திங்கள், 24 டிசம்பர், 2018

30 வகை மொறுமொறு தோசை


30 வகை மொறுமொறு தோசை!

 Aval Vikatan Recipes...

பனீர் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய பனீர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.

பாலக் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரமாவது புளிக்கவேண்டும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவேண்டும். வித்தியாசமான மாலை டிபன், இந்த தோசை.

முருங்கைக்கீரை அடை

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி - கால் கப், புழுங்கலரிசி - கால் கப், துளிரான முருங்கைக்கீரை - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: பருப்பு வகை, அரிசி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வதக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும்.

குறிப்பு: அடைகளை சுடும்பொழுது அதன் நடுவில் சிறு ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர் திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கைக்கீரையை வதக்கிப் போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

நவதானிய தோசை

தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு.

 செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

கேழ்வரகு வெல்ல தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன், நெய் - சுட்டெடுக்க தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: தண்ணீரை விருப்பம்போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

கல்தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - 3 கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் அரைத்த மாவை தோசைகளாக சற்று தடிமனாக வார்க்கவும். இதுதான் கல்தோசை! இதில் புளிப்பிருக்காது. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சைமல்லி துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சைமல்லி துவையல்: நன்கு கழுவி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 கப், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, புளி - கொட்டைப்பாக்களவு, உப்பு - தேவையான அளவு.. எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இந்த பச்சை மல்லி துவையலுக்கும் கல்தோசைக்கும் செம காம்பினேஷன்!

கோல் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியவற்றை மிகவும் நைஸாக இல்லாமல் சற்று முந்தைய பதத்தில் அரைக்கவும். ஒரு இரவு புளிக்கவைத்து, மறுநாள் அதில் மிளகு-சீரகத்தூள், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்க்கவும். கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, தடிமனான தோசைகளாக சுட்டெடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெயை லேசாக தடவி வார்த்தாலே போதும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இந்த தோசை சற்று தடியாக மெத்தென்று, சாப்பிட ருசியாக இருக்கும்.

மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், நறுக்கிய பழத்துண்டுகள் (ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மாதுளை, பப்பாளி) - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து பழத்துண்டுகளையும் உப்பையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். (உப்பு சேர்ப்பதால் சுவை கூடும்). அரைத்த மாவை மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும். இதில் காரம் வேண்டும் என விரும்புபவர்கள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கலாம். இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு என எல்லா சுவைகளும் இணைந்து, அமர்க்களமாக இருக்கும் இந்த தோசை.

முத்து தோசை

தேவையானவை: பச்சரிசி - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கொத்துமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசையை புளித்த தயிரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அந்த மாவுடன் ஜவ்வரிசி கலவையை தயிரோடு சேர்த்து, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியையும் சேர்த்து தோசைகளாக ஊற்றவும். சற்று நிதானமாக வார்த்தெடுக்க வேண்டும். வயதானவர்கள் கூட சாப்பிடலாம். முத்து முத்தாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த தோசை, உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கலர்ஃபுல் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிகவும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - ஒரு கப், பொடியாக துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக துருவிய முள்ளங்கி (அல்லது) பெரிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக துருவிய பீட்ரூட் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை நான்கு பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு காயை சேர்க்கவும். சற்று தடிமனான சிறு தோசைகளாக தனித்தனியாக சுட்டெடுத்து, நான்கு கலர் தோசைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எள்ளு மிளகாய்ப் பொடி நன்றாக இருக்கும். எள்ளு மிளகாய்ப் பொடி: ஒரு கப் எள்ளை வெறும் வாணலியில் பொரியும் வரை வறுத்து எடுக்கவும். கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கால் கப் உளுத்தம்பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு, 6 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான உப்பு, வறுத்த எள்ளு சேர்த்துப் பொடிக்கவும்.

அவல் தோசை

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளித்த மோர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்குக் கரைத்து, நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும்.

பச்சை மொச்சை தோசை

தேவையானவை: பச்சை மொச்சை பருப்பு - 2 கப், பச்சரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து தோசைகளாக வார்க்கவும். சக்தியும் சுவையும் நிரம்பிய தோசை இது.


தேங்காய் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.

வெண்டைக்காய் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழகொழப்பாக இருக்கும். ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்கவரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.

கம்பு தோசை

தேவையானவை: கம்பு - 2 கப், புழுங்கலரிசி - அரை கப், பச்சரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கம்பை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி இரண்டையும் சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கம்பு, அரிசி, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லியை கலந்து தோசைகளாக வார்க்கவும்.

பூசணி தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், வெள்ளைப் பூசணியின் சதைப் பகுதி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பூசணிக்காயின் உட்புறம் உள்ள பகுதியில் விதைகளை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு அரிசி, பருப்பு, பூசணித் துண்டுகள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். பிறகு தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு வேகவைக்கவும். இந்த தோசை வெயில் காலத்துக்கு மிகவும் சிறந்தது. உளுந்து விலை அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தோசைகளை செய்து அசத்தலாம். இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை துவையல் சூப்பர் ஜோடி. பச்சை துவையல்: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - கொட்டைப் பாக்களவு, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பெருங்காயம், புளி, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

 மசால் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு.

செய்முறை: அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம் புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம். இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.

 ரவா தோசை

தேவையானவை: வறுத்த ரவை - 2 கப், அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - எல்லாம் சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: புளித்த மோருடன் சிறிது தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து அதில் வறுத்த ரவை, அரிசிமாவு, மைதாமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு, மிளகு, சீரகம் இவற்றைத் தாளித்து மாவில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்து மிகவும் மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: மாவை ரொம்ப ஊற விடாமல் தோசை வார்க்க வேண்டும். மாவு ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது. விருப்பப்பட்டவர்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மாவில் சேர்த்து ‘ஆனியன் ரவா தோசை’ வார்க்கலாம்.

தவல் தோசை

தேவையானவை: அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - அரை கப், உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப்.

செய்முறை: அரிசியை சிறு ரவை போன்று உடைத்து வைத்துக்கொள்ளவும். அதில் புளித்த தயிர் ஊற்றி ஊறவைக்கவும். மூன்று பருப்புகளையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த பருப்புடன், தேங்காய், உப்பு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து ரவை கலவையில் சேர்க்கவும். மாவு சற்று கெட்டியாகத்தான் இருக்கவேண்டும். பெருங்காயத்தையும் சேர்க்கவும். நெய், சிறிது எண்ணெய் இரண்டையும் காயவைத்து கறிவேப்பிலை யைப் போட்டு மாவில் கொட்டவும். பிறகு, அடிகனமான வாணலியில் மாவை ‘பன்’ போன்று ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மேலே மூடி விடவும். சற்று கனமாக இருப்பதால் மூடினால்தான் மாவு உள்ளே வேகும். அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும். பின்னர் மாவு மேற்புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சில நிமிடங்களில் எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கறிவேப்பிலை சட்னி வாட்டமாக இருக்கும்.

கறிவேப்பிலை சட்னி: வதக்கிய கறிவேப்பிலை - ஒரு கப், வறுத்த உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - கொட்டைப் பாக்களவு, உப்பு - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5. எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

சேமியா தோசை

தேவையானவை: சேமியா - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்த தயிர் - கால் கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும். அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த தோசைக்கு அதிக எண்ணெய் விடக் கூடாது.

பிரண்டை தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
#Nachikulam_special

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.

மைசூர்பருப்பு தோசை

தேவையானவை: மைசூர்பருப்பு - 2 கப் (கேசரி கலரில் இருக்கும்), பச்சரிசி - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் அரிசியைப் போட்டு அரைத்து, சிறிது நேரங்கழித்து பருப்பைப் போடவும். இரண்டும் சேர்ந்து நைஸாக அரைபட்டதும் எடுத்து, உப்பு போட்டுக் கரைத்து மாவை 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். காரம் விரும்புபவர்கள் 4 காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் நல்லது.

பொடி தோசை

தேவையானவை: பச்சரிசி - 3 கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. பொடி செய்ய தேவையான பொருட்கள்: தனியா, கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன், எள்ளு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை (பொடி): முதலில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மற்ற பொருள்களையும் சிவக்க வறுத்து கடைசியாக கொப்பரையை போட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும் (பருப்பு சூட்டிலேயே கொப்பரை வறுபட்டுவிடும்). ஆறியவுடன், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தோசை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்தே 3 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக அரைத்தெடுக்கவும். உப்பு போட்டுக் கரைத்து ஒரு நாள் இரவு புளிக்க வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை வார்த்து உடனேயே மேலே பொடியை பரவலாக தூவி, கரண்டியில் எண்ணெய் தொட்டு மேலே லேசாக தடவிவிட வேண்டும். அடுப்பை மீடியமாக எரிய விட வேண்டும். இந்த தோசையை திருப்பிப் போடக் கூடாது. அப்படியே எடுத்துப் பரிமாறவேண்டும்.

வெந்தய தோசை

தேவையானவை: வெந்தயம் - ஒரு கப், பச்சரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயம், அரிசி, மிளகாய்.. மூன்றையும் 5 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக அரைக்கவும். உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மாவு 5 மணி நேரம் புளிக்கட்டும். இது சிறிது கசப்பாகத்தான் இருக்கும். (ஆனால் புளித்தால் கசப்பு அவ்வளவாகத் தெரியாது). வெயில் காலத்துக்கு ஏற்ற தோசை. சூடாக வார்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

கோதுமை ரவை தோசை

தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உப்பு, எண் ணெய் - தேவை யான அளவு.

செய்முறை: கோதுமை ரவை, அரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் அப்படியே அரைக்கவும் (திட்டமான தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்). நார்ச்சத்து மிக்க இந்த தோசை, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அரைத்து ஒரு மணி நேரத்திலேயே இந்த தோசையை வார்த்து சாப்பிடலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் தோசை

தேவையானவை: பச்சரிசி - 2 கப், காய்கறிகள் (கேரட், பெரிய வெங்காயம், குடமிளகாய், பட்டாணி, பீன்ஸ் போன்றவை) நறுக்கியது - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லா வற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு அரிசியையும் தண்ணீர் வடித்துச் சேர்த்து நைஸாக அரைக்கவும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம் (கவனிக்க.. தண்ணீர் அதிகமாகிவிடக் கூடாது. மாவு கெட்டியாக இருந்தால்தான் தோசை அழகாக வார்க்க வரும்). கல்லில் தோசையை வார்த்து, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும். குழந்தைகளுக்கு எல்லா காய்கறிகளையும் கொடுத்த திருப்தி இருக்கும்.

தவலை அடை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு, சீரகம் மூன்றையும் மிஷினில் கொடுத்து சிறு ரவையாக உடைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து 2 கப் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவை கலவையை கொட்டி கிளறி இறக்கவும். ரவை அரை வேக்காடு இருந்தால் போதும். பின்னர் சிறு அடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு, தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சுட்டெடுக்கவும். அட்டகாசமான மாலைச் சிற்றுண்டி இது.

கடலைமாவு தோசை

தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - அரை கப், எலுமிச்சம்பழம் - 1, பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சை சாறையும் விட்டு, தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக்கொண்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

கொச்சிமேனி கீரை தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கொச்சிமேனிக் கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி, பருப்பு, நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். 3 மணி நேரம் புளிக்க வைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இந்தக் கீரை புளிப்புச் சுவை உடையது. வைட்டமின் சத்து நிறைந்தது.

குறிப்பு: இந்தக் கீரை கிடைக்காத இடங்களில், புளிச்ச கீரை அல்லது முடக்கத்தான் கீரையை உபயோகிக்கலாம். சுவையாக இருக்கும்.

நெய் ரோஸ்ட்

தேவையானவை: பச்சரிசி - 3 கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 6 மணி நேரம் புளித்த பிறகு தோசை ஊற்றலாம். அடுப்பை மீடியமாக எரியவிட்டு, தோசைக்கல்லில் நல்ல சூடு ஏறியதும், நடுவில் மாவை ஊற்றி கை நடுக்காமல் தட்டை கரண்டியால் வட்டமாக பரப்பிக்கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். சுற்றிலும் சிறிது நெய்விட வேண்டும். திருப்பிப் போட வேண்டும். பிறகு மொறு மொறுப்பாக எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள எந்த சட்னி ஆனாலும் சூப்பர்.

செவ்வாய், 27 நவம்பர், 2018

30 வகை வாழை சமையல்


30 வகை வாழை சமையல்!

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - இரண்டு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் தடிமனான துண்டுகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்து ஆறியதும் தோலை உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து மசித்து வைத்துள்ள வாழைக்காயில் கொட்டி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். இதை எல்லா சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் தாளிப்பு

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வேக வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் `காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.

வாழைப்பூ கோலா உருண்டை.

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறு மொறு டிபன் இது.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -- சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உப்பு சேர்த்து வாழைத்தண்டை வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த கடலைப்பருப்புடன், வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்துள்ள வாழைத்தண்டில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாழைக்காய் வறுவல்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 2, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசிமாவு - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும். பிறகு அரிசி மாவைத் தூவி பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

வாழைக்காய் பொரியல்

தேவையானவை: வாழைக்காய் - 2, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 3, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாயைப் போடவும். பிறகு வாழைக்காய், வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை: நன்றாக நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூளை தாளித்து விழுதில் கொட்டி, தயிருடன் கலந்து பரிமாறவும். வாழைத்தண்டை வேகவைக்காமல் பச்சையாக பயன்படுத்துவதால், அதில் உள்ள வைட்டமின் நேரடியாக நமக்குக் கிடைக்கிறது.

வாழைப்பூ பொரியல்

தேவையானவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், பயத்தம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பயத்தம் பருப்பை மலர வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்துள்ள வாழைப்பூ, பயத்தம்பருப்பை சேர்த்து நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். வாழைப்பூவுடன் உப்பு சேர்த்து வேக வைப்பதால், வதக்கும்போது தேவையானால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைக்காய் பொடி

தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வாழைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்தப் பொடியுடன், வதக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து அரைத்தெடுக்கவும். அரைத்தவுடன் பார்த்தால் மொத்தமாக இருப்பதுபோல் தெரியும். எடுத்து பார்த்தால் உதிர் உதிராக ஆகிவிடும். இதை சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். பொரியல் போலவும் தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் பொடி தூவல்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - இரண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்கக் கரைத்து அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய வாழைத் துண்டுகளைப் போட்டு வேகவைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை: நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நீர் மோர், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போடவும். அந்த நீரிலேயே பயத்தம் பருப்பை போட்டு ஊறவிட்டு, தண்ணீரை நன்றாக வடித்து அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் வாழைத்தண்டு, பயத்தம்பருப்பு கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும், தேங்காய் துருவலைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

வாழைப்பூ உசிலி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் அரை மணிநேரம் ஊற வைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாழைப்பூவுடன், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு சிம்மில் வைத்து உதிர் உதிராக வரும்படி கிளறவும். பிறகு அதனுடன், வேக வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வாழைக்காய் வதக்கல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வாழைக்காய், உப்பை போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். காரக்குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்!

வாழைப்பூ மசியல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய்- தலா 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். இந்த புளித் தண்ணீரில் உப்பு போட்டு, வாழைப்பூவை சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். வாழைப்பூ வெந்தவுடன் அதில் வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிறிதளவு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து வாழைப்பூ கலவையில் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

வாழைத்தண்டு பக்கோடா

தேவையானவை: நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்-தூள், நறுக்கிய வாழைத்தண்டு, மல்லித்தழை எல்லாவற்றையும் சிறிது நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்-ததும் சிறு சிறு பக்கோடாக்-களாக போட்டு பொரித்து எடுக்கவும்.

வாழைத்தண்டு சாம்பார்

தேவையானவை: வாழைத்தண்டு - 1, துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை நார் எடுத்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து தேங்காய் துருவலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்தவுடன் அதில் வாழைத்தண்டை போடவும். தண்டு வெந்ததும் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், அதில் வெந்த பருப்பை போடவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

வாழைக்கச்சல் பொரியல்

தேவையானவை: பிஞ்சு வாழைக்காய் - 2, பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை மலர வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வாழைக்கச்சலைப் பொடியாக நறுக்கிப் போடவும். வாழைக்கச்சல் வெந்ததும் அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும், பிறகு, வேக வைத்துள்ள பயத்தம்பருப்பை சேர்க்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வாழைக்காய் கடலைக் கூட்டு

தேவையானவை: கொண்டைக்கடலை - கால் கப், நறுக்கிய வாழைக்காய் - அரை கப், துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன். எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பையும் துவரம்பருப்பையும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக குக்கரில் வேக வைக்கவும். கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் அதையும் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து உப்பை போட்டு அதில் வாழைக்காயை வேக வைக்கவும். பிறகு கடலை, சாம்பார் பொடியை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும், வெந்த பருப்பை போட்டு கொதிக்க வைத்து இறக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, மல்லித்தழை தாளித்துக் கொட்டவும்.

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை: வாழைக்காய் - 1, கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, ஏலக்காய் - 2, பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, மல்லித்தழை - சிறிது, பால் - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து கரம்மசாலா தூள் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து கரைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் தேங்காய் கரைசலை சேர்க்கவும். பிறகு பால், ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சேர்த்து, கடைசியாக கடைந்த தயிரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, முந்திரியை வறுத்துப் போடவும். இதில் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை போட்டு, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

வாழைப்பூ-முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், முருங்கைக்கீரை - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரையை நன்றாக அலசி போடவும். வாழைப்பூவில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும். தண்ணீர் வடிந்ததும், அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக் கீரையுடன் போடவும். சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியில் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.

வாழைப்பழ அப்பம்

தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, மைதாமாவு, கோதுமைமாவு - தலா அரை கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஆறியதும் அதில் மைதாமாவு, கோதுமைமாவு, அரிசிமாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், முந்திரி, கடைசியாக வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அப்பக்குழியில் எண்ணெய் விட்டு சிறு அப்பங்களாக செய்து எடுக்கவும். அப்பக்குழி இல்லாதவர்கள், கடாயில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அப்பமாக செய்யலாம்.

வாழைப்பூ துக்கடா

தேவையானவை: நரம்பு நீக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைமாவு - அரை கப், அரிசிமாவு, சோளமாவு, - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல்சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் பிசறி, கடைசியாக சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சேர்த்து உதிர் உதிராக பொரித்தெடுக்கவும். பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

வாழைப்பழ அல்வா

தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, ரவை - அரை கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - சிறிது.

செய்முறை: கடாயில் நெய் ஊற்றி ரவையை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். கால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த ரவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் வாழைப்பழத்தை நன்றாக மசிந்து அதில் சேர்க்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்க்கவும். அசத்தலான சுவையில் இருக்கும் இந்த அல்வா.

வாழைத்தண்டு துவையல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். மறுபடியும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வாழைத்தண்டை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டு, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான துவையல் ரெடி!

குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அரைப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படாது.

வாழைக்காய் கிரேவி

தேவையானவை: பனீர் சைஸில் துண்டுகளாக நறுக்கிய முற்றிய வாழைக்காய் - ஒரு கப், தக்காளி - 3, நறுக்கிய வெங்காயம் - அரை கப், புதினா, மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிது.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை, புதினா இவற்றை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை வறுத்து எடுத்த அதே எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்த தக்காளி, வெங்காய விழுதை சேர்க்கவும். சற்று வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதங்கியதும், வறுத்த வாழைக்காயை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கிரேவி பதத்தில் வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 1, துருவிய பீட்ரூட், கேரட் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, புதினா - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைப் போட்டு, வெங்காயத்தை சேர்க்கவும். சற்று வதங்கியதும் கேரட், பீட்ரூட் துருவலை சேர்த்து வதக்கவும். மசித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்க்கவும். பிறகு, உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கெட்டி பதத்தில் வந்ததும், ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து ஊற்றவும். கடைசியாக பிரெட் தூளை சேர்த்து கிளறி இறக்கவும். இதை கட்லெட் வடிவத்தில் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெய் ஒத்துக்கொள்ளாதவர்கள் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு ரோஸ்ட் ஆனதும் எடுக்கவும். சாஸ§டன் சாப்பிட சுவையாக இருக்கும்.

செவ்வாழை மில்க்ஷேக்

தேவையானவை: செவ்வாழைப்பழம் - 2, பால் - 2 கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன். ஏதேனும் எஸன்ஸ் - ஒரு சொட்டு.

செய்முறை: பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக பாலையும் சேர்த்து ஒரு முறை சுற்றி எடுக்கவும். கடைசியில் எஸன்ஸ் சேர்க்கவும். இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான பானம்.

நேந்திரம்பழப் புட்டு

தேவையானவை: நேந்திரம்பழம் - 1, பதப்படுத்திய அரிசிமாவு - ஒரு கப் (அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிய விட்டு, காய்ந்த துணியில் பரத்தி 5 நிமிடம் கழித்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இந்த மாவை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிது.

செய்முறை: அரிசிமாவுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி ஒரு துணியில் மூட்டை கட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இந்த மாவை கையால் நன்றாக அழுந்த தேய்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நறுக்கிய நேந்திரம் பழம் சேர்த்து நன்றாக கலக்கவும். பழப் புட்டு பலே ஜோர்!

வாழைக்காய் போண்டா

தேவையானவை: வாழைக்காய் -- 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா கால் டீஸ்பூன், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதில், மசித்து வைத்துள்ள வாழைக்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, சமையல் சோடா, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். அதில் உருட்டி வைத்துள்ள வாழைக்காயைத் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

வாழைப்பழ பாயசம்

தேவையானவை: பழுத்த பூவன் வாழைப்பழம் - 2, பால் - 2 கப், சர்க்கரை - கால் கப், மில்க்மெய்ட் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும். அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து சர்க்கரையைப் போடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஏலக்காய்த்தூள், மில்க் மெய்ட் சேர்த்து இறக்கவும். வாழைப்பழம் விரும்பாத குழந்தைகள்கூட இதை விரும்பி சாப்பிடுவர். சர்க்கரை பிடிக்காதவர்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

புதன், 31 அக்டோபர், 2018

கம்போடியர்களின் பனை உணவுகள்

கம்போடியர்களின் பனை உணவுகள்








(நாம் பனையின் அருமையை தொலைத்துவிட்டோம்)

புதன், 24 அக்டோபர், 2018

தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய சோத்துக்கடைகளின் தொகுப்பு....


தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய சோத்துக்கடைகளின் தொகுப்பு....

நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்..

இதில் நிறைய கடையை பற்றி நம் சோத்துக்கடையில் எழுதி உள்ளோம். தமிழகத்தில் நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டியா கடைகளின் தொகுப்பு...

எதவாது விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும் சேர்த்திடுவோம்...

நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம். Special : பாப்கார்ன்
குணா சுக்குகாபி, மானாம்பதி, திருப்போரூர். Special : சுக்குகாபி
பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை, கும்பகோணம். Special : காபி
முராரி ஸ்வீட், கும்பகோணம். Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும் பிரபலமான கடை(மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும் கிளைகள் உண்டு)
ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்
ஹோட்டல் உஷா ராணி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், சேலம். Special : மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா
மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா
ராஜூ ஆம்லேட், பரோடா ஓல்ட் பத்ரா ரோடு. Special : ஆம்லேட்
ஷஹ்ரன் ஹோட்டல், ஹைதராபாத் சார்மினார் கோபுரம். Special : லஸ்ஸி பலூடா
முதலியார் கடை, மதுரை தேவர் சிலை அருகே, மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப். Special : முட்டை இட்லி
R.ரெங்கநாதன் கரம் கடை(செட்டி கடை), ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர். Special : சீம் பால் கட்டி
AJJ மஸ்கோத் அல்வா, முதலூர், தூத்துக்குடி. Special : மஸ்கோத் அல்வா
காளத்தி கடை கிழக்கு மாட வீதி, மைலாபூர். Special : ரோஸ் மில்க்
கந்தன் தட்டு வடை செட், சேலம் பஜார் தெருவில்,கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50 Special : தட்டு வடை செட்.
கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்
'மங்களாம்பிகா' இட்லி, கும்பகோணம். Special : மிளகாய்ப் பொடி, இட்லி
JB சவுத்திரி பாதாம் பால் கடை, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : பாதாம் பால்
விருத்தாசலம். Special : தவலை வடை !!
ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு, தல்லாகுலம். Special : பரோட்டா
112 இலக்கம், மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் சாலை, அழகர்கோவில். Special : தோசை
NNK மற்றும் NNR, அம்மாபேட்டை, சேலம் TVK ரோட்டில். Special : எசென்ஸ் தோசை
திண்டுக்கல் சிவா பிரியாணி, வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு. Special : மிளகு கொழம்பு
ஆதிகுடி ரவா பொங்கல், தேவர் ஹால் பஸ் ஸ்டாப், திருச்சி மெயின் கார்ட் கேட், கெயிட்டி, திருச்சி. Special : ரவா பொங்கல்
மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர். Special : தம்ரூட்
உடுப்பி கிருஷ்ண விலாஸ், சிதம்பரம். Special : கத்திரிக்காய் கொத்சு
ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி
SRR கபே, திருவாரூர் பேருந்து நிலையம். Special : கலவை சாதங்கள்
வாசன், திருவாரூர். Special : பாதாம்அல்வா
உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால், 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு,  தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி. Special : போளி, மற்றும் இனிப்பு வகைகள்.
A -1 ஹோட்டல், பெருமாள்புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி. Special : சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்
வசந்த பவன், பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி. Special : மதிய உணவு மற்றும் பரோட்டா
PLA கிருஷ்ணா இன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில். Special : பாயசம் மற்றும் அப்பளம்
தேவர் ஹோட்டல், ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். Special : பருப்பு உருண்டை குழம்பு
அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி
வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை
ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி
ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு
படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்
இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்
தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா
மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி
அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி
கடுக்கன் விலாஸ், வஉசி பூங்கா அருகில், ஈரோடு. Special : கம்மங்கூழ், ராகிக் கூழ், தயிர் வடை, மசால மோர்
ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65
திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்
ரயிலடி சுப்பையா மெஸ், தஞ்சை. Special : ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி
பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
பிங்க்பெர்ரி, 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர். Special : தயிர்கிரீம்
குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல், தஞ்சாவூர். Special : பால் சர்பத்
ஜன்னல் கடை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் இடதுபுறம் சந்தில், சென்னை
கௌரி சங்கர் ரசவடை, வடசேரி, நாகர்கோவில். Special : ரசவடை
ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில், மதுரை. Special : கிழங்கு பொட்டலம்
A.V.K மீன் சாப்பாட்டு கடை, ஆர்காட் ரோடு, L.V பிரசாத் ரோடு. Special : மீன் சாப்பாட்டு
குஞ்சான் செட்டி கடை, மன்னார்குடி. Special : காராபூந்தி, மைசூர்பாக்.
டெல்லி ஸ்வீட்ஸ், மன்னார்குடி. Special : முந்திரி அல்வா
ரோஜா மார்க் இனிப்புகள், கும்பகோணம். Special : ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை
ரத்னா கபே, திருவல்லிக்கேணி. Special : சாம்பார்
சங்கர விலாஸ், கீழ ஆண்டார் வீதி, திருச்சி. Special : பூரி, கடப்பா
தஞ்சாவூர் மெஸ், மேற்கு மாம்பலம், சென்னை. Special : பூரி,கடப்பா
பார்த்தசாரதி விலாஸ், மேலவிபூதி பிரகாரம், திருவானைக்கா கோயில். Special : நெய் தோசை
சொசைட்டி பால்கோவா, மணப்பாறை. Special : பால்கோவா
இத்தாலியன் பேக்கரி, கும்பகோணம், தஞ்சை அய்யம்பேட்டை. Special : டீ, காபி, பிஸ்கட்
கோபு ஐயங்கார் கடை, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவில். Special : சீவல் தோசை
சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.
காபி பேலஸ், எல்லையம்மன் கோயில் தெரு, தஞ்சாவூர். Special : டீ, காபி. வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை.
ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை, திருச்சி பெரிய கடைவீதி. Special : பிரியாணி
காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்
பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்
சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்
மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்
பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ
கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.
பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்
எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்
Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special :  Unlimited Barbeque
மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி
கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி
SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை
கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி
ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா
MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை
CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி
நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு
பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி
ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி
லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி  சாத வகைகள்
சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா
கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை
அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு
குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு
சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு
வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்
பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்
கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்
கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்
சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்
ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி
குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி
வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்
உமர்கையாம், லலிதா ஜுவல்லரி, தி.நகர். Special : எண்ணெய் கத்தரிக்காய், தாள்ச்சா  முஸ்லீம் வீட்டு பிரியாணி
மாமு கார்டன் ஹோட்டல், பரமக்குடி. Special : சைனீஸ் உணவு
சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special :  பள்ளிபாளையம் சிக்கன்
சீனியப்பா ஹோட்டல், கீழக்கரை. Special : பரோட்டா, சால்னா
ஜெய் சக்தி சைவ ஹோட்டல், கோவில்பட்டி.  Special : நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப்
ஃப்ளெமிங்கோ ஹோட்டல், வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோடு. Special : சாப்பாடு
மாயாபஜார், சேலம். Special : நான்வெஜ் ஹோட்டல்,
மாமன் பிரியாணி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க். Special : பிரியாணி
அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.
செந்தில் மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா
மீனாட்சி மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா
கதிர்வேல் வாத்துக்கடை, வேலூர் பரமத்தி. Special : வாத்துமுட்டை ஆம்லெட்
பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை, தென்காசி. Special : பெப்பர்சிக்கன், பெப்பர்காடை
பொன்னுசாமி ஹோட்டல், ராயபேட்டை. Special : நெத்திலி ப்ரை, சிக்கன் லாலிபாப்
தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ
தோசா கார்னர், சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு. Special : அனைத்து வித தோசைகள்
செல்வம் ஹோட்டல், சேலம் அப்சரா மேடு. Special : பரோட்டா சால்னா
ராணி டிபன் ஸ்டால், கரூர். Special : கொத்து பரோட்டா
தேவர் மெஸ், சுங்கராம வீதி, பாரீஸ். Special : பரோட்டா குருமா
மாருதி ஹோட்டல், சுசீந்திரம். Special : ஃபுல் மீல்ஸ்
டைமண்ட் டீ ஸ்டால், பழனி பஸ் ஸ்டாண்ட். Special : டீ
ராயல் புரோட்டாஸ், கரூர்-பள்ளபட்டி. Special : அனைத்து வித புரோட்டா
ஹோட்டல் சத்தார்ஸ், தஞ்சாவூர். Special : பிரியாணி
சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி
ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு
ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா
செல்லம்மாள் மண்பானை உணவகம், திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில். Special : ஃபுல் மீல்ஸ்
முத்துபிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : பரோட்டா 4 வகை சால்னா
தீன், தஞ்சாவூர். Special : சிக்கன் முர்தாபா
சார்மினார், ராயப்பேட்டை. Special : தந்தூரி சிக்கன்
கணேஷ் மெஸ், ஆண்டிபட்டி. Special : பூசணிப் பொரியல்
ஆனந்தாஸ் ஹோட்டல், ராஜபாளையம். Special : ஃபுல் மீல்ஸ்
சலாமத் ஹோட்டல், அண்ணாசாலை, சென்னை. Special : சுக்கா பரோட்டா
தங்கையா ஸ்வீட் ஸ்டால், திசையன்விளை. Special : மஸ்கோத் அல்வா
ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி. Special : ஆனியன் ஊத்தப்பம்
கதிரவன் ஹோட்டல், ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : காபி
ஆள் ரீம், திருவல்லிக்கேணி. Special : பிரியாணி
தாஸ் ஜிகர்தண்டா, பெரியகுளம் ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : ஜிகர்தண்டா
டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு
சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:
இளநீர் சர்பத் கடை, பெல் ஹோட்டல் எதிரில், மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு. Special : இளநீர் சர்பத்
ஸ்ரீ விநாயக ஸ்வீட் காரம், குருக்கத்தி. Special : எள்ளுருண்டை
அரசன் மெஸ் மண்பானை சமையல், திருநெல்வேலி, மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு 
ஸ்ரீ கிருஷ்ணபவன், கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை. Special :  அனைத்து வித தோசைகள்
நாயர் மெஸ், திருவல்லிக்கேணி. Special : மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல்
ஆந்திரா கரீ ஹோட்டல், தங்க ரீகல் தியேட்டர், மதுரை. Special : தட்டு இட்லி
அழகப்பா செட்டிநாடு மெஸ், GST மெயின்ரோடு, சானடோரியம், சென்னை. Special : குஸ்கா
அழகி பிரியாணி ஹோட்டல், ஒக்கேனக்கல் மெயின் ரோடு. Special : அன்லிமிடட் பிரியாணி
பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை. Special : பஃப் பரோட்டோ
ஜானகிராமன் சைவ உணவகம், திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே. Special : அனைத்து வித தோசைகள்
Jacob's Kitchen, காதர் நவாஸ் கான் ரோடு, கானாடுகாத்தான். Special : உப்புகறி, மண்பானை மீன் குழம்பு
பிரேமா மெஸ், தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : கானத்துவையல், எள்ளுத்துவையல்
அண்ணாமலை சைவ ஹோட்டல், நெல்லை காந்திமதி கோவில். Special : மதிய சாப்பாடு, பிரண்டை துவையல்
அஜித் மீன் ஹோட்டல், நாகர்கோவில். Special : ஃபுல் மீன் மீல்ஸ்
அக்பர் மெஸ், பெரியமேடு. Special : மட்டன் பிரியாணி
வெங்கடேஷ்வரா ஹோட்டல், அப்பத்தூர். Special : சமோசா
பரமக்குடி பரோட்டா, பரமக்குடி பஸ் ஸ்டான்ட் எதிரில். Special : சால்னா
JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்
ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்
சார்லஸ் ஹோட்டல், மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில். Special : பரோட்டா, 3 கூட்டு சால்னா
பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல், சின்னசேலம். Special : தோசை, நாலு வகை சட்னி
மொஹைதீன் பிரியாணி, பல்லாவரம். Special : பிரியாணி
போஜன், சூளைமேடு சிக்னல். Special : சோலா பூரி
ரிலாக்ஸ் காபி பார், திண்டுக்கல். Special : வடை, குருமா
பட்ஸ் ஹோட்டல் டீ, தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே. Special : Tea
ஹரிஷ் பேக்கரி உப்பு ரொட்டி, நாகூர். Special : உப்புரொட்டி, தம்ரூட்
சபரீஷ் ஹோட்டல், மதுரை சென்னை சில்க்ஸ் அருகே. Special : ஹைதரபாத் பிரியாணி
கேரளா மெஸ், திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து. Special : பரோட்டா வித் சில்லி
காந்தி கடை சால்னா, பரமக்குடி. Special : பரோட்டா :
குறிஞ்சி ஹோட்டல், இராம்நாட். Special : பரோட்டா, நெய் மீன் கறி
அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்
மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்
அல் ரீம் ஹோட்டல், திருவல்லிக்கணி. Special : ஸ்பெசல் பிரியாணி, ப்ரைடு ரைஸ்
புளியமரத்துக்கடை, ஶ்ரீவில்லிபுத்தூர். Special : ஸ்பெஷல் பால்கோவா
ஸ்ரீ அன்பு பவன், கோபி பஸ் நிலையம், கோபி. Special : ஃபுல் மீல்ஸ்
தனசேகர் சிக்கன் சென்டர், முத்துநாயக்கன்பட்டி. Special : சிக்கன்
தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா
செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன்
Aachi Chetinad Hotel ஹோட்டல், ஈரோடு டெலிபோன் எக்ஸ்‌சேன்ஜ். Special : மூளை பிரட்டல்
BL ரெஸ்டாரன்ட், கரூர். Special : காரசட்னி இட்லி
கண்ணன் ஹோட்டல், மதுரை புதூர் சர்ச். Special : மூளை ஃப்ரை
அம்மன் மெஸ், கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம் அருகில். Special : சைவம் அசைவம் உணவு
சுதா மெஸ், குமாரபாளையம். Special : அசைவம் வீட்டு சாப்பாடு :
பத்மா மெஸ், விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ் அருகில். Special : அனைத்து வித தோசைகள், ஃபுல் மீல்ஸ்
சுல்தான் பிரியாணி, சங்கரன்கோவில். Special :  பிரியாணி
கரம் மது கரம் ஸ்டால், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், கரூர். Special : Sweets
ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை
சிவா சில்லி, கரூர் செங்குந்தபுரம். Special : மீன், சில்லி சிக்கன், பிரியாணி
மிட்நைட் மசாலா ஹோட்டல், கோடம்பாக்கம். Special : லஞ்ச், டின்னெர்.
சுப்பையா இட்லி கடை, தஞ்சாவூர் JUNCTION. Special : இட்லி
கோபால்நாயுடு ஹோட்டல், இளம்பிள்ளை. Special : ஃபுல் மீல்ஸ்
ராவியத் ஸ்வீட் பேலஸ், வள்ளல் சீதக்காதிரோடு, கீழக்கரை. Special : ஸ்பெஷல் தொதல்
கற்பகம் ஹோட்டல், திருச்சி தேவர்ஹால் எதிர்புறம். Special : இட்லி, தோசை, சாம்பார்
ஸ்ரீபிரியா மெஸ், காரைக்குடி. Special : நாட்டுக்கோழி கிரேவி
ஹோட்டல் ராமன், சீர்காழி புத்தூர் சாலை. Special : மீன் வறுவல், இறா வறுவல்
வீட்டு இட்லி, மதுரை அலங்கார் தியேட்டர் அருகில். Special : வீட்டு இட்லி, ஃபுல் மீல்ஸ்
ஹோட்டல் அர்ச்சனா, மதுரை. Special : நண்டு தோசை :
கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு
முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு
செல்லமணி டிபன் கடை, தேனி. Special : 5 வகை சட்னி, பணியாரம்
செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், சிவகிரி. Special : ஐஸ்கிரீம்
அ1 மெஸ், கோவில்பட்டி. Special : அசைவ சாப்பாடு
இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி
திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்
மாரீஸ் ரெஸ்டாரண்ட், இரத்தினமங்கலம், வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு. Special : :ஃபுல் மீல்ஸ்
கண்ணன் ஹோட்டல், திருச்சி மத்திய பேருந்து நிலையம். Special : பாதம் பால்
தென்பனை, உளுந்தூர்பேட்டை. Special : இயற்கைமுறை குளிர்பானக் கடை
ராணி விலாஸ், செக்கானூரனி. Special : குடல் குழம்பு, குழி ஆம்லெட், ரத்த பொரியல்
வீட்டுச் சாப்பாடு, அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி, தஞ்சை – கும்பகோணம். Special : வீட்டுச் சாப்பாடு
ரோட்டு கடை, சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி. Special : சுக்கா கபாப், வடை கபாப், வடை வறுவல்
சேகர் கடை இட்லி, மராட்டியர் அரண்மனை அருகில், தஞ்சை. Special : இட்லி
பெங்களூர் AL BAK பிரியாணி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். Special : பிரியாணி
பாலன் உணவகம், கேணிக்கரை சந்திப்பு, இராமநாதபுரம். Special : விதம் விதமான தோசை
ஹோட்டல் சுவை, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட். Special : இட்லி, தோசை, பொங்கல் வடை, காபி
பார்டர் கடை, செங்கோட்டை. Special : பிரைடு சிக்கன்
அய்யரக்கா கடை, செங்கோட்டை. Special : தயிர்வடை
கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்
HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி
இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா
ரோஷன், திருச்சி-தஞ்சாவூர் ரோடு, காட்டூர். Special : தந்தூரி
டெல்லி ஸ்வீட்ஸ், கரூர். Special : சூடான சமோசா
மதுரை ஹரிஸ் மெஸ், சின்ன சொக்கிக்குளம். Special : மணக்கும் நெய் மீன் குழம்பு
ஹோட்டல் ந்யூ இம்ரான், கொடைக்கானல். Special : மட்டன் பிரியாணி
போஜனாலாயா, மகாலக்ஷ்மி ப்ளாசா, விழுப்புரம். Special : சாப்பாடு
சங்கர் சாட், அண்ணாநகர் சரவணபவன் பின்னால். Special : தஹி, பூரி மசாலா, கட்லட்,  சமோசா
SK சைவ-அசைவ உணவகம், பெங்களூரு விவேக் நகர். Special : சைவ அசைவ சாப்பாடு
UFM நம்ம வீட்டு சாப்பாட்டுக் கடை, பெருந்துறை. Special : கறி சோறு
அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை
ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம், T-நகர். Special : சாப்பாடு
ஹோட்டல் வெல்கம், நாயுடுபுரம், கொடைக்கானல். Special : பிரியாணி
கோபு ஐயங்கார் ஓட்டல், மதுரை மீனாக்ஷி கோவில். Special : தவலை வடை
ஹோட்டல் பிரபு, நாகர்கோவில். Special : அசைவம்
ஹோட்டல் விஜயதா, நாகர்கோவில். Special : அசைவம்
ஹோட்டல் அரிஸ்டோ, கொடைக்கானல். Special : டிபன், மீல்ஸ்
காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள் இருக்கும் ரெஸ்டாரண்ட், மதுரை. Special : சைவச் சாப்பாடு
மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர். Special : சைவச் சாப்பாடு
பாரதி மெஸ், திருவல்லிக்கேணி. Special : கேப்பைக்  கூழ், முளை கட்டிய தாணியங்கள்
பஞ்சு பரோட்டா, பெருந்துறை. Special : பரோட்டா, சிக்கன் பிரியாணி
மண்சட்டி சமையல், சங்ககிரி டோல்கேட் அருகே. Special : ஃபுல் மீல்ஸ்
முருகபவன், தொப்பூர். Special : விதம் விதமான தோசை
தாஜ் ஹோட்டல், மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு, பரமக்குடி. Special : கறிக்கஞ்சி
ஏஒன்மெஸ், கோவில்பட்டி. Special : சிக்கன் பிரியாணி,  லாலிபாப், தலைக்கறி
பசுமை உணவகம், சேலையூர். Special : கருப்பட்டி காஃபி
NEW MADRAS CAFÉ, சந்தோம். Special : மாலையில் சம்சா, சாஸ்
கருப்பையா நாடார் மெஸ், சாத்தூர்.  Special : கரண்டி ஆம்லெட், டிங் டாங்
துளசி பிரியாணி, திண்டுக்கல். Special : நாட்டுகோழி பிரியாணி, புட்டு பரோட்டா
பார்த்தசாரதி விலாஸ், திருச்சி திருவானைக்கோவில். Special : நெய் தோசை
விஞ்சை விலாஸ், நெல்லை டவுனில் ஆர்ச் பக்கம். Special : விதம் விதமான தோசை
வெங்கடேச பவன், ஸ்ரீரங்கம் கோயில் அருகில். Special : சாம்பார் வடை, கீரை வடை
மூர்த்தி கபே, சிதம்பரம். Special : கடாய் சிக்கன்:
ஆண்டவர் அல்வா கடை, திருவையாறு. Special : அல்வா
சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை, கீழஈரால். Special : சேவு, சீனிக் கருப்பட்டி மீட்டாய்
மங்கள விலாஸ், சேலம். Special : மட்டன் சுக்கா
விவேகானந்தா, சேலம். Special : நாட்டு கோழி நெஞ்சு பிரை, முட்டைதோசை
செல்வி மெஸ், சேலம். Special : கட்லா மீன் பிரை, மட்டன் பிரியாணி
சேலம் RR பிரியாணி, சென்னை மதுர வாயல், சென்னை. Special : பிரியாணி
பராசக்தி நாட்டு கோழி பிரியாணி, சேலம் செவ்வாய்ப்பேட்டை. Special : நாட்டுக் கோழி பிரியாணி, வெங்காய சில்லி சிக்கன்
புத்தூர் ஜெயராமன் கடை, சீர்காழி. Special : அசைவ உணவு, கெட்டித் தயிர், இறால், சிக்கன்
புத்தூர் ஜெயராமன் கடை, சிதம்பரம். Special : அசைவ உணவு
ஹோம் இட்லி கடை, ஈரோடு collector ஆபீஸ் அருகே. Special : ரவா இட்லி, விதம் விதமான தோசை
சின்னப் பையன் கடை, சேலம் குகை. Special : மட்டன் வறுவல், ஈரல் ஃப்ரை
கந்தவிலாஸ் பரோட்டா, சேலம் குகை.  Special : சூடான பரோட்டா, கோழிக்குழம்பு
பாவா கடை, அரிசிபாளையம். Special : விதம் விதமான தோசை
வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால், ஶ்ரீவில்லிபுத்தூர். Special : பால்கோவா
தொட்டிபட்டியார் ஹோட்டல், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : பெஸ்ட் சிக்கன், மிளகு கிரேவி
சந்திரன் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்
மயிலை கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். Special : விதம் விதமான தோசை
சுல்தான் பிரியாணி, சங்கரன்கோயில், கழுகுமலை ரோட்டில். Special : பிரியாணி
கரீம் மெஸ் பிரியாணி, சென்னை பெரியமேடு. Special : பிரியாணி
பாட்ஷா பிரியாணி சென்டர், சத்திரம், திருச்சி. Special : பிரியாணி
முத்துப்பிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : முட்டைமாஸ் பரோட்டா
குமார் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : விரால்மீன் வறுவல், அயிரை மீன்
அரசன் மெஸ் மண்பானை சமையல், நெல்லை மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு:
சுகுணா விலாஸ், திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : முயல் ரோஸ்ட்
ஹோட்டல் ட்ராபிக் ஜாம், திருச்சி மலைக்கோட்டை, பரோட்டா, மூனு வித க்ரேவி
பார்த்தசாரதி தோசை, திருச்சி திருவானைக்கோவில். Special : நெய்தோசை, விதம் விதமான தோசை
ஸ்டார் பிரியாணி, வாலாஜா டோல்கேட், ஆற்காடு. Special : பிரியாணி
டெல்லி வாலா, மேலக் கோபுர வாசல், மதுரை. Special : சப்பாத்தி, பூரி, இனிப்பு, கார வகைகள்
மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை. Special : சைவ உணவு
மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை. Special : உணவு வகைகள்
காந்திராம்ஸ் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : தயிர் வடை, சாம்பார் வடை
செந்தில் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா
இம்பாலா ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி
புகாரி, திருச்சி. Special : பிரியாணி
குறிஞ்சி ஹோட்டல், திருச்சி. Special : எள் மிளகாய்ப்பொடி, பூண்டு மிளகாய்ப்பொடி,
கிராண்ட் ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி
கொளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி
இனாம்குளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி
அரிஸ்டோ ஹோட்டல், திருச்சி. Special : கைமா சமோசா
ஆர்ய பவன், கிருஷ்ணகிரி. Special : பாதுஷா, பால்கோவா
கதிரவன் மெஸ், தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : சைவ சாப்பாடு
ரகுமானியா ஹோட்டல், விருத்தாசலம். Special : வான் கோழி பிரியாணி
அர்ச்சனா ஹோட்டல், விருத்தாசலம். Special : சைவச் சாப்பாடு
ஹோட்டல் சற்குரு, புதுச்சேரி. Special : சைவ உணவு
ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி, E.C.R. இந்திரா காந்தி சிலை, புதுச்சேரி. Special : அசைவம், மதிய உணவு
ஹோட்டல் மனோ, சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா
லின்ஸ் ஹோட்டல், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா
நொண்டிக்கடை, கன்னியாகுமரி. Special : மீன் குழம்பு
ஹோட்டல் நாசர், மார்த்தாண்டம். Special : சிக்கன் ஃப்ரை
ஹோட்டல் ஜூப்ளி, வடசேரி, நாகர்கோவில். Special : கொத்துக் கோழி
கிருஷ்ணா விலாஸ், காஞ்சிபுரம். Special : சாம்பார் இட்லி, விதம் விதமான தோசை
ராயல் ஹோட்டல், அபிராமி தியேட்டர் எதிரில், ஈரோடு. Special : எண்ணையில் பொரித்த புரோட்டா
கண்ணதாசன் மெஸ், தி-நகர் நடேசன் பார்க், சென்னை. Special : கொத்து பரோட்டா
சந்திரன் மெஸ், தல்லாகுளம். Special : நெய்மீன் வறுவல், அயிரைமீன் குழம்பு
குமார் மெஸ், தல்லாகுளம். Special : அயிரை மீன் குழம்பு, விரால்மீன் வறுவல்
அம்மா மெஸ், தல்லாகுளம். Special : நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல், மட்டன் கோலா
அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி. Special : மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட்
அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண். Special : நெய்மீன் வறுவல், இறால்மீன் வறுவல்
அம்சவல்லி ஹோட்டல், கீழவாசல். Special : மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை, தல்லாகுளம். Special : புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ், பெரியார் சிலை அருகில், தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப், தல்லாகுளம். Special : மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி, தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி
கோனார் மெஸ், சிம்மக்கல். Special : கறி தோசை, வெங்காய சட்னி, விதம் விதமான தோசை
குமார் மெஸ், தல்லாகுளம், மாட்டுத்தாவணி. Special : இட்லி, முட்டை வழியல்
ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம். Special : பரோட்டா, சுவரொட்டி குடல் வறுவல்
அஜ்மீர் மஹால், கோரிப்பாளையம். Special : முட்டை பரோட்டா
சிங்கம் பரோட்டா கடை, பீபீ குளம். Special : முழுக்கோழி வறுவல்
ஜானகிராமன் ஹோட்டல், திலகர் திடல். Special : மட்டன் சுக்கா
சுதா பை நைட், ரிசர்வ் லைன். Special : முட்டை பரோட்டா
கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்
பஞ்சாபி தாபா, தல்லாகுளம். Special : பட்டர் நான், தந்தூரி சிக்கன்.
பரோட்டா கடை, ஆவின் சிக்னல், மதுரை. Special : பரோட்டா
ஆர்ய பவன், மதுரை. மசாலா பால், லஸ்ஸி (இரவு)
அம்ஸவல்லி, மதுரை. Special : பிரியாணி, ஆப்பிள் பால்
ஜாஃபர் ஹோட்டல், மதுரை. Special : பிரியாணி
ஹோட்டல் தமிழ்நாடு, காமராஜர் சாலை, மதுரை. Special : கொத்து புரோட்டா
ஹோட்டல் அருளனாந்தம், மதுரை. Special : மட்டன் சுக்கா, அயிரை மீன்
ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட், மதுரை. Special : இட்லி
ஸன்கு வாலா, மதுரை. Special : ரொட்டி, மாம்பழ ஜூஸ்
குமார் மெஸ், மதுரை. Special : போன் லெஸ் நண்டு
கோபு ஐயங்கார் ஹோட்டல், மதுரை. Special : வெள்ளை ஆப்பம், காரத் துவையல்
வின்சென்ட் பேக்கரி, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : இஞ்சி பிஸ்கட்
முதலியார் கடை, கோரிப்பாளையம், மதுரை. Special : இட்லி, காரச் சட்னி
குரு பிரசாத் ஹோட்டல், மதுரை. Special : சில்லி பரோட்டா
கணேஷ் மெஸ், மதுரை. Special : சோயா குழம்பு
புதூர் மீனாக்ஷி பவன், மதுரை. Special : வறுத்த சிக்கன் லெக் பீஸ்
ஹோட்டல் அபிராமி, சிம்மக்கல், மதுரை. Special : பூரி, கிழங்கு மசாலா
ஸ்ரீ ராம் மெஸ், மதுரை. Special : அன் லிமிட்ட் மீல்ஸ்
போஸ் கடை, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை
கணேஷ் மெஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி ரோடு, மதுரை. Special : புல் மீல்ஸ்
மாடர்ன் ரெஸ்டாரென்ட், மதுரை. Special : தோசை, வட இந்திய உணவு வகைகள்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை. Special : நெய்ப் பொங்கல், அல்வா, விதம் விதமான தோசை
முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை
லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, திருநெல்வேலி. Special : அல்வா
சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : உழுந்து வடை
ஐயப்பா தோசை கடை, பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை. Special : விதம் விதமான தோசை
விசாலம் காபி, தல்லாகுளம், மதுரை. Special : காபி
இளநீர் சர்பத், மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே, மதுரை. Special : இளநீர் சர்பத்
பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண், மதுரை. Special : ஜில்ஜில் ஜிகர்தண்டா
PNR சர்பத்கடை, பழனி. Special : சர்பத்
செட்டியார் டீக்கடை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில். Special : உளுந்தவடை, தேங்காய் சட்னி
வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா
சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை
அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை
கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.
பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி
நாட்டு கோட்டை செட்டி நாடு ஹோட்டல், இராமநாதபுரம். Special : மட்டன் பிரியாணி
பாலாஜி பவன், யூனியன் க்ளப், திண்டுக்கல். Special : பிடி கொழுக்கட்டை
பாலாஜி ஸ்நாக்ஸ், பாரதிநகர் பஸ் ஸ்டாப், இராமநாதபுரம். Special : டீ, ஸ்நாக்ஸ்
ஹோட்டல் மரண விலாஸ், தெப்பக்குளம், மதுரை. Special : அன்லிமிடெட் குஸ்கா 20 ரூபாய்
ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு
கணேஷ் செட்டிநாடு ஹோட்டல், ராயப்பேட்டை, சென்னை. Special : அன்லிமிட் சாப்பாடு
கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை
அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல், மந்தைவெளி பஸ் ஸ்டான்ட், மந்தைவெளி. Special : இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி. காசி வினாயகா மெஸ். Special : பருப்பு நெய், நெய் ஸ்பெஷல், பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொடி
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி
வள்ளி மெஸ், நெசவாளர் காலனி மெயின் ரோடு, தர்மபுரி. Special : கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன், முட்டை சட்டினி
பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில். Special : இறால், மீன், கோழி, காடை
சிவசாய் மெஸ், நாரதகான சபாவுக்கு எதிரே, டிடிகே சாலை, சென்னை. Special : சைவ உணவு.
தாபா எக்ஸ்பிரஸி, செனடாஃப் சாலை, சென்னை. Special : பஞ்சாபி மதிய உணவு
அம்சவல்லி பவன், கீழவெளி வீதி, மதுரை. Special : மட்டன் பிரியாணி
ஸ்ரீராம் மெஸ், காக்கா தோப்பு, மதுரை. Special : சைவம்
ஹரிவிலாஸ், மேலமாசி வீதி, மதுரை. Special : கத்திரிக்காய் பஜ்ஜி, புளியோதரை, கேசரி, காரவடை
ஒரிஜினல் நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை, மதுரை. Special : நெய் வழியும்   அல்வா
பாம்பே அல்வா ஸ்டால், கீழ ஆவணி மூல வீதி, மதுரை. Special : நெய்யில் மிதக்கும் சூடான அல்வா
அன்னபூரணி பொங்கல் கடை, முனிச்சாலை நாற்சந்தி, மதுரை. Special : புளியோதரை, கொண்டைக் கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்
சாரதா மெஸ், பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை, திருவல்லிக்கேணி. Special : மதுரை அயிரை மீன் குழம்பு
அம்பாள் மெஸ், திருவல்லிக்கேணி. Special : ஸ்பெஷல் மசாலா தோசை
பெஸ்ட் கிருஷ்ண பவன், திருமலை நாயக்கர் மகாலின் எதிரே, மதுரை. Special : இட்லி, -பொங்கல், தோசை

இதில் விட்டுப்போனத சொல்லுங்க சேர்த்துக்குவோம்...