எதிர் உணவுகள்
________
எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!
எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடல்நிலையை பாதிக்கும்.
உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்!
எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.
எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கி
பசலைக்கீரை X எள்
திப்பிலி X மீன்.
தயிர் X மீன் .
திப்பிலி X தேன்.
துளசி X பால்.
தேன் X நெய்.
பால் X புளிப்பான பொருள்கள்.
மோர் X வாழைப்பழம்
இறைச்சி X விளக்கெண்ணெய்
முள்ளங்கி X பால்
அகத்திக்கீரை X ஆல்கஹால்
இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.
மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
சிக்கன்
கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.
கீரை
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
முட்டை
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
காளான்
காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
சாப்பாடு
அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
சமையல் எண்ணெய்
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.
படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்.... கடைப்பிடித்தால் மிக்க நலம்..
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
💊 காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
💊 கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
💊 உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
💊 கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
💊 முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
💊 தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
💊 உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
💊 தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
💊 கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.
🔯 ஆயுர்வேத ரகசியங்கள் 🔯
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்
நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
மூளை
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.
பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.
கண்கள்
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
பற்கள்
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
ரத்தம்
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
ஞ
நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.
சருமம்
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.
நுரையீரல் - இதயம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
வயிறு
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கணையம்
பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.
கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.
கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
கல்லீரல் - மண்ணீரல்
சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்
கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
பாதம், விரல் வலி சரியாகும்.
பரோட்டா தரும் பகீர் ரிப்போர்ட்...!
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்கு சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஓட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறது. இது தரும் ஆபத்துகள் பல. அதன் விவரம் இதோ....
சர்க்கரை நோய்: மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்க பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதய நோய்: இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாக சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையை கூட்டும். அதுவும் குழந்தை பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளவயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
மலச்சிக்கல் : உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கிய பங்குஉண்டு.
குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். காரசாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களை சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமான சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!
குடல் இறக்க நோய்
நன்றி குங்குமம் தோழி
அவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு வந்த சில நாட்களிலேயே கடும் வயிற்று வலிக்கு ஆளாகிறார். செரிமானக் கோளாறு காரணமாக ஏற்படும் சாதாரண வயிற்று வலியாகத்தான் இருக்கும் என நினைத்து அதற்கான சிரப் அருந்துகிறார். அது பலனளிக்கவில்லை. அடுத்ததாக வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்படுகிறது. அதனைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகி மருத்துவரை அணுகுகிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் incisional hernia எனும் குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். சமீபத்தில் மேற்கொண்ட சிசேரியன் அறுவை சிகிச்சையின் காரணமாக இப்பிரச்னை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறுகிறார்.
அறுவை சிகிச்சை நமது நல வாழ்வுக்கு இன்றியமையாதத் தேவை. ஆனால் அதன் பொருட்டு ஏற்படும் பக்க விளைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அவற்றுள் ஒன்றான incisional hernia எனும் குடலிறக்க நோய் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கார்த்திக் குணசேகரனிடம் கேட்டேன்...‘‘குடல் இறக்கம் என்பது குடல் அதன் இடத்திலிருந்து இறங்கி வருதல் மற்றும் சரிந்து வருதல்.
இதில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு வகையான incisional hernia எனும் தொப்புளைச் சுற்றி ஏற்படும் குடல் இறக்கப் பிரச்னைக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்தபின் அந்த இடத்தில் குடல் சரிவதுதான் incisional hernia. சிசேரியன் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான அறுவை சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை என வயிற்றுப்பகுதியில் பெண்களே அதிக அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களினாலும் இப்பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது. கர்ப்பம் தரித்த பின் குழந்தையை தாங்கிக் கொண்டிருப்பதால் கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்படலாம். உடல் பருமன், அதிக பாரம் தூக்குதல், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவற்றாலும் இப்பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பக் காலத்துக்குப் பின்னரே இப்பிரச்னை அதிக அளவில் ஏற்படும்.
அதிக அளவிலான வலி இருப்பதும், குடல் இறங்கியது வீக்கம் போல் வெளியே தெரிவதுமே இதற்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தெரிந்ததும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அலட்சியமாக விட்டு விடவே கூடாது. ஏனென்றால் குடல் இறக்கம் காரணமாக குடல் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் மாட்டிக்கொண்ட குடல் பகுதிக்கு ரத்த ஓட்டம் கிடைக்காமல் அழுகி விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குடல் மாட்டிக் கொள்வதன் காரணமாக கடுமையான மலச்சிக்கலும் ஏற்படும்.
மாத்திரை, மருந்து மூலம் சரி செய்ய முடியாத பிரச்னை என்பதால் அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான தீர்வு. அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோபி என இரண்டு முறைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம். இதன் மூலம் சரிந்திருக்கும் குடலை சரியாக உட்புகுத்தி Mesh என்கிற வலையைக் கொண்டு மூடி விடுவோம். அதன் மூலம் விரைவில் தசை கூடி குடல் இறக்கம் இனியும் ஏற்படாதபடிக்கான வழிவகை செய்ய முடியும். அறுவை சிகிச்சையைக் காட்டிலும் லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது.
லேப்ராஸ்கோபியில் லேசர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதால் வலியும், ரத்தப்போக்கும் குறைவாகவே இருக்கும். ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடலாம். இன்றைக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதால் இதற்கான தீர்வு எளிது. ஆனால் தீர்வை நோக்கி நாம் சீக்கிரம் நகர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அலட்சியம் கூடாது’’ என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் 👈
👇
படியுங்கள்...படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...
பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சித்தர்களின் பரிசு படித்ததில்!!!
தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் . 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும். இது ஒரு அனுபவ உண்மை .
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி
எளிய அழகுக் குறிப்புகள்
1. கருமை நிறம் மாற
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2. முகம் மிருதுவாக
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
3. வியர்வை நாற்றம் போக:
* குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.
* வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
* குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.
* இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
* 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.
4. கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.
5. எடை குறைய
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
6. முடிகளை நீக்க
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.
7. சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
8. தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்
9. சருமம் நிறம் அதிகரிக்க
ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் அரை டீஸ்பூன் பார்லி பவுடர் அரை டீஸ்பூன்
மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.
10. கண்கள் பிரகாசமாக இருக்க
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
11. கருவளையம் நீங்க
ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.
12. மருதாணி நன்கு சிவக்க
மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்.
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.
அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.
=======================
1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.
2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.
4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.
பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் 24 மணி நேரத்தில் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!
👉இயற்கையாகவே பூண்டு ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால் இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது.
ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.
மேலும் இந்த பூண்டானது, நமது உடம்பில் உள்ள ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது.
மருத்துவகுணம் நிறைந்த இந்த பூண்டை வறுத்து சாப்பிடுவதால், 24 மணி நேரத்தில் நமது உடம்பில் ஏராளமான பல அற்புதங்கள் நிகழ்கின்றது.
வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட, ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, நமது உடலுக்கு சிறந்த உணவாக மாறுகிறது.
இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் வருத்த பூண்டு நமது உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படுவதுடன், நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைக்கிறது.
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், நமது உடம்பின் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடச் செய்கிறது.
பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் நமது உடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால் பூண்டு நமது உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்பட்டு, தமனிகளை சுத்தம் செய்கிறது. இதனால் இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, கனமான மெட்டல்கள் நமது உடம்பினுள் நுழைவதை தடுக்கிறது.
எலும்புகளின் வலிமையை அதிகமாக்கி, உடலின் சோர்வுத் தன்மையை போக்கி, உடல் செல்களின் வாழ் நாட்களை நீட்டிக்கச் செய்கிறது.
நீன்ட நாள் நல் ஆயுளேடு வாழ ரகசிய உணவு(மருந்து)
*இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),
உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,
"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,
பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!
சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!
சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!
செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!
சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!
6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!
குறிப்பு: இது மருந்தல்ல!
உணவு!
நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!
முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்..பிறகு பாருங்கள் எப்படிப்பட்ட நன்மை கிடைக்கிறது என்று....
முளை கட்டிய பயிரில் என்ன இருக்கு?
1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
2. அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.
3. நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், செரிமானம் மேம்படுகிறது.
4. புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
5. தானிய ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
6. உடலுக்குத் தேவையான என்ஸைம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது.
7. உடல் எடை குறைக்க உதவுகிறது.
8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்ச்சியை மேம் படுத்துகிறது.
முளை கட்டிய பயிரை எப்படிச் சாப்பிடணும்?
1. பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.
2. வேகவைத்துச் சாப்பிடக்கூடாது.
3. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.
4. முளைகட்டிய பச்சைப் பயறை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிஃபனாகச் சாப்பிடலாம்.
இவர்கள் சாப்பிட்டாலும் ரொம்ப நல்லது
1. சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
2. வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரைக் குணப்படுத்தும்.
ஒரு முறை முயற்சித்து பாருங்கள்...நன்மைகளை அனுபவியுங்கள்...
வயிற்று வலியா?
"""""”"""""""""""""""""""""""""
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?
இதோ சிம்பிள் டிரிக்.
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்....
அதிக உடல் எடை கொண்டவரா நீங்கள் ? கவலை வேண்டாம்.
அதற்காக பணத்தை விரயம் செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில வழிகள். உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்ப்பது தவறான செயல். ஏனெனில் காலை உணவுதான் நம் உடலுக்கு, அன்றைய தினத்திற்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. அவற்றைத் தவிர்ப்பதால் உடல் நலம்தான் பாதிக்கப்படும்.
தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:
* உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். காலை எழுந்தவுடன் 1- 2 டம்ளர். இளம் சூடான தண்ணீருடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்க வேண்டும்.
* வேக நடை, சைக்கிளிங், ஸ்க்கிப்பிங், குறைந்தது 35 நிமிடம் உடற் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.
* காபி, டீ அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அதற்குப் பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீ-யில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.பால் சேர்த்து அருந்த விரும்புவர்கள் பாலை நன்கு 3 அல்லது 4 முறை காய்ச்சி பால் ஆடையை நீங்கிய பின் அருந்தலாம். காரமான உணவுப் பொருள் இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது. இஞ்சி டீயை 2 – 3 முறை குடிக்கலாம்
* டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி ,கேரட் போன்ற கலோரி குறைவான,அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
* காலை உணவு 8.00 – 9.00 மணிக்குள் உண்ண வேண்டும். வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா 3 துண்டு, வெண்ணெய் தடவாத இரண்டு ரொட்டி அல்லது இரண்டு இட்லி.
* மதிய உணவாக 2கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரை, நீர் சத்து நிறைந்த காய்கறிகள் ( வெண்பூசணி,புடலங்காய் ) பருப்பு சேர்த்து கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காமல் இரண்டு கோதுமை சப்பாத்தியை 12.00 – 1.00 மணிக்குள் உண்ண வேண்டும்.
* இரவு உணவு 7.00 – 8.00 மணிக்குள் வேக வைத்த காய்கறிகள் 3கப் அல்லது சூப், பப்பாளி, அன்னாசிப்பழம் அல்லது ஆரஞ்சு 6 துண்டு, கொய்யா 3 துண்டு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும்.உப்புள்ள ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட் போன்றவற்றை தவிர்க்கவும். இரவில் உண்ட பின் சிறிது குறுநடை செய்த பின் உறங்கச் செல்லவும்.
* எப்போதும் உணவு உண்பதற்கு முன்பாக ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால், அதிகமான அளவு உணவு உண்ணாமல், கட்டுபாட்டுடன் உண்ணலாம். இவ்வாறெல்லாம் செய்து வந்தால் நீங்களும் உடல் எடையைக் குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
.........................................
கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி
என்றபோது பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
பாசிப்பயறோ கடலைமாவோ
அரைத்துக்குளி என்ற போது
லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோளல் சுருங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு
ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
இருமலோ தும்மலோ வந்த போது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்த போது
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன் துளசி தூதுவளை
செடி வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ கொண்டு வந்து
தந்த போது தூக்கி எறிந்து சீறி
ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு
கருப்பை பழுதடைந்த பின்பு
ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது
சன்பிளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக்கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு இன்று
வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத
வாழ்வு வந்த பின்பு
செக்கு நோக்கி ஓடுகின்றேன்
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ஆர்ஓ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமான பின்பு ஓடுகின்றேன்
மண்பானை வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.......
படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து மாடி மாடியாய்
குளிரூட்டப்பட்ட அறையில் லட்ச
லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்
வாழ்வில் ஏது சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கோ இருந்து
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.........
......................சிந்தனைத்தமிழ்.
மூத்தோர்சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்..
கிச்சன் டிப்ஸ் – Tips
* முட்டை உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.
* முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து கடைந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.
* மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது.
* மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.
* மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது.
* கையில் எண் ணெய் தடவிக் கொண்டு மீன் சுத்தம் செய்தால், கையில் வாடை இல்லாமல் இருக்கும். அல்லது சுத்தம் செய்த பிறகாவது, கையில் எண்ணெய் தடவ வேண்டும்.
* இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை மிகவும் குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
* இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் வாயு அதிகம் உற்பத்தி செய்யும். எனவே, இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.
* கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. எனவே, கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கக் கூடாது.
கிச்சன் டிப்ஸ் – 2
* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.
* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.
* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.
* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.
* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.
* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.
* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்
* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
* பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங் காக நடைபெறும்.
கிச்சன் டிப்ஸ் – 3
காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.
* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.
* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.
* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.
நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.
அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்
எவ்வாறு செய்யலாம்..?
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?
அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..
அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..
சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.
அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து💪 மாவு..😋
👇 👇 👓 👇 👇
💪இதை தயாரிக்கும் முறை:
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
💪செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.
தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
💪பயன்கள் .
🎭1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
🎭2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
🎭3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
🎭4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
🎭5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
🎭6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
🎭7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
🎭8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
👉குறிப்பு:
5 மாதம் கெடாது.
🎭1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.
🎭2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
👉குறிப்பு :
காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...
📲பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....💪
இட்லி - தமிழரின் ஆதி உணவு (ஒரு ஆய்வுக் கட்டுரை)🍀🍀🍀🍀

இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இட்லியின் வரலாறு:-
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை. இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும்.
இட்லியின் துணை உணவுகள்:-
இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
1.சட்னி
2.சாம்பார்
3.மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
4.சர்க்கரை
5.தயிர்
இட்லியின் வகைகள்:-
இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
1.செட்டிநாடு இட்லி
2.மங்களூர் இட்லி
3.காஞ்சிபுரம் இட்லி(செய்முறை)
4.ரவா இட்லி
5.சவ்வரிசி இட்லி
6.சேமியா இட்லி (செய்முறை)
7.சாம்பார் இட்லி
8.குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
9.ஃபோர்ட்டின் இட்லி (fourteen idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
10.சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
இட்லி மாவு தயார் செய்யும் விதம்:-
தேவையான பொருட்கள் :-
1.புழுங்கல் அரிசி - 400 கிராம்
2.உளுத்தம் பருப்பு - 100 கிராம்
3.உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
1.ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
2.அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
3.அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
4.பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
5.இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
6.புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.
இட்லிச் சட்டி ஒரு பார்வை :-
இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும்.
அந்தச் சட்டி வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களுடன், நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி உடன் அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டு இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.!!!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
#வரக்கொத்தமல்லி (Coriander-தனியா) --- அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ...
தனித்தனியாக மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
நாட்டு மருத்துவம் பெண்களுக்கு மட்டும்*
பெண்ணின் உடல் நிலை சரியாக உள்ளதா என
கண்டுபிடிக்க ஓரே வழி அவர்கள் மாத விலக்கு சரியான கால கட்டங்களில் வருகிறதா என பார்த்தால் போதும்
அந்த மாத விலக்கு பிரச்சனை அதை எவ்வாறு தீர்ப்பது.
#_மாதவிடாய்:.
மாதவிலக்கு விஷயத்தில் பல பெண்களுக்கும் பிரச்னை. சிலருக்கு சீக்கிரமே வருவதும், சிலருக்கு தள்ளித் தள்ளி வருவதுமாக ஆளாளுக்கு பிரச்னைகள்.
*பூப்பெய்திய பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்குகிறவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது ஏன்?
யாருக்கெல்லாம் பரிசோதனையும், சிகிச்சைகளும் அவசியம்?
*‘‘கர்ப்பப் பையில உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களால கர்ப்பப் பை திசுக்கள் இயங்கி, மாதவிலக்கு வருது!!"
இந்தச் செயலுக்கு #சினைமுட்டைப்பையோட இயக்கமும், #பிட்யூட்டரி#சுரப்பியோட இயக்கமும் தேவை.
*மாதவிலக்கு தள்ளிப் போகவோ, குறிப்பிட்ட நாளைவிட முன்னதாகவே வரவோ முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறு.
அதுக்கடுத்த முக்கிய காரணம் உடல் பருமன்.
ரத்த சோகை, தைராய்டு,
சினைப்பை நீர்க்கட்டி,
மன அழுத்தம்,
தூக்கமின்மை,
கிருமித் தொற்று,
கர்ப்பப் பை கட்டி,
சீதோஷ்ண நிலை வேறுபாடு
வேற சில காரணங்களாலும், மாதவிலக்கு சுழற்சி முறை தவறலாம்.
* 28 முதல் 30 நாள்களுக்குள்ள மாதவிலக்கு வந்தா, அது நார்மல். 25 நாளைக்குள்ளயோ, 35 நாள்களுக்குப் பிறகோ வந்தா, அது அசாதாரணம். காரணங்களைக் கண்டுபிடிச்சா, இந்தப் பிரச்னையை மாத்திரைகள் மூலமே சரி பண்ணலாம்.
*உடல் பருமன் காரணமா இருந்தா, எடையைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தாலே, மாதவிலக்கு சுழற்சி தானா சரியாகும். ரத்த சோகை மற்றும் தைராய்டு காரணமா இருந்தா, அதுக்கான சிகிச்சைகள் அவசியம். தொற்றுக் கிருமிக்கும் சிகிச்சை முக்கியம்.
*மாதவிலக்கு சுழற்சி சரியில்லாதவங்க, ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவுக்கான சோதனை, ரத்தம் உறையற தன்மைக்கான சோதனை, தைராய்டு, ஹார்மோன் சோதனைகளை செய்யணும். தேவைப்பட்டா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்து பார்க்கலாம்.
*சினைப்பை கட்டி மற்றும் கர்ப்பப் பை கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டா, அதை சரியாக்க, இன்றைய நவீன மருத்துவத்துல மருந்துகளும், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகளும் இருக்கு.
*மேலே சொன்ன டெஸ்ட்டுகள்ல எந்தப் பிரச்னையும் இல்லாம, வெறும் ஹார்மோன் மாறுதல்களால மாதவிலக்கு சுழற்சி மாறிப் போனா, அதுக்கு சிகிச்சைகள் தேவையில்லை. பெரும்பாலும் வயதுக்கு வந்த புதுசுல இப்படி இருக்கும்.
*அதே மாதிரி 40 வயசுக்குப் பிறகு, மெனோபாஸ் வரைக்கும் உண்டாகிற மாறுதல்களுக்கும் பெரிய சிகிச்சைகள் தேவைப்படாது. அடிக்கடி மாதவிலக்கு வந்தாலோ, அதிக ரத்தப் போக்கு இருந்தாலோ, அலட்சியப்படுத்தாம உடனே சிகிச்சை எடுத்துக்கணும்.
*மெனோபாஸுக்கு பிறகு ரத்தப் போக்கு இருந்தாலும், அது புற்றுநோய்க்கான அறிகுறியா இருக்கலாம்னு சந்தேகிச்சு, பரிசோதனையையும்,சிகிச்சைகளையும் எடுத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
#மாதவிலக்கு
#சீராக_வர
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன
வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்
இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட்டுக்கிட்டு வா..
மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு 3 மாசத்துக்கு தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தா மாதவிலக்கு பிரச்சனை காணாம போயிடும்..
இந்த சூப்ப சாதாரண நாட்கள்ள கூட மற்ற பெண்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தரும்..
* #ஹோர்மோன் #பிரச்னை
உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும்.
இதற்கு #முள்ளு_முருங்கைஇலையையும் #கல்யாண#முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!_
🥣🥣🥣🥣🥣🥣🥣🥣
🍎 தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
🍊 சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
🍋வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
🥑 பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
🥥. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
🍏மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
🍅சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
🍉பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.
🍏கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
🍓நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
🍈அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
🍉தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
🍋ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
🍓மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
🍐தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
🍎கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
🌿கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
🍎காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
🍊பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
🌿வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
🥝பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
அசத்தல் டிப்ஸ்
............................
🍎சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
🍊. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
🍓ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
🍋சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
🍏விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
எதுக்கு எது நிவாரணம்?
🥝மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
🥑உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
🍅பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
🍏கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
🍎அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
🍊தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
🍋குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
🍌மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
🍉விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
🍇காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
🍓உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
🍒வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
🍑உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
🍍வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.
🥕🍎🍅🌰🥔🍑🍒🍈🥝🥑🥑
இதயத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் புதினா – பூண்டு குளிர்பானம்
புதினா இலை – 50 கிராம்
வேக வைத்த பூண்டு – 20 கிராம்
எலுமிச்சைச் சாறு – 50 மி.லி
ஏலக்காய் – 3 எண்ணிக்கை
தண்ணீர் – 200 மி.லி
அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, 4 தேக்கரண்டி தேன் சேர்த்து சுவையாக அருந்தவும். இதனை காலை அல்லது மதிய உணவின் இணை உணவாகக் கொண்டால் உடல் பருமன், வாயுக்கோளாறுகள், மலச்சிக்கல், இதய நோய்கள் தீரும்.