------------------------------------------------------------------------
நாரத்தை இலை பொடி
தேவையானவை: நாரத்தை இலை - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
-----------------------------------------------------------------------------------------------------------------
திடீர் புளியோதரைப்பொடி
தேவையானவை: புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்... உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------
வெந்தயப்பொடி
தேவையானவை: வெந்தயம் - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்... உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
வேப்பம்பூபொடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து... பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 250 கிராம், தனியா - 500 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், வெந்தயம், மிளகு - தலா 50 கிராம், மஞ்சள் - 2.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.
-----------------------------------------------------------------------------------------------------------------
நெல்லிக்காய் பொடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்... வைட்டமின் 'சி’, இரும்புச்சத்து மிக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------
கொத்தமல்லிப் பொடி
தேவையானவை: பச்சை கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, புளி - பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு
சேர்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
மூலிகைப்பொடி
தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி - தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.
-----------------------------------------------------------------------------------------------------------------
சுண்டைக்காய்பொடி
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ஓமப்பொடி
தேவையானவை: ஓமம் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கொள்ளுப்பொடி
தேவையானவை: கொள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
சட்னி பவுடர்
தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, பொட்டுக்கடலை - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்... உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கீரைப்பொடி
தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.
----------------------------------------------------------------------------------------------------------------
பாயச பவுடர்
தேவையானவை: பிஸ்தா பருப்பு - 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, பால் - தேவையான அளவு.

செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்... திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி மருந்துப்பொடி
தேவையானவை: கண்டதிப்பிலி - 50 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஓமம் - 50 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி - 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 25 கிராம், வால் மிளகு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சித்தரத்தை - ஒரு துண்டு.

செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.
குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.
ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் - நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து... இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
அடைப்பொடி
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தனியாப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
பஜ்ஜி பவுடர்
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து... விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
வடை பவுடர்
தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு - 250 கிராம், மிளகு - 20, காய்ந்த மிளகாய் - மூன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்...!!!