புதன், 18 டிசம்பர், 2019

"சுரைக்காய்க்கு உப்பு இல்லை" என்று சொல்கிறார்கள்


"சுரைக்காய்க்கு உப்பு இல்லை" என்று சொல்கிறார்கள்


சுரக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டு வந்து விடும்.

எனவே சுரக்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது என்பது.

எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் , யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக கிருமித் தொற்று உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், கிரியேட்டினின் எனப்படும் உப்பு அதிகமாக வெளியேறுபவர்கள், சிறுநீர் வழியாக புரோட்டின் வெளியேறுபவர்கள், மொத்தத்தில் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுரக்காய் ஒரு அருமையான மருந்து.

எனவே சுரைக்காயைப் பச்சையாகவோ, வேக வைத்து ,பொரியல் செய்தோ, அவியல் செய்தோ சாம்பாரில் பயன்படுத்தியோ அல்லது சூப் வடிவத்திலோ தொடர்ந்து சாப்பிட்டு வருவது சிறுநீரகக் கோளாறு உள்ள அனைவருக்கும் மிகவும் நல்லது.

எனவே சுரக்காய் சாப்பிடுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

வியாழன், 14 நவம்பர், 2019

30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி


30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி!

 ''உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்... பல்வேறு உடல் நலக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் காய்கறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். எண்ணெய், காரம் இரண்டையும் முடிந்த அளவு குறைத்துள்ளேன். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் உடல் எனும் வங்கியில் ஆரோக்கியம் எனும் செல்வம் டெபாசிட் ஆகிக்கொண்டே இருக்கும்'' என்று அக்கறையும், அன்பும் பொங்கி வழியும் விதத்தில் கூறுகிறார்.

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி

தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.

வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் - 2, வெண்டைக்காய் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபட்டதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை புளிக்கவிடவும். பிறகு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு கரண்டி மாவை விட்டு, தேவைப்பட்டால் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரித்து சுட்டெடுத்தால்... வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை தாயார். இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை.

குறிப்பு: இது, மூளை நன்கு வேலை செய்ய உதவுவதுடன், பெரியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும்.

வெண்டைக்காய் ஃப்ரை

தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு - 6 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், அரிசி மாவு, மைதா மாவு - தலா 2 டீஸ்பூன்,  சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை நடுத்தரமான அளவில் நறுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுடன் வெண்டைக்காயை சேர்த்து, சிறிதளவு நீர் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, 4 டீஸ்பூன் சூடான எண்ணெயை வெண்டைக்காய் கலவையில் விட்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவையை காயும் எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இது, அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க வைக்கும்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை: உருவிய கறிவேப்பிலை - 2 கப், எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: கறிவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம்போக நிழலில் உலரவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலையை  மொறுமொறுப்பாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். பிறகு, இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நைஸாகப் பொடிக்கவும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்தப் பொடி, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்றது.

குறிப்பு:  கறிவேப்பிலை, தலைமுடியின் கருமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.

பூண்டு  மணத்தக்காளி குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு - அரை கப், மணத்தக்காளி வற்றல் - 6 டீஸ்பூன், வெல்லம், புளி - சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும். பூண்டு பாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இந்தக் குழம்பை இளம் தாய்மார்கள் (பிரசவித்த பெண்கள்) சாப்பிட... தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். மேலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால்... கட்டுப்பாட்டுக்குள் வரும்.

தேங்காய்ப் பால் ஆப்பம்

தேவையானவை: புழுங்கலரிசி - ஒன்றரை கப், பச்சரிசி - அரை கப், ஜவ்வரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை உளுந்து - 4 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 கப், மீடியமான தேங்காய் - ஒன்று, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் நைஸாக, கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். தேங்காயைத் துருவி நைஸாக அரைத்து, மூன்று முறை பால் எடுத்து, மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கவும். வெல்லத்தை அரைத்த மாவில் சேர்த்து தோசை மாவு பதத்துக்குத் தயார் செய்யவும்.

தவாவை அடுப்பில் வைத்து ஒன்றரை கரண்டி மாவை தோசை போல ஊற்றி, ஓரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். 2 நிமிடத்தில் வெந்துவிடும். திருப்பிப் போடக் கூடாது. வெந்த ஆப்பத்தை எடுத்து அதன் மேலே இரண்டு கரண்டி தேங்காய்ப் பாலை விட்டுச் சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: தேங்காய்பால் வயிற்றுப் புண்ணை குணமாக்கும்...  வயிற்றுப் பூச்சிகளைக்கூட ஒழிக்கும்.

முட்டைகோஸ்  கேரட் பொரியல்

தேவையானவை: முட்டைகோஸ் - 250 கிராம், கேரட் - 50 கிராம், பயத்தம் பருப்பு - ஒரு கரண்டி, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பயத்தம்பருப்பை உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து தாளித்து... நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து வதக்கி... சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, துருவிய கேரட், மஞ்சள்தூளை முட்டைகோஸில் சேர்த்து வதக்கி, தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இந்தப் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட... குடற்புண் குணமாகும்.

கருணைக்கிழங்கு குருமா

தேவையானவை: கருணைக்கிழங்கு - 200 கிராம், கேரட் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 3 பல், சாம் பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், சிறிய தக் காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோம்பு, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 4.

செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல் சீவி, சுத்தம் செய்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட் டையும் அதேபோல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும். அரைக்கக் கொடுத் துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு காய்கள் குழைந்துவிடாமல் வேக வைக்கவும். வெந்து கொண்டிருக்கும் கலவையில், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கலாம்.

குறிப்பு: மூலநோய் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

கருணைக்கிழங்கு அல்வா

தேவையானவை:கருணைக்கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், நெய் - 50 கிராம், பால் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு - 6, அல்வா பவுடர் (கடைகளில் கிடைக்கும்) - ஒரு சிட்டிகை.

செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல் சீவி, கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இதனை பச்சை வாசனை போக நெய்யில் வதக்கி, பாலில் வேகவிட்டு, சர்க்கரை சேர்க்கவும், பிறகு, ஏலக்காய்த்தூள், அல்வா பவுடர் சேர்த்து... சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், நெய்யின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி,  பிஞ்சு சுண்டைக்காய் - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 5 பல், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை (சேர்த்து) - அரை கப், தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

வறுத்துப் பொடிக்க: பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்ந்து - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ள வும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி... வறுத் துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் சுண்டைக்காயை இரண்டாகவும் நறுக்கி வதக்கி, வேக வைக்கலாம். வயிற்றுப்பூச்சி மற்றும் குடற்பூச்சிகளை ஒழிக்கும் குணம் சுண்டைக்காயிடம் உண்டு.

சுண்டைக்காய்  நெல்லிக்காய் வதக்கல்

தேவையானவை: பெரிய நெல்லிக் காய் - 8, பிஞ்சு சுண்டைக்காய் - அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிள காய் - 3, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: அரை டீஸ்பூன் எண் ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நெல்லிக்காய்களை வதக்கவும் (8 நிமிடத்தில் வதங்கிவிடும்). சூடு ஆறியதும் விதைகளை நீக்கி, ஒவ் வொரு நெல்லிக்காயையும் எட்டாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இத னுடன் உப்பு, மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் சேர்க்கவும். பிறகு, வறுத்துப் பொடித்து வைத்ததை சேர்த்து, நெல்லிக்காய், பெருங் காயத்தூள், சேர்த்து, நல்லெண் ணையை விட்டு கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு: இது, ஞாபகசக்தி பெருக மிகவும் பயன்படும்.

பீட்ரூட் அசோகா அல்வா

தேவையானவை: பீட்ரூட் - ஒரு கிலோ, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள், - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, கோவா - 100 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம், கோதுமை மாவு - 5 டீஸ்பூன்.

செய்முறை:  பீட்ரூட்டைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ள வும். இதனை 50 கிராம் நெய்யில் சுருள வதக்கி, ஒரு டம்ளர் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குழைவாக வேகவிடவும். கோதுமை மாவையும் வெறும் வாணலியில் வறுத்து பயத்தம்பருப்பில் சேர்த்து வேகவிடவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து, கோவாவை உதிர்த்துப் போடவும். இடை இடையே நெய் சேர்க்கவும். வேக வைத்த பீட்ரூட்டை இதில் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி னால்... பீட்ரூட் அசோகா அல்வா தயார்.

குறிப்பு:  ரத்தசோகை குணமாகவும், ரத்தம் விருத்தி அடையவும் பீட்ரூட் மிகவும் உதவும்.

வாழைப்பழம்  திராட்சை கஸ்டர்ட்

தேவையானவை: வாழைப்பழம் - 3, காய்ந்த திராட்சை - 4 டீஸ் பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை: ஒரு கரண்டி பாலை மிதமாக சூடாக்கி, கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை சேர்த்துக் கலக்க வும். ஓரிரு நிமிடங்களில் குழம்புப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். இதனை ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவிடவும். வாழைப்பழத்தை நறுக்க வும். ஃப்ரிட்ஜில் இருந்து பால் கல வையை எடுத்து அதில் வாழைப்பழம். காய்ந்த திராட்சை சேர்த்துக் கலக்கவும். குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

குறிப்பு: இது மலச்சிக்கலுக்கு கை கண்ட மருந்து. மலச்சிக்கல் உள்ள போது இதனை அருந்தினால்... உட னடி நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம்  பேரீச்சம்பழம் பாயசம்

தேவையானவை: வாழைப்பழம் - 6, பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - அரை கப், வெல்லம் - 100 கிராம், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து, வடிகட்டவும். அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு பாகு வைக்கவும். மில்க்மெய்டை அதில் ஊற்றி, இரண்டுமாகச் சேர்ந்து வந்ததும், முதலில் நறுக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து, பிறகு வாழைப் பழத்தையும் சேர்த்து இறக்கவும் (ஒரு கொதி  வந்தாலே போதும். பழங்கள் சூட்டிலேயே வெந்து விடும்). இந்த வாழைப்பழ - பேரீச்சை பாயசத்தை விரும்பாத வர்கள் மிகவும் அரிது.

குறிப்பு: இது, மலச்சிக்கலை யும் நீக்கும்... ரத்த விருத்திக்கும் உதவும்.

சுரைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கெட்டி மோர் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப்.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, சீரகம் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சுரைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைவேக்காடு பதத்துக்கு வேக வைத்து எடுக்கவும். கெட்டி மோரில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கி... உப்பு, சர்க்கரை, அரை டம்ளர் நீர் சேர்த்து அடிபிடிக்காமல் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த சுரைக்காயையும் சேர்த்து நுரை பொங்கி வந்ததும் இறக்கி... தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்பு: இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... உடல் இளைக்கும். சுரைக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சுரைக்காய் சப்ஜி

தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3 டீஸ்பூன், நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - பூண்டு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெந்தயக் கீரை - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடலைப்பருப்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து குழைந்து விடாதவாறு வேகவிட்டு, தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து... அரை டம்ளர் நீர் விட்டு, சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும், முக்கால் பதத்துக்கு வெந்ததும் வெந்தயக்கீரை, வேக வைத்த கடலைப்பருப்பை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: இது, உடலை உடல் பருமனைக் குறைப்பது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.

பாகற்காய் ரசம்

தேவையானவை: நீட்டு பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - கொட்டைப்பாக்கு அளவு, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, வெந்தயம்  - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பாகற்காயை நீள வாக்கில் நறுக்கி... உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும். பாகற்காய் வெந்து, புளிக் கரைசல் ரசம் பதம் வந்ததும்... தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்து சேர்த்து இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவ வும். பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்க வேண்டும் என்றால், இதனை கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்கலாம். இதை சாதத்துக்கு ரசமாகவும் பயன்படுத்தலாம்.

குறிப்பு: இது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அருந்த வேண்டிய கைகண்ட மருந்து.

வேர்க்கடலை  தேங்காய்  எள் பொடி

தேவையானவை: வறுத்து, தோல் உரித்த வேர்க்கடலை - ஒரு கப், துரு விய தேங்காய் - கால் கப், வறுத்த எள் - 4 டீஸ்பூன்,  முந்திரிப் பருப்பு - 5, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண் ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுக்கவும். தேங்காயை வறுத்து இதனுடன் சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பின்னர், வேர்க்கடலை, எள் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். முந்திரியை வறுத்து துண்டுகளாக்கி சேர்த்து... நன்றாக கலந்துவிடவும். இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

உதிர் உதிராக வடித்த சாதத்துடன் தேவையான பொடி சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

குறிப்பு: உடல் இளைத்தவர்கள் இந்தப் பொடியைத் தினசரி பயன் படுத்தினால், உடல் பருக்கும்.

வாழைப்பூ  முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை: சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப், சுத்தம் செய்த முருங்கைக்கீரை - அரை கப், மோர்  - ஒரு கரண்டி,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுந்து, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைப்பூவை பொடியாக நறுக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, தக்காளி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். பிறகு, முருங்கைக் கீரையையும் சேர்க்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாமாகச் சேர்ந்து வதங்கியதும் இறக்கவும்.

குறிப்பு: இது... கர்ப்பப்பை பலம் பெறவும், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கவும் உதவும்.

வாழைப்பூ  முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை: சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப், சுத்தம் செய்த முருங்கைக்கீரை - அரை கப், மோர்  - ஒரு கரண்டி,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுந்து, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைப்பூவை பொடியாக நறுக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, தக்காளி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். பிறகு, முருங்கைக் கீரையையும் சேர்க்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாமாகச் சேர்ந்து வதங்கியதும் இறக்கவும்.

குறிப்பு: இது... கர்ப்பப்பை பலம் பெறவும், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கவும் உதவும்.

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: வாழைத்தண்டு - 2 துண்டுகள், பயத்தம்பருப்பு - 6 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கெட்டி மோர் - ஒரு கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள: தேங்காய் துரு வல் - 6 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ் பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். வாழைத் தண்டை நார் எடுத்து, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும், வேக வைத்த பயத்தம்பருப்பை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அதில் சேர்த்து, எல்லா மாகச் சேர்ந்து கூட்டுப் பதம் வந்த தும் இறக்கிவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... சிறுநீரகக் கற்கள் கரையும்.

வாழைத்தண்டு  முள்ளங்கி சாம்பார்

தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, துவரம்பருப்பு - 50 கிராம், முள்ளங்கி - 2, சின்ன வெங் காயம் - 4, மஞ்சள்தூள்- சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய கொத்த மல்லித் தழை - 2 டீஸ்பூன், எண் ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழைய வேகவிடவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், சாம் பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாழைத்தண்டை நார் நீக்கி வில்லை களாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பாதி வெந்ததும், நறுக்கிய முள்ளங்கியையும், சின்ன வெங்காயத் தையும் வதக்கி சேர்க்கவும். காய்கள் வெந்ததும், வெந்த துவரம்பருப்பை சேர்த்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத் துள்ளவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்த்து... கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைப்பூ பஜ்ஜி

தேவையானவை: சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப்பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்). எண்ணெய் - தேவையான அளவு.

கரைத்துக் கொள்ள: கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை, இட்லி மாவு - 3 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கரைத்துக் கொள்ளக் கொடுத்தவற்றை நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத் துக்குக் கரைத்துக் கொள்ள வும். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு வாழைப்பூவாக மாவில் முக்கி எடுத்து, பொரித் தெடுக்கவும்.

குறிப்பு: இட்லி மாவுக் குப் பதில் 2 டீஸ்பூன் காய்ந்த உளுத்தமாவையும் சேர்க்கலாம்.

மிதி பாகற்காய் மசாலா

தேவையானவை: மிதி பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம், புளி - கொட்டைப் பாக்கு அளவு, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள: உரித்த சின்ன வெங்காயம் - 10, உரித்த பூண்டு - 10 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3.

வதக்கிக் கொள்ள: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, மிதி பாகற்காயையும் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்தில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை வதக்கி, அரைத்த விழுது, பாகற்காய் கலவையை சேர்க்கவும். பிறகு, சிறிதளவு உப்பு போட்டு, எல்லாமாகச் சேர்ந்து கொதி வந்ததும், இறக்கி... கொத்தமல்லித் தழையை தூவவும். இது, காக்ரகாய மசாலா என்ற பெயரில் ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிஷ் ஆகும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

முடக்கத்தான் கீரை தோசை

தேவையானவை: சுத்தம் செய்து, நறுக்கிய  முடக்கத்தான் கீரை - 2 கப், புழுங்கல் அரிசி - ஒரு  கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றுசேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு தொட்டு சாப்பிட ஏற்றது .

குறிப்பு: 'முடக்கு அறுத்தான்’ என்பதுதான் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட... கை, கால், மூட்டு வலி குணமாகும்.

கத்திரிக்காய் மசாலா பொரியல்

தேவையானவை: பிஞ்சு கத்திரிக் காய் - கால் கிலோ, பெரிய வெங் காயம் - 2, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கி... கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, சிறிதளவு நீர் விட்டு காய் குழைந்துவிடாமல் வேகவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:கோடைக்காலத்தில் அம்மை நோய் வராமல் இருக்க இளம் வயதினர் அவசியம் சாப்பிட வேண்டிய பொரியல் இது.

ஜிஞ்சர் புலாவ்

தேவையானவை: துருவிய இஞ்சி - 10 டீஸ்பூன், பாசுமதி அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் (அ) நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாசுமதி அரிசியை ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் நெய் (அ) எண்ணெய் விட்டு, துருவிய இஞ்சியை வதக்கி, சீரகம் சேர்த்துக் கலந்து, வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்தால்... ஜிஞ்சர் புலாவ் தயார்.

குறிப்பு: பசியெடுக்கவும், சாப்பிட்ட உணவு செரிக்கவும் இஞ்சி கைகொடுக்கும்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இது நல்ல வருமானத்தை தரக்கூடியது... try பண்ணி பாருங்க...!! சாக்லேட்...!!


இது நல்ல வருமானத்தை தரக்கூடியது... try பண்ணி பாருங்க...!! சாக்லேட்...!!


சிறுவரில் தொடங்கி பெரியவர் வரை சாக்லேட்டை விரும்பாதோர் இன்று எவருமே இருக்கமாட்டார்கள். அதற்கு காரணம் இதன் அளவற்ற சுவையும், கண்ணை கவரும் வடிவமுமே ஆகும். அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம். இதற்கான தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் போதும் இந்த தொழிலில் நமக்கென ஒரு தனி இடத்தை சுலபமாக அடைந்து விட முடியும்.

தேவையான பொருட்கள் :

டிரிங்கிங் சாக்லேட்

கோகோ பவுடர்

மில்க்மெய்ட்

பால்பவுடர்

தயாரிக்கும் முறை :

🍫 பவுடராக உள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சல்லடையில் சலித்த பின், கலந்து கொள்ள வேண்டும். பிறகு மில்க்மெயிடை சேர்ந்து கலக்க வேண்டும்.

🍫 மில்க்மெயிடுக்கு பதிலாக தண்ணீரும் சேர்க்கலாம், தண்ணீர் சேர்க்கும்பொழுது சிறிது சிறிதாக தெளித்து பிசைய வேண்டும், தண்ணீருக்கு பதிலாக மில்க்மெயிட் சேர்த்தால் சுவைகூடும்.

சுலபமாக வீட்டில் இருந்தே சம்பாதிக்க என்ன வழி? என்று யோசித்து கொண்டிருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட செயலிதான் சுயதொழில்கள் செயலி...


🍫 இந்த கலவை கெட்டியாக இருக்கவேண்டும், சிறிது தளர்வாக இருந்தால் பால்பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.

🍫 பின்னர் இக்கலவையை நம் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களில் ஊற்றி இதனை குளிரூட்டியில் வைக்க வேண்டும்.

🍫 சாக்லேட் நன்றாக கெட்டியானதும் வெளியே எடுத்து காகிதங்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார்.

விற்பனை செய்யும் முறை :

டிபார்ட்மெண்டல் ஸ்டோர், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் மூலம் விற்பனை செய்யலாம். தரமும், சுவையும் அதிகரிக்க அதிகரிக்க ஆர்டர்கள் குவிந்து கொண்டே இருக்கும்.


சனி, 9 நவம்பர், 2019

30 வகை சத்தான உணவு அடம் பிடிக்கும் சுட்டிகளும் ஆசை ஆசையாய் சாப்பிடும்....


30 வகை சத்தான உணவு
அடம் பிடிக்கும் சுட்டிகளும் ஆசை ஆசையாய் சாப்பிடும்....

சுட்டிக் குழந்தைகளின் குறும்பு, கரும்பாக இனிக்கும். ஆனால், சாப்பிடாமல் அவர்கள் பிடிக்கும் அடமோ... மிகமிக கசக்கும். அம்மாக்களுக்கு இருக்கும் சவால்களில் மிக முக்கியமானது, குழந்தைகளைச் சாப்பிட வைப்பதுதான். 'என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது... என்னதான் கஷ்டப்பட்டு சமைச்சுக் கொடுத்தாலும் வாயில வைக்க மாட்டேங்குது' - இப்படிப் புலம்பாத தாய்க்குலங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

''வளரும் குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட், புரோட்டீன், விட்டமின், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் தேவைப்படுகின்றன, இத்தகையச் சத்துள்ள உணவுகளைச் சரியாக கொடுக்காவிட்டால், குழந்தையின் 'ஐ. க்யூ' வளர்ச்சி பாதிப்படையும் என்பது குழந்தைகள் நல ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதைக் குறிவைத்தே... ரெடிமேட் உணவு வகைகள் பலவும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன. 'வாங்கி வெந்நீர்ல கலந்தா வேலை முஞ்சுது' என்பதற்காக அவற்றை வாங்கி அடுக்கி வைப்பதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், உங்கள் குழந்தைகள் விஷயத்தில் விளையாடலாமா? டப்பாக்களைவிட, நீங்களே சமைத்து, கையோடு ஃபிரெஷ்ஷாகக் கொடுக்கும் போதுதான், சத்துக்கள் யாவும் பூரண மாகக் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்'' என்று சொல்லும் பத்மா, குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தருவதற்கென்றே காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் உணவு வகைகளை தேடிப்பிடித்து செய்து பார்த்து இங்கே பட்டியலிட்டுள்ளார். குழந்தையுடன் உங்கள் உணவுத் திருவிழா தொடங்கட்டும்.

என்ஜாய்..!

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

1. குழந்தைகள் முடிவெடுக்கட்டும்:

எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க "குழந்தைகளிடையே உருவாகும் போட்டி "யை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2. சமையலில் குழந்தைகள் உதவட்டும்:

நீங்கள் சமைக்கும்போது உங்கள் குழந்தைகளின் உதவியை நாடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில் உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

3. வித்தியாசமாக சாப்பிடட்டும்:

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?" "சீஸ் சாதத்துடன் சாப்பிடக் கூடாது!" இப்படி சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

4. பசிக்கும் போது சாப்பிடட்டும்:

நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால் அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும்.

5.  ஷ்ஷ்ஷ்!! தெரியாமலே போகட்டும்:

பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் கலந்து ருசி மாறிவிட்டாலும் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு தக்காளி சாஸ், சீஸ் போன்றவை!

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றினால் ஒரே நாளில் அல்லது வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுங்கள். ஒரு மாதத்தில் நீங்களே மாற்றத்தைப் பார்க்கலாம்.


சத்து மாவு மிகவும் உடல் ஆரோகியத்தையும் ,வலுவையும் கொடுக்கும் .

சத்து மாவு தயாரிக்க தேவையானவை :

1.ஜவ்வரிசி – 50 கிராம்
2.காபூலி சென்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – 150 கிராம்
3.வேர்க்கடலை (அ) நிலக்கடலை - 100 கிராம்
4.வறுத்த கடலைப்பருப்பு - 100 கிராம்
5.கோதுமை - 100 கிராம்
6.அரிசி - 50 கிராம்
7.ராகி - 150 கிராம்
8.உலர்ந்த பச்சை பட்டாணி – 50 கிராம்
9.உளுத்தம்பருப்பு – 50 கிராம்
10.காய்ந்த மொச்சைக்கொட்டை – 50 கிராம்
11.மக்காச்சோளமணிகள் - 200 கிராம்
12.கொள்ளு – 50 கிராம்
13.இந்த நான்கையும் வறுக்கக்கூடாது
பாதாம்பருப்பு – 200 கிராம்,
முந்திரிப்பருப்பு – 200 கிராம்,
பிஸ்தாப்பருப்பு – 200 கிராம்,
ஏலக்காய் – 25 கிராம்

செய்முறை:

மேல் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக சூடான கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் குளிர வைத்து எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு மெல்லிய ரவை பதத்தில் அரைத்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில்  போட்டு வைத்துக் கொள்ளவும். பத்து மாதம் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு பால் சேர்த்தோ, சர்க்கரை சேர்த்தோ கொடுக்கலாம்.


இனிப்பு ராகி தோசை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 200 கிராம்,
வெல்லம் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு - 4 டீஸ்பூன்,
நெய் - ஒரு கப்

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு:

கேழ்வரகில் கார்போஹைட்ரேட்டும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே உடல் வளர்ச்சிக்குத் தேவையானவை

கேழ்வரகு கூழ்

தேவையானவை:
கேழ்வரகு - கால் கிலோ,
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா 25 கிராம்,
பொட்டுக்கடலை,
கம்பு - தலா 100 கிராம்.
முந்திரி,
பதாம் - தலா 10,
ஏலக்காய் - 5,
பார்லி - 4 டேபிள்ஸ்பூன்,
நெய், சர்க் கரை - தலா ஒரு டீஸ்பூன்,

செய்முறை:

கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும். வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும். இவற்றுடன் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடுபடுத்தவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கிளறவும். சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும். இதனுடன் நெய், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:
அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

தேங்காய்ப் பால் - தினை மாவு பணியாரம்

தேவையானவை:

தேங்காய் - அரை மூடி,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
தினை மாவு - 200 கிராம்,
பொடித்த வெல்லம் - ஒரு கப்,
வாழைப்பழம் - 1,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தினையை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.

பணியாரக்கல்லில் நெய் தடவி, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

தினை மாவு ஊட்டச்சத்து மிகுந்தது. பழம் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம்.


வெஜிடபிள் பருப்பு ரைஸ்

தேவையானவை:

அரிசி - கால் கிலோ,
துவரம்பருப்பு - 100 கிராம்,
கீரை இலை - ஒரு கைப்பிடி,
முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - தலா 50 கிராம், நெ
ய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து குக்கரில் குழைவாக வேக வைக்கவும். கீரை, முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்த சாதம், பருப்புடன் காய்களை சேர்த்து நன்றாக மசித்து, நெய் விட்டு கொடுக்கவும்.

குறிப்பு:

சிறுவயது முதல் எல்லா காய்களையும் கொடுத்துப் பழக்கினால் 'காய் எனக்குப் பிடிக்காது' என்று சொல்லி அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். காய்கள், பருப்பு ஆகியவை குழந்தைகளுக்கு பசியைத் தாங்கச் செய்யும். உடல் வளர்ச்சிக்கும் நல்லது.

வெந்தய தோசை

தேவையானவை:

இட்லி அரிசி - கால் கிலோ,
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்,
நெய் - டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு, தோசையாக வார்க்கவும்.

குறிப்பு:

வெந்தயம் வயிற்றுக்குக் குளிர்ச்சி... உடல் சூட்டைத் தணிக்கும்.

வெஜிடபிள் இட்லி

தேவையானவை:

இட்லி அரிசி - கால் கிலோ,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
துருவிய கேரட்,
முட்டைகோஸ் - தலா ஒரு கப்,
நறுக்கிய குடமிளகாய் - ஒன்று,
நெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை தனித்தனியாக ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த மாவை ஒன்றாகக் கலந்து, அதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.

கடாயில் நெய் விட்டு, காய்கறிகளை வதக்கி, இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

ஃபோர்ட்டீன் இட்லி எனப்படும் சிறு இட்லி தட்டுகளில் நெய் தடவி, ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன் மாவை ஊற்றி, வேக வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள்.


மல்டி ஃப்ரூட் ஜூஸ்

தேவையானவை:

மாதுளம்பழம், ஆப்பிள்,
சாத்துக்குடி - தலா ஒன்று,
திராட்சை - 10,
சர்க்கரை - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மாதுளம்பழத்தை தோல் உரித்து, முத்துக்களை எடுத்துக் கொள்ளவும். ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சாத்துக்குடியின் சுளைகளை உரித்துக் கொட்டை நீக்கிக் கொள்ளவும். திராட்சைப் பழம், விதை இல்லாததாக வாங்கிக் கொள்ளவும்.

இவை எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை வடிகட்டி சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

எல்லாப் பழங்களையும் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். குழந்தைகளுக்கு இதனை தினமும் ஒருவேளை கொடுத்தால் எல்லா விட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

கீரை பருப்பு மசியல்

தேவையானவை:

அரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு கப்,
முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பு, கீரை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். அதில் கொஞ்சம் நெய் விட்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

உணவில் தினமும் ஒரு கீரை, பருப்பு சேர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான புரோட்டீன், விட்டமின், கால்சியம் சத்துகள் ஒருசேரக் கிடைக்கின்றன.

பருப்பு ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்,
பூண்டு - 4 பல்,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்,
சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன்,
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குழைய வேக விடவும். பூண்டைத் தோல் உரித்து நன்கு நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பூண்டு தாளித்து, புளியைக் கரைத்து அதில் விடவும். பொடியாக நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். வேக வைத்த பருப்பை தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு, வாயுத் தொல்லை வராமல் தடுக்கும்.


ஃப்ரூட் தயிர் சாதம்

தேவையானவை:

அரிசி - கால் கிலோ,
திராட்சை - 100 கிராம்,
மாதுளம் முத்துக்கள் - ஒரு கப்,
வாழைப்பழம், ஆப்பிள் - தலா ஒன்று,
புளிக்காத தயிர் - ஒரு கப், முந்திரி - 10.

செய்முறை:

அரிசியைக் குழைய வடித்து, தயிர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம் முத்துக்கள் போட்டுக் கலந்து, அதன் மேல் முந்திரி வறுத்துப் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

குழந்தைகளுக்கு விருப்பமான பழங்கள் எதுவாயினும் தயிர் சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.


மாதுளை ஜூஸ்

தேவையானவை:

மாதுளம் பழம் - மூன்று,
சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: மாதுளம் பழத்தைத் தோல் உரித்து உதிர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

தினம் ஒரு மாதுளம் பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால், விட்டமின் குறைபாடு வராது... உடல் உஷ்ணமும் தணியும்.


வெஜிடபிள் சூப்

தேவையானவை:

துருவிய கேரட், முள்ளங்கி,
முட்டைகோஸ் - தலா 1 கப்,
மிளகுத்தூள் கால் டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
வெண்ணெய் - கால் டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கேரட், முள்ளங்கி, முட்டைகோஸைத் துருவி, இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி, உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி போட்டுக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

சாப்பாட்டுக்கு முன்பாக இளம்சூட்டில் இந்த சூப்பைக் குடித்தால், உடனே பசி எடுக்கும். மேலே பிரெட் பொரித்து போட்டோ அல்லது ரஸ்க்தூள் போட்டோ சாப்பிடலாம். பசி இல்லை என்று சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்லது.


வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவையானவை:

இட்லி மாவு - அரை கிலோ,
கேரட், முட்டைகோஸ் துருவல் - தலா 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
குடமிளகாய் - தலா 1 கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துருவிய கேரட், முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்க்கவும். அதனை இட்லி மாவுடன் கலந்து சிறிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு:

சூடாகச் சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இதற்கு புதினா சட்னி சிறந்த காம்பினேஷன்.


கோதுமை ரவா உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை - கால் கிலோ,
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று,
பீன்ஸ் 10, கடுகு, கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு - தேவையான அளவு,
எலுமிச்சம்பழம் - அரை மூடி,
கொத்தமல்லி (நறுக்கியது) - கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, வாணலியில் உள்ள கலவையில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதித்துக் கொண்டிருக்கும்போது கோதுமை ரவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:

இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!


புதினா ரைஸ்

தேவையானவை:

புதினா - ஒரு கட்டு,
பாசுமதி அரிசி - கால் கிலோ,
பச்சை மிளகாய் - 1,
பெரிய வெங்காயம் - 1,
கடுகு - கால் டீஸ்பூன்.
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புதினாவை ஆய்ந்து இலைகளைப் பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். பாசுமதி அரிசியை களைந்து ஒரு பங்குக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போடவும். சிறிது நெய்யில் கடுகு தாளித்து, நறுக் கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. சாதத்தில் கொட்டி, வதக்கிய புதினா, மீதமுள்ள நெய், உப்பு போட்டுக் கலக்கவும்.

குறிப்பு:

நெய் மணக்கும் புதினா, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புதினா, மருத்துவ குணம் அடங்கியது.



மிளகு - பூண்டு ரசம்

தேவையானவை:

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சாம்பார் பொடி - கால் டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டவும். மிளகுத்தூள், பூண்டு, சீரகம், துவரம்பருப்பை லேசாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதை புளித் தண்ணீ ரில் கலந்து உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்துடன் இந்த ரசத்தைச் சேர்த்து நெய் விட்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும்.


பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை:

பொட்டுக்கடலை - கால் கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்துத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகை தண்ணீரில் கொஞ்சம் விட்டால் உருண்டு வரவேண்டும். அதுதான் சரியான பாகு பதம்! அதில் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

குழந்தை களுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் ஸ்நாக்ஸ்களுக்குப் பதிலாக வீட்டில் செய்யப்படும் இது போன்ற எளிய தின் பண்டங்களைக் கொடுப்பது, குழந்தை களின் வயிற்றுக்கும் நம் பர்ஸ§க்கும் நல்லது.


வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை:

இடியாப்பம் - 5, பெரிய வெங்காயம்,
கேரட், குடமிளகாய் - தலா ஒன்று,
பீன்ஸ் - 10, நெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி (நறுக்கியது) - கைப்பிடி அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

குறிப்பு:

இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.


தேங்காய் அவல்

தேவையானவை:

கெட்டி அவல் - கால் கிலோ,
தேங்காய் துருவல் - 1 கப், பொடித்த
வெல்லம் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய் - 1 ஸ்பூன்.

செய்முறை:

அவலை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

காலை, மாலை நேர டிபனாக இதைக் கொடுத்தால் நீண்ட நேரம் பசி தாங்கும். வெறும் அவலில் தண்ணீர் அல்லது பால் விட்டுப் பிசறி, வெல்லம், தேங்காய் சேர்த்தும் கொடுக்கலாம்.


வெரைட்டி வெஜிடபிள் கூட்டு

தேவையானவை:

கேரட், குடமிளகாய், சௌசௌ, உருளைக்கிழங்கு - தலா ஒன்று,
பீன்ஸ் 10,
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
மிளகு 10 , தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கேரட், பீன்ஸ், குடமிளகாய், சௌசௌ, உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் உப்பு சேர்த்து வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், தனியா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பப்ருபை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பருப்பையும், அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் கூட்டை போட்டு பிசைந்து சாப்பிட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.


பார்லி பாத்

தேவையானவை:

பார்லி - 200 கிராம்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
நெய் - டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் - ஒரு கப்.
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் - 1,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், இஞ்சியை போட்டு நன்கு வதக்கவும்,

நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டுக் உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை:

கோதுமை பிரெட் - ஒரு பாக்கெட்,
கேரட் துருவல் - ஒரு கப்,
பெரிய வெங்காயம், தக்காளி,
குடமிளகாய் - தலா 1,
இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
வெண்ணெய் - 100 கிராம், பு
தினா இலை - ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி பேஸ்ட், வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பிரெட்டில் தடவவும். அதன்மேல் பரவலாக வதக்கிய காய்களை வைத்து, கொத்தமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து கொடுக்கவும்.

குறிப்பு:

கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.


ரோல் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ,
கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் - தலா ஒரு கப்,
இஞ்சி பேஸ்ட் - அரை டீஸ்பூன்,
புதினா - ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

குறிப்பு:

குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு இப்படிச் செய்து கொடுத்தால், கையில் வைத்தபடியே சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.


ஓமப்பொடி

தேவையானவை:

அரிசி மாவு - கால் கிலோ,
கடலை மாவு - 200 கிராம்,
ஓமம் - 25 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஓமத்தை ஊற வைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய், உப்பு, அரைத்த ஓம விழுது... இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு:

இது, ஓம வாசனையுடன் மாலை நேர டிபனுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஓமம் ஜீரணத்துக்கு நல்லது.


பருப்புத் துவையல்

தேவையானவை:

துவரம் பருப்பு - 100 கிராம்,
கொள்ளு - 4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 6,
காய்ந்த மிளகாய் - 1,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பு, கொள்ளு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு:

கொள்ளு இடுப்புக்கு பலம் தரும். சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கலாம். சூடான சாதத்தில் நெய், பருப்புத் துவையல் சேர்த்துப் பிசைந்து கொடுக்கலாம்.

ட்ரைஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ,
பேரீச்சம்பழம் - 4, பாதாம்,
முந்திரி - தலா 6,
பிஸ்தா, உலர்ந்த திராட்சை - தலா 10 ,
நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பேரீச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து பிசையவும். இதனை சப்பாத்தியாக இட்டு, இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

குறிப்பு:

இது, புரோட்டீன் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.


புரோட்டீன் சுண்டல்

தேவையானவை:

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்,
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்,
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்,
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயறுகளையும் (வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு) உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து, மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கிக் கொடுக்கவும்.

குறிப்பு:

இது புரோட்டீன் சத்து நிறைந்தது. கேரட், வெள்ளரி சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.


கேரட் அல்வா

தேவையானவை:

கேரட் - கால் கிலோ,
சர்க்கரை - 300 கிராம்,
பால் - கால் லிட்டர்,
நெய் - 6 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 10,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவித் துருவி, பாலில் வேக விடவும். வெந்து கெட்டியானவுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்தில் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறவும். இறக்குவதற்கு முன் நெய் சேர்க்கவும்.

குறிப்பு: கேரட்டில் விட்டமின் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பாசிப்பருப்பு பொங்கல்

தேவையானவை:

அரிசி, பாசிப்பருப்பு - தலா 200 கிராம்,
முந்திரிப்பருப்பு - 10,
இஞ்சி - சிறு துண்டு, மிளகுத்தூள் (ஒன்றிரண்டாக உடைத்தது),
சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
நெய் - 100 மி.லி,
கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.

சிறிது நெய்யில் இஞ்சி, மிளகுத்தூள், சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும். கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்க வும். இரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். மீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பாசிப்பருப்பு வயிற்றுப் புண் வராமல் தடுக்கும். மிதமான காரம் கொண்ட சட்னி, இந்தப் பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷன்.


குழல் புட்டு

தேவையானவை:

புட்டு மாவு - 200 கிராம்,
தேங்காய் துருவல் - ஒரு கப்.
நேந்திரம்பழம் - 1 (நறுக்கியது).

செய்முறை:

புட்டு மாவை வெந்நீர் விட்டுப் பிசறி, அதனுடன் தேங்காய் துருவலைக் கலக்கவும். புட்டுக் குழாயில் தேங்காய் கலந்த மாவு, அடுத்து வாழைப்பழத் துண்டுகள், அடுத்து மாவு என நிரப்பி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு:

நேந்திரம் பழம் உடலுக்கு குளிர்ச்சி

வெள்ளி, 25 அக்டோபர், 2019

தீபாவளி லேகியம் செய்வது எப்படி ?


#தீபாவளி_லேகியம்
#செய்வதெப்படி?

1. சுக்கு                - 50 கிராம்
2. சித்தரத்தை  - 50 கிராம்
3. கண்டதிப்பலி  - 25 கிராம்
4. அரிசி திப்பிலி  - 5 கிராம்
5. ஓமம்                 - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை  - 50 கிராம்
7. மிளகு                              - 50 க்ராம்
8. கிராம்பு                      - 20 கிராம்
9. ஜாதி பத்திரி             - 10 கிராம்
10. விரளி மஞ்சள்         * 10 கிராம்
11. வெல்லம்                 - 250 க்ராம்
12. நெய்                          - 200 க்ராம்
13. தேன்                         - 100 கிராம்


#செய்முறை

சமைந்த பெண்ணை மனையில் அமர்த்த, நவராத்திரிக்கு புட்டு செய்வது போல அல்ல; தீபாவளி லேகியம் செய்வது. கொஞ்சம் சிரமம். தீவிரமானது. பொறுமையும் கை வலுவும் அவசியம்.

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். அந்நேரம் கல்யாணமாகி வந்த புதிதில் எதற்கும் குறுக்கில் வந்துநின்ற மாமியாரை மனதில் நிறுத்தவும்.

வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, தெய்வமகளை அல்லது கூட்டுச்சதியைச் சொல்லித்தரும் டப்பிங் சீரியலைப் பார்க்கவும். இரண்டாவது இடைவேளையின் போது எழுந்துவந்து வெல்லத்தை உடைத்து தண்ணீரில் தண்ணீரில் போட்டுவிட்டுப் போகவும். சீரியல் முடிந்தவுடன், ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும்.

முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும்
மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இரும்பு உலக்கைக் கொண்டு இடித்து சலிக்கவும் என்றால், எதுக்குடா தீபாவளி என்றோ, க்ருஷ்ணா ஸ்வீட்ஸிலோ, மாம்பலத்திலோ வாங்கிப்பேன் என்று சொல்வீர்கள்.

சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும்.
கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும். கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் தினம் அடுப்படி காரியங்கள் பார்த்தால் ஒழிய மணிக்கட்டை வலிக்கும். விரல்கள் சட்டுவத்தைப் போட்டுவிட்டுப் போய்விடு என்று சொல்லும். ஆனால், மனோ வைராக்கியத்தோடு அதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு, தொடர்ந்து எண்ணெய் குறையக் குறைய விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.

கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. பொருள் நஷ்டமாகும். உங்களால் முடியாது எனில் ஆத்து சமையல் மாமியை செய்து தரச் சொல்லவும்.

வியாழன், 24 அக்டோபர், 2019

யார் கண்டுபிடித்தது_மூன்று வேலை நேரத்துக்கு சாப்பிடணும் என்று.


யார் கண்டுபிடித்தது_மூன்று வேலை நேரத்துக்கு சாப்பிடணும் என்று.


உலகின் முதல் மனிதன் NON Vegetarian தான் இதை யார் மறுக்கிறீர்கள்???

இன்று நாம் உண்பது போல....

காலை இட்லி/ தோசை
மதியம் மூன்று தட்டு சாதம்
இரவு கொத்து பரோட்டா
என்றா ஆதிமனிதன் சாப்பிட்டான்...???

விடியற்காலை எழுந்து நம்மைப்போன்று டீ/காபி குடித்து விட்டு வேலையைத் தொடங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இருக்கவில்லை..

காலை எழுந்ததும் தன் குழுவுடன் சேர்ந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு செல்வான்.

வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. வேட்டையாடிய விலங்கை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவதற்குள் சூரியன் மறைந்து விடும்..

சூரியன் அடங்குமுன் உறங்கச் சென்றுவிட்டான்.

ஆகவே ஆதிமனிதன் உண்டது தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே என்பது தெரிகிறது.

ஆதிமனிதர்களின் உணவுப்பழக்க வழக்கங்களை அப்படியே இன்றளவும் தொடர்ந்து வரும் பழங்குடி இனங்களை ஆராய்ந்து பார்த்தால்,

நம்மை தாக்கும் நீரிழிவுநோய் / உயர்ரத்தஅழுத்தம்/ இதயநோய்கள் பற்றி இன்னும் அறியாமலே வாழ்கின்றனர்.

இன்றும் ஆப்பிரிக்காவில் வாழும் #மசாய் எனும் பழங்குடியின மக்கள் தினமும் முழு கொழுப்பு #பால், #முட்டை , #இறைச்சி போன்ற கொழுப்பு மட்டுமே அதிகமாக உண்டு வாழ்கின்றனர்.

நமக்கு வந்த நோய்களான சுகர்/ ப்ரஷர் / இதயகுழாய்_அடைப்பு / பி.சி.ஓ.டி
யாவும் அவர்களை அண்டவில்லையே ஏன்?????????

இட்லி தோசை சாப்பிடும் நம்மால் வேட்டை மிருகங்களான சிங்கங்களை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ளமுடியுமா??

உணவில் இருக்கிறது அத்தனையும்.

அவனது வாழ்க்கை முறையில் நமக்கு கிடைக்கும் பாடம் ,தினமும் ஒரு வேலை மட்டுமே முழுக்கொழுப்பு உணவுகளே அவன் உண்டான்..

நாம் மூன்று வேலையும் உணவு உண்டே ஆக வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதி ஏதும் இருக்கிறதா ?? இல்லை....

நமது தேவைக்கு ஏற்ப , பசிக்கு ஏற்ப உணவு உண்டால் போதுமானது. அது நிச்சயம் மூன்று வேலை உணவாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கார்போஹைட்ரேட்டை பிரதான உணவாக உண்ணும் நமக்கு ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் ஒருமுறை பசி எடுக்கிறது.

அதற்கு நடுவிலும் பலருக்கு பசி எடுக்கிறது . அதை அடக்க இருக்கவே இருக்கிறது நொறுக்குத் தீனிகள்.

ஆனால் கொழுப்புணவை பிரதானமாக உண்ட நம் முன்னோருக்கு தினமும் ஒரு வேலை உணவே போதுமானதாக இருந்திருக்கின்றது.

#உதாரணம் : மாமிசப்பச்சினிகளான சிங்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிங்கம் தனக்கு உணவாய் மான்/ஆடு/மாடுகளை உண்ணும்.

ஒருமுறை உணவுண்டால் அதற்கு மீண்டும் பசி எடுக்க பல நாள் ஆகிறது.

பசி அடங்கிவிட்டால் மீண்டும் பசி வரும் வரை அது வேட்டைக்குச் செல்லாது.

நமது இயற்கைப்படி ,கொழுப்புணவு வயிற்றுக்கும் உடலுக்கும் நிறைவாக இருக்கிறது.

மாவுச்சத்து வயிற்றுக்கு நிறைவாய் இருப்பதில்லை.
அதனால் மீண்டும் மீண்டும் பசி எடுக்கிறது.
பசியெடுத்தால் மனிதன் தலைகால் புரியாமல் உண்கிறான்.

*எடை கூடுகிறது. நோய்கள் தானாய் வருகிறது..*

செவ்வாய், 22 அக்டோபர், 2019

30 தீபாவளி ஸ்பெஷல் #ஸ்வீட்ஸ் #காரம்


#இதோ #உங்களுக்காக #வகைவகையான 30 தீபாவளி ஸ்பெஷல் #ஸ்வீட்ஸ் #காரம்..


 *🍓லட்டு🍓*

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

 *கடலைப்பருப்பு சுய்யம் 💚*

தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ

மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

 *தேங்காய் சுகியன் 🍏*

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

 *உக்காரை 🌺*

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

 *மூங்தால் ஃப்ரை 🌻*

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இது ஒரு மாதம் வரை கெடாது.

 *சன்னா தால் ஃப்ரை 🍀*

தேவையானவை: கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 *டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி*

தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.

இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

 *மைசூர் பாகு 🌷*

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

 *காராபூந்தி 🌷*

தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

 *இஞ்சி முரப்பா👇*

தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.

குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

 *பாம்பே காஜா👇*

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

 *மோகன் தால்👇*

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!

குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

 *கோதுமை அல்வா👇*

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்

செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

 *தேன்குழல்👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

 *பாதாம் டிலைட்👇*

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

 *மகிழம்பூ முறுக்கு👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

 *சீப்பு ரோல்ஸ்👇*

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

 *ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்👇*

தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்), எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

குறிப்பு: நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

 *ஜாங்கிரி👇*

தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.

துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

 *ரவா லாடு*

தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

 *ஓமப்பொடி👇*

தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

 *டூ இன் ஒன் லட்டு👇*

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

 *டபுள் கலர் மைதா கேக்👇*

தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,

செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

 *கேஷ்யூ ஃப்ரை👇*

தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

 *#பாதுஷா...*

#தேவையானபொருட்கள்...

மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

#செய்முறை...

உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

 *#பாதாம்மில்க்அல்வா...*

#தேவையானபொருட்கள்...

பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.

#செய்முறை...

பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

 *#காராசேவ்...*

#தேவையானபொருட்கள்...

கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

#செய்முறை...

கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

 *#பந்தர்லட்டு...*

#தேவையானபொருட்கள்...

கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

#செய்முறை...

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

 *#டிரைஃப்ரூட்அல்வா...*

#தேவையானபொருட்கள்...

 விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

#செய்முறை...

பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

 *#அசோகாஅல்வா...*

#தேவையானபொருட்கள்...

பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

#செய்முறை...

சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 *#நவதானியஅப்பம்...*

#தேவையானபொருட்கள்...
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப்,  பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

#செய்முறை...

நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன்  பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

 *#வீட்டிலேயே #பஜ்ஜி #மாவு #தயாரிப்பது #எப்படி?*

கடலைப்பருப்பு – 2 கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து
 அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.

எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

30 வகையான தீபாவளி ஸ்பெஷல் அல்வா வகைகள்


30 வகையான தீபாவளி ஸ்பெஷல் அல்வா வகைகள்

*1கேரட் பால் அல்வா*


குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால் அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். செய்முறை இதோ…

தேவையானவை

மசித்த கேரட் – ஒரு கப்
பால் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

* கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.

* கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு கிளற வேண்டும்.  கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵


 *🌹2 திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி*

🍱தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

நெய் - தேவையான அளவு

நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு

 🍴செய்முறை:

இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு.

கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.🌹

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


 *3 ஆப்பில் ஹல்வா.:*

தேவையான பொருட்கள்.:
நல்ல இனிப்புள்ள சிகப்பு ஆப்பிள் – 3
நெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
மில்க் பௌடர் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
முந்திரி - 8

செய்முறை.:
முதலில் ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு மிக்ஸியில் ஆப்பிள் துண்டுகளை போட்டு நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.

அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு முந்திரியை துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.

அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.

மேலே சிறிது நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.

பிறகு அதனுடன் மில்க் பௌடர், சர்க்கரை நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பிறகு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

பிறகு ஹல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் மேலே முந்திரியை தூவி பரிமாறவும்.

சுவையான ஆப்பில் ஹல்வா ரெடி.


🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈


 *4 கரும்புச்சாறு கேரட் அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
கேரட் துருவல், கரும்புச்சாறு - தலா ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான நட்ஸ் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை.:
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி கேரட் துருவலைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.

பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து இதனுடன் கரும்புச்சாறு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி நன்கு சுருள வேகவிடவும்.

கடைசியில் விருப்பமான நட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் கரும்பு செழித்து வளரும்.


⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱


 *🌹5 பச்சரிசி அல்வா*

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பச்சரிசி மாவு3 கப்
கடலை பருப்பு 1 கப்
வெல்லம் ஒன்றரை கப்
நெய் தேவைக்கேற்ப
முந்திரி15
ஏலக்காய் பொடி4 சிட்டிகை
செய்முறை :

  அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுக்கவும்.

  ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு குழையாமல் ஒரளவு திடமாக இருக்க வேண்டும். வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.

  பருப்பு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்து வரும் வேலையில் கொதிக்க வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும்.

  பிறகு முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். இப்போது பச்சரி அல்வா தயார்.🌹

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴


 *🌹6 கேழ்வரகு அல்வா*

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது சத்தான கேழ்வரகு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 300 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

நெய் - தேவையான அளவு

ஏலக்காய் பொடி - சிறிதளவு

முந்திரி பருப்பு - 100 கிராம்

செய்முறை :

🍚 கேழ்வரகு மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். சர்க்கரையை காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும்.

🍚 அதன் பின்பு திராட்சை, முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். வடிகட்டிய சர்க்கரை பாகில் மாவு கலவையை கலக்கி வேக விடவும். இதில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் அல்வாவை கொட்டவும். பின்பு துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையான கேழ்வரகு அல்வா தயார்.🌹

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵


 *7 .ராகி பூசணிக்காய் அல்வா.:*

தேவையானபொருட்கள்.
கேழ்வரகு மாவு – ¼ கிலோ,
வேர்க்கடலை - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை,
முந்திரி – 10,
சர்க்கரை - ¼ கிலோ,
நெய் – ½ கப்,
வெள்ளைப் பூசணி - 100 கிராம்,
பால் - ஒரு கப்.

செய்முறை.;
முதலில் கேழ்வரகு மாவை சுத்தம் செய்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வறுத்த கேழ்வரகை  ஆறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும்..

கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய வெள்ளை பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேக வைக்கவும்.

இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும்.

பின்னர் வேர்கடலை ,முந்திரி ,திராட்சை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான ராகி பூசணிக்காய்  அல்வா ரெடி.

ராகியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் எலும்புகள் பலமடையும்.அலர்ஜி,ஒவ்வாமை,போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு குறையும்.


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


 *🌹8. கேரட் அல்வா சுவையாக செய்ய வேண்டுமா ?*

👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.

👉 ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

👉 ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.

👉 அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.

👉 காராபூந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.

👉 கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

👉 கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

👉 முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.

👉குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.🌹

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐


 *9. திருவையாறு ஆண்டவர் கடை அசோகா அல்வா*

பாசிபருப்பு நன்றாக வேக வேண்டும் என்பது மிக முக்கியமானது அப்பொழுது தான் அல்வா மிருதுவாக இருக்கும்.

ஆண்டவர் கடை அசோகா அல்வா என்பது நெல்லை இருட்டு கடை அல்வாவின் தங்கை என்று கூறலாம்.

சும்மா ஆரஞ்சு கலர்ல பளபளபன்னு நெய்யில் அல்வாவை முழுவதும் மின்ன இடை இடையே நெய்யில் வறுத்த முந்திரியும்  திராச்சையும் எட்டி பார்க்க ;

கோதுமையும், பாசி பருப்பும் அதை வழுவழுவென்று ஆக்கி இருக்க என்ன அல்வா தண்ணீரில் மிதக்கிறதா அல்லது நெய்யில் நீச்சல் இருகிறதா என்று நினைக்கும் படியாக ஒரு வாய் போட்டாலே சும்மா ஜிவ்வூனு சுவை உடம்பு முழுவதும் சுவை நரம்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதை ஏற்ற வேண்டும். அதே போல் நாவில் வைத்த உடன் வழுக்கி கொண்டு வயிற்றை தஞ்சமடைய வேண்டும்.

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு  1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
பசு நெய் 1/4 கப் + 3 மேஜைக்கரண்டி
சர்க்கரை 1 1/2 கப்
ஏலகாய் தூள் 1/4 தேக்கரண்டி
கேசரி பொடி 1 சிட்டிகை
முந்திரி பருப்பு 15

செய்முறை

1. ஒரு வடச்சட்டியில் பாசிபருப்பை நன்றாக மணம் வீசும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை வறுக்ககூடாது

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு உடன் 1 1/2  கப் தண்ணீர் ஊற்றி நன்றாக மசியும் வரை வேக வைக்க வேண்டும்.

3. அதை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.

4. இப்பொழுது வடச்சட்டியில் 1 1/2 மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டுகோங்க அது நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை சேர்த்துகோங்க பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

5. மீதமுள்ள காய்ந்த நெய்யில் கோதுமை மாவை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக மற்றும் மணம் வீசும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

6. கோதுமை மாவின் பச்சை வாசனை போனதும் அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பாசிபருப்பு கலவையை சேர்த்துகோங்க .

7. இச்சமயத்துல அதில் சர்கரையை மெதுவாக சேர்த்துகோங்க மிதமான தீயில் அதை கிளறுகையில் கலவை கொஞ்சம் தண்ணீர் பதத்திற்கு வந்து விடும்.

7. இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய சிறுதீயிலேயே கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

8. அதில் கேசரி பொடியை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.

9. இப்பொழுது அல்வா கலவை திக்காக மாறும் சமயத்துல அதில் மீதமுள்ள அனைத்து பசுநெய்யையும் சேர்த்துகோங்க , அதனுடன் ஏலகாய் தூள் மற்றும் நெய்யில் பொன்னிறமாக வறுக்கபட்ட முந்திரி பருப்பை சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும்.

10. உங்கள் கைகளில் அல்வாவை எடுத்தால் அது உங்கள் கைகளில் ஒட்டகூடாது அது மட்டுமல்ல நெய் அல்வா கலவையில் இருந்து பிரிந்து வரும். அதுவே அடுப்பை அணைக்க சரியான பதமாகும்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


 *10. நாவில் கரைந்தோடும பாம்பே அல்வா | சோள மாவு அல்வா*

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

செலவும் குறைவு😊செய்வதும் எளிது
தேவையானவை:

வெள்ளை சோள மாவு  –  1 கப்
சர்க்கரை                      –      2 கப்
நெய்                              –      1/4 கப்
முந்திரி,பாதாம் நறுக்கியது  –      1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு.           - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி        – 1 சிட்டிகை
கேசரி பவுடர்              –      1 சிட்டிகை

செய்முறை:

1.முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன்   
2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல்  கரைத்து வைக்கவும். 

2.பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

3.பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் .

4.பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகமல் பார்த்துக் கொள்ளும்.

5.சர்க்கரையானது நன்கு கரைந்து,சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளரவும்.

6.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.

7.அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில்  முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.

8.ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான சோளமாவு | பாம்பே அல்வா ரெடி!!

🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓



 *11. சுவையான மாம்பழ அல்வா*

கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்.

பின்ன‌ர் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும்.

அத‌ன்‌பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு. ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா ரெடி!


📕📕📕📕📕📕📕📕📕📕


 *12. கோதுமை அல்வா*

தேவையானவை:

கோதுமை - 2 கப், பாதாம் பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம் (நெய்யில் சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும்), நெய் - 2 கப், சர்க்கரை - 5 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கோதுமையை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து பால் எடுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு 3 முறை பால் எடுக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலெடுத்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். கோதுமைப் பாலில் தெளிந்த நீரை இறுத்துவிடவும்.

அடிகனமான வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கெட்டிக் கம்பிப் பாகாகக் காய்ச்சவும். அரைத்த பாதாம் பருப்பைக் கோதுமைப் பாலுடன் சேர்த்து, வாணலியிலுள்ள சர்க்கரைப் பாகில் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து கரைத்து விட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து சுருண்டு வரும் சமயம் முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


📘📘📘📘📘📘📘📘📘📘


 *13. பாதாம் அல்வா*

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பாதாம் பருப்பு1 கப்
முந்திரிப் பருப்பு10
சர்க்கரை1 கப்
பால்1டேபிள் ஸ்பூன்
நெய் அரை கப்
ஏலப்பொடி 3 டீஸ்பூன்
குங்குமப் பூ1 சிட்டிகை
கேசரி கலர்2 சிட்டிகை
வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

  பாதாம் பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பாதாமை தோலுரித்துக் கொள்ளவும்.

  பின் இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும். பருப்பும் சர்க்கரையும் சேர்ந்தவுடன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, கரைத்து கலவையில் சேர்க்கவும்.

  கலவை இறுக ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு கலவை நன்றாக இறுகி நெய் வெளியே வரும்போது இறக்கி வெள்ளரி விதை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான பாதாம் அல்வா தயார்.

📙📙📙📙📙📙📙📙📙📙


 *14. அவல் - ஜவ்வரிசி பால் அல்வா*

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்

ஜவ்வரிசி - 2 கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

மில்க்மெய்டு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

குங்குமப்பூ - தேவைப்பட்டால் சிறிது.

பால் - ஒரு கப்

முந்திரி, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1. ஜவ்வரிசையை முதலில் வறுத்துக் கொள்ளவும்.

2.அதில் கணிசமான அளவை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

3.பிறகு நெய் விட்டு அவலை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

4.பிறகு வறுத்த ஜவ்வரிசி, பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

5. பிறகு வறுத்த அவலை போடவும். மில்க்மெய்டை இப்போது சேர்க்கவும்.

6.பிறகு அல்வா போல் சற்றே கெட்டியாக வந்தவுடன் ஏலாக்காய்த் தூளைச் சேர்த்து இறக்கவும்.

7.வேண்டுமெனில் முந்திரியை போட்டுக் கொள்ளலாம்.

📗📗📗📗📗📗📗📗📗📗



 *15. பாசிப்பருப்பு அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், ஜவ்வரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு கப்,
சர்க்கரை - 2 கப்,
சிவப்பு ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு.

செய்முறை.:
பாசிப்பருப்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.

அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட் கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து,  நன்றாகக் கிளறிவிடவும்.

நெய்யை விட்டுக்கொண்டே மேலும் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் பதித்து வைத்தால் பாசிப்பருப்பு அல்வா ரெடி.

இதை துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.


📒📒📒📒📒📒📒📒📒📒


 *16. ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா*

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு    -    200 கிராம்
சர்க்கரை    -    200 கிராம்
நெய்    -    50 கிராம்
முந்திரி    -    10
திராட்சை    -    10
குங்குமப்பூ    -    சிறிதளவு
பால்     -    100 மிலி.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை மேலோட்டமாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். முந்திரி, திராட்சை இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி நெய்விட்டு  வறுத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாசிப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, பால், குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் வெண்ணெய் பதத்துக்கு அரைத்துக்  கொள்ளுங்கள்.

சர்க்கரையில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பி பதத்துக்கு வந்ததும் பாசிப்பருப்பு விழுதைப் போட்டு, சிறிது, சிறிதாக  நெய்விட்டு அடிப்பிடிக்காமல் கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்குங்கள். மணமும் சுவையும்  நிறைந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா ரெடி!

📓📓📓📓📓📓📓📓📓📓


 *17. குக்கர் அல்வா*

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 100மில்லி
வெஜிடபிள் ஆயில் - 100மில்லி
முந்திரி பருப்பு - 50கிராம்
கேசரி கலர் - 1சிட்டிகை
செய்முறை :
1.கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
2.அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.
3.குக்கரின் உள்ளே இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மாவு கரைத்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மாவை வேக வைக்க வேண்டும்.
4.இரண்டு விசில் வந்த உடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
5. 5நிமிடம் கழித்து குக்கரின் உள்ளே உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற விட வேண்டும்.
ஆறிய மாவை கட்டி இல்லாமல் மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கரைத்து கொள்ள வேண்டும்.(மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றினால் கட்டி இல்லாமல் கூழாகிவிடும்)
6.வாணலியை அடுப்பில் வைத்து 200மில்லி தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர்,2கப் சர்க்கரையை சேர்த்து சூடு படுத்த வேண்டும்.
7.பக்கத்து அடுப்பில் ம்ற்றொரு வாணலியில் 200மில்லி வெஜிடபிள் ஆயில் ஊற்றி நன்கு சூடான உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
8.சர்க்கரை , கேசரிகலர் சேர்த்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 100மில்லி நெய்யை ஊற்றி நெய் கரைந்த உடன் வெந்த மாவை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.
9.ஊற்றிய நெய்யை மாவு உறிஞ்சிய பின் பக்கத்து அடுப்பில் உள்ள நன்கு சூடான வெஜிடபிள் ஆயிலை ஒரு கரண்டி கொண்டு எடுத்து கிண்டும் மாவில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும்.
10.கொதிக்கும் ஆயில் முழுவதும் இதே போல் ஊற்றி கிண்டி கொண்டே இருக்கும் பொழுது மாவும் ஆயிலை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.
11.சிறிது நேரத்தில் வெந்த மாவு ஆயிலை வெளியே விட ஆரம்பிக்கும் பக்குவத்தில் 50கிராம் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்.
12.கிண்டிய அல்வாவை ஒரு தட்டில் கொட்டி பரத்தி முந்திரியால் அலங்கரிக்கலாம்.

📔📔📔📔📔📔📔📔📔📔

 *18. வீட் ரவா  பைனாப்பிள் அல்வா.:*

தேவையான பொருட்கள்.:
கோதுமை ரவை – ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை – தலா ஒன்றரை கப்,
வறுத்த முந்திரி துண்டுகள் – 15, குங்குமப்பூ – 4 அல்லது 5 இதழ்கள்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை.:
கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும்.

பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும்.

கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு.:
கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக ‘தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕


 *19. ❤️சுவையான கேரட் அல்வா ❤️*

தேவையானப்பொருட்கள்
டெல்லி கேரட்   :  1கிலோ
பால்     : 500மிலி
சர்க்கரை    : 400 கி
நெய்     : 50கி
முந்திரிப்பருப்பு  : 20 கி
செய்முறை :
1. கேரட்டை நன்றாக தோல் சீவி கழுவி மெல்லிசாக துருவவும்.
2. அடி கனமான கடாயில் துருவிய கேரட்டை போட்டு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி மூடி வைத்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும்.
3. கேரட் நன்றாக வெந்து பால்    நன்றாக வற்றியவுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
4. சர்க்கரை நன்றாக கரைந்த உடன் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
5. கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அனைக்கவும்.
6. அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕


 *20. சுவையான பால் அல்வா*


தேவை

கெட்டியான பால் – 5 கப்
சர்க்கரை – 2 கப்
வெண்ணெய் – 2 டே. ஸ்பூன்


செய்முறை


கெட்டியான பாலை அடிபிடிக்காமல் காய்ச்சித் திரட்டவும். சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒட்டாமல் வரும் போது, வெண்ணெயைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இட்டு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.

🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇


 *21. சுவையான மைதா அல்வா*


தேவை


மைதா மாவு – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – 150 கிராம்
பிடித்தமான கலர் எஸென்ஸ்
வறுத்த முந்திரி – சிறிதளவு



செய்முறை


சர்க்கரை கம்பிப் பாகில் கரைத்த மைதா மாவைக் கொட்டி, இதர பொருட்களைச் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


 *22. சுவையான பிரெட் அல்வா*

தேவை

பிரெட் துண்டுகள் – 5
மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
வேகவைத்து மசித்த பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரைத் தூள் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம், எஸன்ஸ் – தேவையான அளவு

செய்முறை

பிரெட், பால் மசித்த பருப்பு, உருளைக்கிழங்க, சர்க்கரைத்தூள் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் ஏற்றிப் பதமாகக் கிளறவும். சுருண்டு வந்ததும் நெய், முந்திரி, திராட்சை, எஸன்ஸ் சேர்த்துக் கிளறவும்.
பிரெட் அல்வா என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். ‘பாதாம் அல்வா’ என்றே நினைப்பார்கள்.

🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓


 *23. சுவையான கார்ன் அல்வா*

தேவை

மக்காச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு

செய்முறை

மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும்.
பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும்.
இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும்போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.

🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

 *24. ஸ்பெஷல் அவல் அல்வா*

தேவை

கெட்டி அவல் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலம், முந்திரி – தேவையான அளவு

செய்முறை

நெய்யில் வறுத்து பொடித்த அவலை நெய்யுடன் சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி முந்திரி ஏலம் தூவி இறக்கவும். இது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக அமைந்து விடும்.

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


 *25. பூசணிக்காய் அல்வா*

தேவை

பூசணிக்காய் – 1/2 கிலோ
நெய் – 175 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 1 சிறிய டம்ளர் (அ) சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
ஏலப்பொடி – 1 ஸ்பூன்
ஒடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 11/2 கரண்டி (கோவா போடும் பட்சத்தில்)

செய்முறை

பூசணிக்காயின் தோலைச் சீவி, குடல் பகுதியை அகற்றி விட்டு, அலம்பித் துருவிக் கொள்ளவும்.
பூசணிக்காயைத் துருவும் பொழுது, தண்ணீர்ச்சத்து நிறைய வெளியேறும். ஆனால் அது உபயோகப்படாது.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே துருவிய பூசணியைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கிய பூசணித் துருவலை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
சிலர் துருவலாகவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
அடுப்பில் சிறிதளவு நெய்யை விட்டு விழுதைப் போட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும்.
நெய்யைச் சுட வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை + விழுதுடன் சேர்க்கவும். கிளறிக் கொண்டு இருக்கவும்.
மேற்கொண்டு, கன்டென்ஸ்ட் மில்க் அல்லது கோவாவாக இருந்தால், தண்ணீரில் கரைத்தாற்போல் செய்து கொண்டு கலவையில் சேர்க்கவும்.
கேசரிப் பவுடர், ஒடித்த முந்திரி, ஏலப்பொடி எல்லாவற்றையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல், சுருள வரும் பதத்தில் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியவுடன் வில்லைகளாகப் போடவும்.
கோவாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் பூசணித் தண்ணீரைக் கூட உபயோகப்படுத்தலாம். இதை ‘காசி அல்வா’ என்றும் சொல்வார்கள்.

🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑


 *26. தாஹினி அல்வா*

தேவை

சர்க்கரை – 300 கிராம்
தண்ணீர் – 100 மி.லி.
எள்ளு – 300 கிராம்
எசன்ஸ் – தேவையெனில்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப் தேவையெனில்

செய்முறை

பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் இட்டு கரைத்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும் பாகு பதம் வரும் வரை பதம் வந்ததும் அத்துடன் வறுத்து தோலுரித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை கொட்டி நன்கு கிளறவும். வாசனை தேவையெனில் எசன்ஸ் 1/2 ஸ்பூன் (வெனிலா) விட்டு கிளறவும். இந்த ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வேகமாகவும் பத்திரமாகவும் கிளற வேண்டும். நன்கு கிளறி அதனை ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பி விட அது அப்படி கட்டியாகவும் ஆறி மொறுமொறுப்பாகவும் வந்து விடும். இதனை தேவையெனில் முதலிலேயே சதுரம் சதுரமாக வெட்டியும் விடலாம். இதுவே தாஹினி அல்வா.

🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉

 *27. முந்திரிப் பருப்பு அல்வா*

தேவையான பொருட்கள் :

தூளாக்கிய
  முந்திரிப் பருப்பு - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மைதாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்புத் தூளையும், சர்க்கரையை யும் சுத்தமான வாணலியில் போட்டு கிளறவும். சர்க்கரை உருகத் தொடங்கியதும் மைதா மாவை அதோடு சேர்க்கவும். மாவை கிளறிக் கொண்டே சிறிது சிறிதாக நெய்யை அதோடு சேர்க்கவும். கலவை வாணலியின் ஓரத்தில் ஒட்டாத நிலை வரும்வரை இவ்விதம் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒட்டாத நிலை வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்தக் கலவையை கொட்டி சமமாகப் பரப்பி, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍


 *28. சுவையான பீட்ரூட் அல்வா*

தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் – 1
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு – 10

செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋


 *29. சுவையான பால்கோவா*


தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு அது கெட்டியான பதத்திற்கு இறுகும் வரை கொதிக்க விட வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருக்க அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு இறுகி க்ரீமியான நிலையை அடையும்போது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருந்தால் பால்கோவா நிலையை அடையும். பின் அதில் முற்றிலும் நீர் இறுகி கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இறுகிய நிலை அடையும் போது நெய் ஊற்றிக் கிளறி இறுதியாக, ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறலாம்.
சூப்பரான பால்கோவா தயார்.

🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

 *30. மன்னார்குடி டேட்ஸ் அல்வா*

என்னென்ன தேவை?

பால் பேணி / பதுர் பேணி - 2, பால்கோவா (இனிப்பு கோவா) - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி - 100 கிராம், பேரீச்சம் பழம் - 200 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.

எப்படிச் செய்வது?

முந்திரியை ரவை போல ஒன்றிரண்டாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை  பாதி பொடியாக நறுக்கியும், மீதியை மிக்ஸியில் போட்டு சிறிது பொடித்தும் வைக்கவும். நறுக்கிய மற்றும் துருவிய பதத்தில் இருக்கும் பேரீச்சையை நெய் விட்டு லேசாக வறுத்து வைக்கவும். சிறிது
முந்திரியையும் நெய்யில் வறுத்து வைக்கவும் (அலங்கரிக்க). அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டு சூடானதும், பால்கோவா போட்டு நன்கு கிளறவும். பொடித்து வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து, முந்திரி பவுடர், எசென்ஸ்  சேர்த்து நன்கு கிளறவும். பால் பேணியைப் பொடித்து, இத்துடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நெய்  சேர்க்கவும்.  பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், அடுப்பிலிருந்து அகற்றி, மேலே சிறிது பேரீச்சை, முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

* நெய் வறுப்பதற்கு மட்டும் போதுமானது. அதிகம் தேவைப்படாது.
* கலர் பவுடர் தவிர்க்கலாம், விரும்பினால் சிறிது ஆரஞ்சு கலர் சேர்க்கலாம்.
* பால்கோவா, முந்திரி, பேரீச்சையின் இனிப்புகளே போதும். தனியாக சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.

அல்வா 600!

கிழக்கு ஆப்பிரிக்காவில் Dodol எனும் அரிசி மாவில் செய்யப்பட்ட அல்வா.
இதுபோன்ற நட்ஸ் அண்ட் பட்டர் வகை அல்வாக்கள் பல்ஜீரியா, ரஷ்யா, எகிப்து நாடுகளில் மிகப் பிரபலம்.
நம்ம ஊர் சோன்பப்டி ஸ்டைலில் இருக்கும் Floss Halva  துருக்கியின் பாரம்பரிய உணவு.  எள்ளை வைத்து செய்யப்படும் தஹினி அல்வா... துருக்கி, போலந்து போன்ற நாடுகளில் விருப்ப இனிப்பு.