திங்கள், 24 பிப்ரவரி, 2020

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்...


பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்...

*சமைக்க தேவையானவை*

பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு
 துவரம் பருப்பு-150g
 தக்காளி-4
 சின்ன வெங்காயம்-10
 சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் சிறிதளவு
 பெருங்காயத்தூள் -சிறிதளவு
 உப்பு-தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு -அரை ஸ்பூன்
 சீரகம் - அரை ஸ்பூன்
 வெந்தயம் - கால் ஸ்பூன்
 கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு
குறிப்பு
பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.

*அம்மா சமையல் செய்முறை : பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்*

Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பு , பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் ,தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

Step 2.
பின்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும், சாம்பார் தூளையும் சேர்த்து வேக விடவும்.

Step 3.
வெந்தவுடன் உப்பு சேர்த்து பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி

1 கருத்து:

  1. Bally's Casino $21 Million Renovation - JTM Hub
    JT Hub has partnered with JTM Enterprises to produce new 충주 출장마사지 interactive slot machines and other gaming 속초 출장샵 machines for entertainment. 태백 출장안마 The property, located in the heart 구미 출장샵 of Las 안산 출장안마

    பதிலளிநீக்கு