கேழ்வரகு கூழ்...கம்பங்கூழ்...சம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் ரெசிபி
கிராமங்களில் வயல் வேலைக்குப் போகிறவர்களின் பொழுது அதிகாலையிலேயே தொடங்கிவிடும். இருட்டுப் பிரியும் நேரத்தில்,சூரியன் உதிக்காத காலையில் ஊரைத் தாண்டி இருக்கும் வயலுக்குப் போக வேண்டும். அப்போதுதான்,சூரியன் உச்சிக்கு வந்து சுட்டெரிக்கும் முன்னர் வீடு திரும்ப முடியும்.

தேவையான பொருட்கள்:
ராகி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 1 டீஸ்பூன்
வெல்லப்பாகு - 2 டீஸ்பூ

செய்முறை:
- முதலில் ராகியை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மறுநாள் காலையில் மீண்டும் ராகியைக் கழுவி,மிக்ஸியில் போட்டு 2-3 முறை அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் துணியை விரித்து, அத்துணியில் அரைத்த ராகியை ஊற்றி நன்கு பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வேண்டுமானால்,அரைத்த ராகியை இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளலாம்.
- பின்பு ஒரு வாணலியில் அந்த பாலை ஊற்றி, பால் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கரண்டி கொண்டு நன்கு கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.
- ஒரு கட்டத்தில் அந்த பால் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது நெய் மற்றும் சர்க்கரை பாகு சேர்த்து நெருப்பை குறைத்து,மீண்டும் நன்கு கிளறி விட்டு இறக்கி பரிமாறினால், ராகி கூழ் ரெடி...

இந்தத் தொகுப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா Share பண்ணுங்க...